திருப்பதி டூ திருமலை: காலில் கட்டி கஞ்சா கடத்திய TTD ஊழியர்… ஆடிப் போன போலீஸ்!

ஆந்திர மாநிலத்தில் கஞ்சா பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, பயிரிடுதல், கடத்தல், உட்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு கஞ்சா கடத்தலில் மோசடிக்காரர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த சம்பவம் ஏழுமலையான் பக்தர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ​தேவஸ்தான ஊழியர்ஏனெனில் திருமலைக்கு கஞ்சா கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருப்பதியில் உள்ள அலிபிரி சப்தகிரியில் சந்தேகப்படும் வகையில் … Read more

அம்ரித்பால் சிங்கின் சொந்த கிராமத்தில் ஆயுதப் புரட்சிக்கான பயிற்சி.. கைதான அம்ரித்பாலின் பாதுகாவலர் கோர்க்கா பாபாவிடம் விசாரணை!

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் ஒருவாரமாகத் தேடி வரும் நிலையில், அவரது பாதுகாவலர் கோர்க்கா பாபா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அம்ரித்பாலின் சொந்த கிராமத்தில் இளைஞர்களுக்கு ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டதும், ஆயுதங்கள் தாராளமாக புழங்குவதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அம்ரித்பால் டெல்லியில் நடமாடுவதாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரிய வந்துள்ளதையடுத்து போலீசார் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர். அம்ரித்பால் நேபாளத்துக்குத் தப்பிவிடாமல் இருக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Source … Read more

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது 'எல்.வி.எம்3-எம்3' ராக்கெட்!

ஆந்திர பிரதேசம்: 36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு ‘எல்.வி.எம்3-எம்3’ ராக்கெட் விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. ராக்கெட்டில் உள்ள செயற்கைகோள்களின் மொத்த எடை 5.8 டன் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

5,805 கிலோ எடையுடன் விண்ணில் ஏவப்படும் 36 செயற்கைகோள்கள்! உலகத்தின் பார்வை இஸ்ரோ பக்கம்!

இஸ்ரோவின் GSLV Mark 3 (எல்.வி.எம்-3) ராக்கெட், 36 தொலை தொடர்பு செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 6ஆவது GSLV Mark 3 வகை விண்கலம் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள், வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இணைந்தது. … Read more

ராகுல் தகுதி இழப்புக்கு அதானி விவகாரம் காரணம் அல்ல – ரவி சங்கர் பிரசாத் விளக்கம்

புதுடெல்லி: மக்களவைச் செயலகம் தகுதி இழப்பு செய்தது குறித்து நேற்று பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘‘மக்களவையில் எனது அடுத்த பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பயந்துவிட்டார். அதனால் நான் தகுதி இழப்பு செய்யப்பட்டேன்’’ என கூறினார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: அதானி குழுமத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியதால்தான், மக்களவையில் இருந்து என்னை தகுதி இழப்பு செய்துள்ளனர் என ராகுல் காந்தி … Read more

ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய ஊழல் சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி ஆஜர்: சகோதரியிடமும் விசாரணை

புதுடெல்லி: பீகாரில் ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரியும் எம்பியுமான மிசா பாரதி ஆகியோர் நேற்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக ஏராளமானோரிடம் நிலத்தை அன்பளிப்பாகவும்,குறைந்த விலைக்கு பெற்றதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் லாலுவின் இளைய மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீதும் சிபிஐ கடந்த ஆண்டு … Read more

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு முக்கிய உத்தரவு..!!

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,590 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி அதிகரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர், … Read more

வாரணாசியை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி – கலெக்டர் எஸ்.ராஜலிங்கத்தின் புதிய திட்டத்திற்கு வரவேற்பு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்ற அம்மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் முயற்சி மேற் கொண்டுள்ளார். அவரது திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலால் புகழ்பெற்று விளங்கும் வாரணாசிக்கு அன்றாடம் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கங்கை கரை, கோயில்கள், முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட பல இடங்களில், யாசகர்களால் யாத்ரீகர்களுக்கு தொல்லை ஏற்படுகிறது. இதனை கூர்ந்து கவனித்த தமிழரான மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம், … Read more

மீண்டும் அதிகரிக்கும் தொற்று நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11ல் கொரோனா தடுப்பு ஒத்திகை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக தொற்றின் தாக்கம் குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. … Read more

மனைவியை கொலை செய்து உடலை மறைத்து நாடகமாடிய கணவன்..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியை வட்சமா (27). இவரது கணவர் விஜேஷ். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுபழக்கத்திற்கு அடிமையான விஜேஷ் அவ்வப்போது மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி வட்சமாவை துன்புறுத்தியுள்ளார். கடுமையான வார்த்தைகளை பேசியும், அவரை தாக்கியும் துன்புறுத்தியுள்ளார். இதனிடையே, கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு சென்ற மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று வட்சமாவின் உறவினர்களுடம் விஜேஷ் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வட்சமாவின் உறவினர்கள் … Read more