ராகுல் காந்தி தகுதி நீக்கம் | “சர்வாதிகாரம், ஜனநாயகப் படுகொலை, வரலாற்றின் கரும்புள்ளி” – எதிர்க்கட்சியினரின் எதிர்வினைகள்

புதுடெல்லி: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி இன்று (மார்ச்.24) எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிட்டு எம்.பி.யானார். இந்நிலையில், ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. … Read more

சட்டத்திற்கு மேலானவரா ராகுல் காந்தி.? – ஒன்றிய அமைச்சர் கேள்வி.!

சட்டத்திற்கு மேலானவராக ராகுல் காந்தி தன்னை கருதிக் கொள்வதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி சர்ச்சை காங்கிரஸ் கட்சியின் துடிப்பான தலைவர் ராகுல் காந்தியை சுற்றி எப்போதும் பரபரப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என அவர் இங்கிலாந்தில் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர் இந்தியா வந்ததும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச அனுமதி … Read more

நாட்டாமை… தீர்ப்பை மாத்தி சொல்லு! ராகுல் காந்தியின் பதவி பறிப்பும் சட்ட விளக்கமும்!

நியூடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதாவது, தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது.  ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டாண்டு கால தண்டனை விதிக்கப்பட்டதால்,  காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. நீதிமன்ற … Read more

ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி

டெல்லி: ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெரிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் … Read more

கர்நாடக எம்எல்ஏ.க்களில் 95%-க்கு மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள்: ஏடிஆர் அறிக்கை

பெங்களூரு: கர்நாடகா எம்எல்ஏ.க்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள், 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என அசோஷியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஆர் என்ற இந்த அமைப்பு தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் நிலவரம், வெற்றி வாய்ப்பு, எம்எல்ஏக்கள் கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, கிரிமினல் வழக்கு பின்னணி ஆகியன பற்றிய தகவல்களைப் பகிரும். அந்த வகையில் விரைவில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் பற்றி … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: ஏன் இவ்ளோ அவசரம்? இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!

வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருந்தவர் ராகுல் காந்தி. கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதற்கான பிரச்சாரத்தில் தான் பேசியது தனக்கே வினையாக வந்து முடியும் என நினைத்திருக்க மாட்டார். பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் திடீரென இப்படி ஒரு அதிரடி நடந்துள்ளது. மோடி அவதூறு பேச்சு ”அதெப்படி மோசடி பேர் வழிகள் அனைவரும் மோடி என்ற பெயரை தங்கள் பின்னால் வைத்திருக்கின்றனர்?” எனப் பேசி … Read more

“2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும்..” – பிரதமர் மோடி..!

2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக,  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஒரே உலகம் காசநோய் மாநாட்டில், காசநோயற்ற பஞ்சாயத்துகளை உருவாக்கும் முன்னெடுப்பு பணிகளை, பிரதமர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 2050ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிக்க உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த இலக்கை இந்தியா அடைய வேண்டும் என்றும், அதற்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் … Read more

அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளது: காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி பேட்டி

டெல்லி: அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். நாட்டில் அச்ச உணர்வை உருவாக்க பாஜக அரசு முயற்சி செய்வதாகவும். ராகுல் காந்தி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட நடவடிக்கை என அவர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.  

அவதூறு வழக்கு எதிரொலி: ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு

அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி?” எனப் … Read more

சிறை தண்டனை விதிப்பு எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் … Read more