நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு நிலவரம், பொது சுகாதார முன்னேற்பாடுகள் குறித்தும், கொரோனா பரவல் 0.7%-லிருந்து 1.9% ஆக அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர்.   

டெல்லியில் இங்கிலாந்து தூதரகம் முன் போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றம் | பதிலுக்குப் பதிலா?

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளன. பதிலுக்குப் பதில் என்ற இந்தியாவின் எதிர் நடவடிக்கையா இது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் பஞ்சாபில் உள்ள அம்ரித் பால் என்ற பிரிவினைவாத நபரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீக்கியர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய சீக்கியர்கள், அங்கிருந்த … Read more

டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட 'மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்' சுவரொட்டிகள்

AAP vs BJP: பாஜக தலைமையகம் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாய் மார்க் உட்பட டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான ‘மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சாவோ’ (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே புதிய அரசியல் போர் வெடித்துள்ளது. காவல்துறை இந்த வழக்கில் 100 எஃப்ஐஆர்களை பதிவு செய்து 6 பேரைக் கைது செய்துள்ளது. டெல்லி காவல்துறை கைது நடவடிக்கையை கண்டித்து “இது உச்சப்பட்ச சர்வாதிகாரம்” என ஆளும் … Read more

ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட பாரம்பரிய தானிய உணவுகள் தற்போது மீண்டும் வழங்கப்பட உள்ளது. 2023 சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுதானிய நுகர்வை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.   

இந்தியாவில் 1,000-ஐ கடந்த அன்றாட கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,134 பேருக்கு தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழை) ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் கட்டுப்பாடுகள்? பிரதமர் மோடி ஆலோசனை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். அதுவும் கொரோனா இரண்டாவது அலையில் பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு பலரது வாழ்வை புரட்டி போட்டது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு ஆண்டுகள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகள் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, கடைகளுக்கு கட்டுப்பாடு என கெடுபிடிகள் நீடித்தன. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து வெளியே … Read more

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரம், பொது சுகாதார முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் 0.7%-லிருந்து 1.9%ஆக அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 7,026 பேர் கொரோனாவுக்கு … Read more

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்: 6 பேர் கைது; டெல்லி போலீஸார் தீவிர விசாரணை

புதுடெல்லி: தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக,100 எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள டெல்லி போலீஸார்,அது தொடர்பாக 6 பேரைக் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அந்த போஸ்டர்களில்,”மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சோ” (மோடியை அகற்றி நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக, சிறப்பு காவல் ஆணையர் தீபேந்திர பதாக் கூறுகையில்,”நகர் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்பும் போஸ்டர்கள் ஒட்டியது … Read more

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ள நிலையில் உயர்மட்ட ஆலோசனையை நடத்துகிறார்.

டெல்லி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட்

டெல்லி: டெல்லி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்தார். டெல்லி நிதிநிலை அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டமன்றத்தில் தாக்கலானது.