விமான படையில் அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 31-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

டெல்லி: விமான படையில் அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 31-ம் தேதி வரை தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை agnipathvayu.cdac.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் எழுத்து தேர்வு மே 20 முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதே போல தற்போது … Read more

மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து 2 நாட்கள் போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு எதிரான மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து தலைநகர் கொல்கத்தாவில் வரும் 29-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை போராட்டம் நடத்த இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ”மேற்கு வங்கத்திற்கு எதிராக மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. இதேபோல், … Read more

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை

டெல்லி: சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தாம்பரம் – செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ள இடையேயான ரயில் சேவைகள் உள்ளிட்ட ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

ஷீலா பாணியில் கன்னய்யா குமாரை களமிறக்கும் காங்கிரஸ் – டெல்லி இளைஞர் பிரிவுத் தலைவராக்க திட்டம்

புதுடெல்லி: கட்சியின் இளம் தலைவர் கன்னய்யா குமாருக்கு டெல்லியில் முக்கியப் பதவியை அளிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைகழக (ஜேஎன்யு) மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரான இவரிடம் டெல்லி மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் தொடர்ந்து மூன்று முறை டெல்லியில் ஆட்சி செய்திருந்தது. இக்கட்சியிடம் இருந்து புதிதாகத் துவங்கிய ஆம் ஆத்மி கட்சியினால் டெல்லி ஆட்சி பறிக்கப்பட்டது. இதை மீட்க தொடர்ந்து … Read more

நாடாளுமன்ற முதல் தளத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி தலைவர்களுடன் திடீர் ஆலோசனை

புதுடெல்லி: ஆளுங்கட்சி – எதிர்கட்சி எம்பிக்களின் அமளியால் நாடாளுமன்றம் 6வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. ெதாடர்ந்து எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற முதல் தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று எதிர்கட்சிகளும், லண்டனில் ராகுல்காந்தி பேசிய விவகாரம் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டாவது அமர்வின் 6வது நாள் கூட்டம் இன்று தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற … Read more

“தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃப்ர்” – ராகுல் காந்தி மீது பாஜக புதிய விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை மிர் ஜாஃபருடன் ஒப்பிட்டு அவர் மீது புதிய விமர்சனத் தாக்குதல் ஒன்றை பாஜக தொடுத்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நாட்டை அவமானப்படுத்தியுள்ளார். அவர் தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃபர். மிர் ஜாஃபர் செய்த வேலையையே ராகுல் காந்தி செய்கிறார். மிர் ஜாஃபர், அப்போதைய கிழக்கிந்திய … Read more

கிரண் படேல்: போலி PMO ஆபிஸர், Z பிளஸ் பாதுகாப்பு, பதறிய காஷ்மீர்… சிக்கலில் பாஜக அரசு!

கிரண் படேல் கைது சம்பவம் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இவரை ஜம்மு காஷ்மீரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கிழக்கு ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த 3ஆம் தேதி கைது செய்தனர். இவர் அந்த ஓட்டலில் தன்னை பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி எனக் கூறி தங்கியிருந்தது தான் ஹைலைட். மாவட்ட மேஜிஸ்டிரேட் சந்தேகம் இவரது நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழவே மாவட்ட மேஜிஸ்டிரேட் உத்தரவின் பேரில் அதிரடியாக … Read more

தொழிலதிபர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 80 சவரன் நகைகள் கொள்ளை..!

புதுச்சேரியில், தொழிலதிபர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, 80 சவரன் தங்க நகைகள் மற்றும் 38 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பலை, சிசிடிவி காட்சி அடிப்படையில் அடையாளம் கண்ட போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். ரெயின்போ நகரில், நேற்று இரவு வீட்டு வாசலில் நின்ற கருணாநிதியிடம் விலாசம் கேட்பது போல் நடித்து, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பணம், நகைகளை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை … Read more

இந்துத்துவம் பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது என்று ட்வீட் செய்த கன்னட நடிகர் கைது

பெங்களூரு: இந்துத்துவம் பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது” என்று ட்வீட் செய்த, கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சமத்துவம் என்ற உண்மையின் மூலமே இந்துத்துவத்தை வீழ்த்த முடியும் என்றும் அவர் தனது ட்வீட்டில் கூறியிருந்தார். இதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ‘அமேசான்’ நிறுவனம்!

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ், உக்ரைன் – ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி – நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் வளர்ந்த நாடுகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு … Read more