போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் 6 மணி நேரம் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வரும் 30ம் தேதி போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சுமார் 6 மணி நேரம், நாட்டின் முன் உள்ள பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிவார். அனைத்து கமாண்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டம் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை போபாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முப்படைகளின் தலைவர் அனில் சவுகானும் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே பாதுகாப்புத் … Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

டெல்லி: ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் வைத்து வருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்கமுடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

குடிமைப் பணிகளுக்கு ஆட்கள் நியமனம் – தேர்வு நடைமுறையை விரைந்து முடிக்க நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்

புதுடெல்லி: குடிமைப் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கு 15 மாதங்கள் ஆகிறது. இது நீண்ட நெடிய தேர்வு நடைமுறையாக உள்ளது. இதனால், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படுகிறது. அத்துடன் குடிமைப் பணி தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மனதளவிலும், உடல்அளவிலும் சோர்வை சந்திக்கின்றனர். இதனால், அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வு, சுழற்சி நடைமுறைகளின் காலத்தை கணிசமாக குறைக்குமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் (யுபிஎஸ்சி) … Read more

XBB.1.16 கொரோனா பாதிப்பு; 210 நாட்களில் முதல்முறை… இருந்தாலும் ஒரு நம்பிக்கை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று புதிதாக 1,890 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 210 நாட்களில் இல்லாத அளவிற்கு உச்சமாகும். அதிலும் வாராந்திர பாசிடிவ் விகிதத்தை கருத்தில் கொண்டால் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, மார்ச் 19-25 காலகட்டத்தில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8,781ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதற்கு முந்தைய வாரம் 4,929ஆக இருந்தது கவனிக்கத்தக்கது. இவ்வாறு கடந்த 6 வாரங்களாக … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மேலும் 9 பேர் உயிரிழப்பு.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் களமிறங்கியது. கடந்த மார்ச் 22ம் தேதி டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள … Read more

ராகுல் தகுதிநீக்கம் | காங்கிரஸ் எம்.பி.,க்கள் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் ஆலோசனை

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் இன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணியவில் நாடாளுமன்றத்தில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். முன்னதாக கடந்த வாரம் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியவில் … Read more

நாளை தொடங்குகிறது ஜி 20 மாநாடு – ரூ.157 கோடி செலவில் சாலைகள் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை ஜி 20 மாநாடு தொடங்குகிறது. இதையொட்டி நகரை அழகுபடுத்த 157 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள், சாலைகள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன. வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் 200 விருந்தினர்களை தங்க வைப்பது, அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்வது, பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆந்திர அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினர். மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் அனைத்து … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்: டெல்லி காந்தி நினைவிடத்தில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு

புதுடெல்லி: ராகுல் காந்தியை மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். டெல்லி ராஜ்காட்டில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். குஜராத்தில் போராட வந்த காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் குடும்ப பெயரை, … Read more

வெளிநாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் அதிக காலம் தங்கியிருந்தால் ஒழுங்கு நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுகளில் தங்கி பணியாற்ற அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அதனை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் தங்கி பணியாற்றும் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட காலத்தையும் … Read more

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார்!!

திருவனந்தபுரம் : மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் பல்வேறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னசென்ட். தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கேராளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்பி, பாடகர், தயாரிப்பாளர் என் பன்முக திறமை கொண்ட இன்னசென்ட் மலையாள நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு … Read more