பிரசாந்த் கிஷோர் ஐடியா: பாஜக vs எதிர்க்கட்சிகள்… 2024 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டி தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தயாராகி வருகின்றன. மத்தியில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர மும்முரம் காட்டி கொண்டிருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 303, காங்கிரஸ் 52 என வெற்றி பெற்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 353, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களில் வெற்றி பெற்றன. பாஜக வெற்றி இதன்மூலம் பாஜக அசுர பலம் பெற்றதை பார்க்க … Read more

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்..!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள்  பறிமுதல் செய்யப்பட்டன. சேஷாசல வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிய 2 பேர் அதை திருப்பதி வழியாக சென்னைக்கு காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நாராயணவனம் போலீசார் புத்தூர் அருகே அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 25 செம்மர கட்டைகள் இருப்பது கண்டு பறிமுதல் செய்தனர். … Read more

வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடியின் வங்கி கணக்கில் ரூ.236 தான் இருக்கு.!

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று ரூ.13,500 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபரும் வைர வியாபாரியுமான நீரவ் மோடி, தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். பணமோசடி வழக்கில் தேடப்படும் மற்றும் தலைமறைவு குற்றவாளியான அவரது வங்கிக் கணக்கில் 236 ரூபாய் மட்டுமே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் வங்கிக் கணக்கில் வெறும் … Read more

புதுச்சேரி: கேட்பாரற்று சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் – மீட்க உதவிய 3 பேருக்கு பாராட்டு

புதுச்சேரி அண்ணாசாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 49 லட்சம் ரூபாயை போலீசாருக்கு தகவல் கொடுத்து மீட்க உதவிய மூன்று பேரை, கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டினார். புதுச்சேரி அண்ணாசாலை செட்டி தெரு சந்திப்பில் கடந்த வெள்ளி கிழமை காலை பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த டீ கடை உரிமையாளர், ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து … Read more

தலித்துகள் மீது தாக்குதல்: 4 ஆண்டுகளில் 1,89,000 வழக்கு பதிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணகாப்பக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி கடந்த 4 ஆண்டில் தலித் மீதான தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் 1,89,945 வழக்குகள் பதிவாகி உள்ளன. காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தலித் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை வழங்கி வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். Source … Read more

ஆன்லைன் சூதாட்டம் குறித்து மாநில அரசுகள் சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: ‘ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு’ என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் பாதிக்கப்பட்டு 44 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த  ஆண்டு செப்டம்பரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இதற்கான மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. … Read more

டெல்லியில் உள்ள புத்தர் ஜெயந்தி பூங்காவில் நரேந்திர மோடியுடன் பானி பூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா

புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி பானி பூரி சாப்பிட்டார். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிஷிடா ஆகியோர் தலைமையில் இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், முதலீடு, இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு … Read more

வட இந்தியாவில் நிலநடுக்கம்: நள்ளிரவில் பீதியில் உறைந்த மக்கள்

டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்பட பல வடமாநிலங்களில் நேற்று (மார்ச் 22) இரவு 10.22 மணிக்கு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது. காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கட்டடங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டது எங்கே? ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதனை சுற்றி உள்ள பல நாடுகளில் … Read more

உயிரோடு இருக்கும் நடிகர் கோட்டா சீனிவாச ராவுக்கு அஞ்சலி செலுத்திய நெட்டிசன்ஸ்..! பாதுகாப்புக்கு சென்ற போலீசார்

சாமி, திருப்பாச்சி படங்களில் நடித்த வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல் நிலைகுறித்து சமூக வலைதளங்களில் பரவிய தவறான செய்தியை உண்மை என நம்பி, இறுதி சடங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் வீட்டில் அவர் உயிரோடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஐதராபாத்தில் அரங்கேறி உள்ளது… ஹரி இயக்கத்தில் விக்ரமின் சாமி படத்தில் பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர் தெலுங்கு வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ். திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த கோட்டா … Read more

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க உரிமை உண்டு: ராகுல்காந்தி

புதுடெல்லி: என் மீதான குற்றச்சாட்டுகளுக்குநாடாளுமன்றத்தில் பதில் அளிக்க எனக்கு உரிமை உண்டு என்று மக்களவை சபாநாயகருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். லண்டன் சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசியதாக கூறி ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். லண்டனில் இருந்து திரும்பிய ராகுல் நாடாளுமன்றம் வந்தபிறகும் அவர் பதில் அளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்த ராகுல் தனக்கு பேச அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். … Read more