அதானி, ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் – 7-வது நாளாக அமளியால் நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: தொழிலதிபர் அதானி, ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுன்றத்தின் 2 அவைகளிலும் 7-வது நாளாக நேற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை வரை (மார்ச் 23) வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தொழிலதிபர் அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த … Read more

அதிகரிக்கும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

Coronavirus Cases In India: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,134 பேருக்கு புதிதாக கோவிட் -19 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.  புதிய தொற்றுடன் தினசரி கொரோனா பரவல் விகிதம் 1.09 சதவீதமாகவும், வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 0.98 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.  நாட்டில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரிப்புக்கு மத்தியில், கடந்த சில … Read more

டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட்

டெல்லி: டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி மாநில நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) நேற்று ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், சில காரணங்களுக்காக ஒன்றிய … Read more

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங் தப்பிச் சென்றது டோல்கேட் கேமராவில் பதிவு

சண்டிகர்: பஞ்சாப் போலீஸாரால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங், வாகனங்களை மாற்றியும், உடைகளை மாற்றியும் டோல்கேட்-ஐ கடந்து சென்றது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. பஞ்சாப்பில் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் மீண்டும் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கடந்த 4 நாட்களாக தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 120-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ள … Read more

மகளிர் தின கலை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உற்சாக நடனம்!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உற்சாகமாக நடனமாடினார். மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு உரையாற்றினார். இறுதியில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அப்போது அங்கு நடனமாடியவர்களுடன் இணைந்து ஸ்மிருதி இரானியும் நடனமாடினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: Source : … Read more

டெல்லி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் – இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட்

புதுடெல்லி: டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு பதிலாக நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. இதனிடையே டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த … Read more

மேகாலயா சட்டப்பேரவையில் ஆளுநர் இந்தியில் உரையாற்றியதற்கு மக்கள் குரல் கட்சி (VPP) எம்.எல்.ஏ எதிர்ப்பு

ஷில்லாங்: ஆங்கிலத்தை அலுவல் மொழியாக கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் ஆளுநர் இந்தியில் உரை; விபிபி கட்சி எம்.எல்.ஏ அர்டெண்ட் மில்லர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேகாலயா இந்தி பேசும் மாநிலம் அல்ல, அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்படும் போதுதான், மக்களும், தலைவர்களும் முடிவு செய்து தனி மாநிலம் கண்டோம், எங்களுக்கு புரியும் மொழியில் ஆளுநர் பேச வேண்டும் என ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விபிபி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். மேகாலயா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை பெரும் … Read more

புதுச்சேரி: அடுக்கடுக்காக கேள்வியெழுப்பிய பள்ளி மாணவர்கள் – அசராமல் பதிலளித்த அமைச்சர்

புதுச்சேரியில் அடுக்கடுக்காக பள்ளி மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம். அசராமல் பதிலளித்தார். புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நடவடிக்கைகளை பள்ளி மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பேரவை மாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அமர்ந்து பார்க்க நாள்தோறும் அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு உள்துறை … Read more

கடந்த 2 ஆண்டுகளில் உ.பி.யைச் சேர்ந்த 64 ரவுடிகளின் ரூ.2,000 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

லக்னோ: உத்தர பிரதேச சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாத் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் காஜியா பாத் முதல் காஜிப்பூர் வரை யாராவது குற்றச் செயல்களிலோ அல்லது சட்டத்துக்கு விரோதமாகவோ செயல்பட்டால் அதை உ.பி போலீஸ் பொறுத்துக் கொள்வதில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ரவுடி கும்பலை ஒழிக்க மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரபல ரவுடிகள் விஜய் மிஸ்ரா, சுசில் மூச், பதான் … Read more

டெல்லி மற்றும் தலைநகரை ஒட்டிய பகுதிகளில் இரவு 10.20 மணியளவில் கடுமையான நிலஅதிர்வு

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பாகிஸ்தான், தஜிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், வட இந்திய மாநில ங்களான டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு … Read more