பான் மசாலா,சிகரெட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயம்

புதுடெல்லி: பான் மசாலா மற்றும் சிகரெட்கள் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமையன்று  நிதி மசோதா 2023 ஐ சில திருத்தங்களுடன்  ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றியது. இந்த திருத்தங்களின்படி பான் மசாலா, சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கு  அதன் சில்லரை விலை விற்பனையில் அதிகபட்ச ஜிஎஸ்டி இழப்பீட்டு  வரி விதிக்கப்பட உள்ளது.  இந்த திருத்தத்தின்படி பான்மசாலாவுக்கான சில்லரை விலை ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக 51 சதவீதம் வரை … Read more

எந்த தடையும் மக்களை கட்டுப்படுத்தாது பாகிஸ்தானை சீரமைக்க பெரிய அறுவை சிகிச்சை தேவை: இம்ரான் கான் ஆவேசம்

லாகூர்: பாகிஸ்தான்-தெஹ்ரி-இ-இன்சாப் கட்சி தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வழக்குகளில் அவரை கைது செய்ய பாகிஸ்தான் போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், 9 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்நிலையில், லாகூரில் உள்ள மினார்-இ  பூங்காவில் பேரணிக்கு இம்ரான் கான் கட்சி அழைப்பு விடுததிருந்தது. இதற்கு தடை விதித்த அரசு இணையதள சேவைகளை துண்டித்ததுடன், பேரணி நடைபெறும் இடத்துக்கு செல்லும் சாலைகளில் … Read more

பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய கட்சிகளை ஆதரிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ: ‘பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய கட்சிகளை தேசிய கட்சிகள் ஆதரிக்க வேண்டும்’ என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். உபி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரத்தில், காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு சமாஜ்வாடி ஆதரவு தெரிவிக்குமா, ராகுலுக்கு அனுதாபம் காட்டுமா என்பதல்ல கேள்வி. நாட்டின் ஜனநாயகமும் அரசியலமைப்பும் காப்பாற்றப்படுமா இல்லையா என்பதுதான் இப்போதைய பிரச்னை. நாங்கள் எந்த கட்சிக்கும் அனுதாபம் … Read more

கர்நாடகா தேர்தல்: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இருக்கா.. இல்லையா.? – அமித்ஷா உறுதி.!

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடகா தேர்தல் களம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்தநிலையில் கர்நாடகாவில் வெற்றியை தீர்மானிக்கும் ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களின் வாக்குகளை கவர பாஜக தலைமையிலான அரசு முக்கிய நகர்வு ஒன்றை செய்தது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான … Read more

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பிரம்மாண்ட ‘எல்.வி.எம்.3-எம்.3’ ராக்கெட், 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது இந்த எல்.வி.எம்3 – எம்3 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் ‘எல்.வி.எம்3-எம்3’ என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட் ‘ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3’ என்று அழைக்கப்பட்டது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தபட்டு உள்ளது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் … Read more

அதிர்ச்சி! பள்ளியில் காண்டம், மதுபானம்… மாணவிகளின் வகுப்பு அருகே படுக்கையறை

மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில், அதிபரின் அறையில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அப்பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த குழு பள்ளியில் படுக்கைகள், மதுபானம், ஆணுறைகள், முட்டைகள் அடுக்கும் தட்டுகள்  மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தது. “காஸ் சிலிண்டர் மற்றும் மது பாட்டில்கள் உட்பட பிற … Read more

உலக மகளிர் குத்துச்சண்டை – இந்தியாவிற்கு மேலும் 2 தங்கப்பதக்கம்

டெல்லியில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கங்களை வென்றது. 50 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில் வியட்நாமின் குயன் தி தாமை எதிர்கொண்ட இந்தியாவின் நிகத் ஜரீன், 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்று தங்கம் வென்றார். 75 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டியில், ஆஸ்திரேலியாவின் கைத்லின் பார்கரை 5க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் லாவ்லினா தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம், உலக மகளிர் குத்துச்சண்டையில் இந்தியா மொத்தம் … Read more

டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

டெல்லி: டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ள நிலையில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி காந்திசமாதி முன்பாக மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ்  தலைவர்கள் உண்ணாவிரதம் செய்யவுள்ளனர். டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியலமைப்புச்சட்டத்தில் இடமில்லை – அமித்ஷா

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த மாநில அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவில், சிறுபான்மையினரை சேர்க்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவின் பிதார் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பிரிவினை அரசியலை மையப்படுத்தி, சிறுபான்மையினருக்கு முந்தைய காங்கிரஸ் அரசு … Read more

உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம்: அடுத்தாண்டு மக்களவை தேர்தலால் கூடுதல் நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் பெரும்பாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பராமரிக்கவும், கொள்ளுமுதல் செய்யவும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மிகக் குறைந்தளவே தேர்தல் ஆணையம் பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-2023ம் நிதி ஆண்டில் ஜனவரி 31ம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் … Read more