இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே சந்திப்பு! நாட்டின் எந்தவொரு மூலைக்கும் ரயில் சேவை உண்டு!

இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே சந்திப்பு: இந்திய ரயில்வே உலகின் 5 பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இது போன்ற பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது, அதைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பெருமைப்படுவீர்கள். இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போவது இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே சந்திப்பு. இந்த சந்திப்பு ஒருபோதும் காலியாக இருக்காது. இங்கு 24 மணி நேரமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் எந்த மூலைக்கும் செல்ல இந்த சந்திப்பில் இருந்து ரயிலைப் … Read more

சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கிய 1,000 சுற்றுலா பயணிகள் மீட்பு: போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி அங்குள்ள சாங்கு ஏரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டன. தகவலறிந்த ராணுவம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுமார் 370 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதேபோல் கிழக்கு சிக்கிம் உள்ளிட்ட மலைத்தொடர்களில் சுற்றுலா பயணிகள் பலர் பனிப்பொழிவு காரணமாக சிக்கிக் கொண்டனர். தற்போது வரை 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை … Read more

தவறு செய்யாத மகனுக்கு தண்டனையா ? குமுறும் பெற்றோர்…!

தஞ்சவூர் மாவட்டம் சாலிமங்கலம் அடுத்த பூண்டி என்ற பகுதியில் வசித்து வரும் ஜெயபால் அவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா. இவர் தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் பிரதமரைப் பற்றி அவதூறு இமெயிலை அவரது தந்தையின் மெயில் ID யிலிருந்து அனுப்பியதாக கூறப்படும் நிலையில் , மார்ச் 15-ம் தேதி பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விக்டரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது . வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் வீட்டிலிருந்தவர்களை வெளியில் … Read more

தமிழ்நாட்டை தொடர்ந்து அரசு பேருந்துகளில் பெண்களுக்கு சலுகை அறிவித்த மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிரா: தமிழ்நாட்டை தொடர்ந்து அரசு பேருந்துகளில் பெண்களுக்கு மகாராஷ்டிர அரசு சலுகை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இன்று முதல் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடந்த 9-ம் தேதி மாநில பட்ஜெட்டில், இச்சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அமலுக்கு வந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024: காங்கிரஸ் அல்லாத கூட்டணியா? மம்தா – அகிலேஷ் சந்திப்பு

Akhilesh Yadav Mets Mamata Banerjee: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று கொல்கத்தா சென்றடைந்தார். கொல்கத்தாவை அடைந்ததும், ஆளும் பாரதிய ஜனதாவை அகிலேஷ் யாதவ் கடுமையாக தாக்கி பேசினார். 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வை எப்படியும் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே சமாஜ்வாதி கட்சியின் ஒரே குறிக்கோள் என்று அகிலேஷ் கூறினார். கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நடைபெறும் தனது கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அகிலேஷ் கலந்து கொள்கிறார் மற்றும் மேற்கு வங்க … Read more

மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 5 நாள் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 5 நாள் அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று மேலும் 5 நாட்கள் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி மதுக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் 7 நாள் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்ததால், அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் கோரி மனு தாக்கல் செய்தது. … Read more

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் விசாரணைக்காவல் 5 நாட்கள் நீட்டிப்பு!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் விசாரணைக்காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரிடம் மேலும் 5 நாட்கள் விசாரிக்க, ரோஸ் அவின்யூ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், அமலாக்கத்துறை சிசோடியாவை கைது செய்து,7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்நிலையில், கூடுதலாக 7 நாட்கள் விசாரிக்க அனுமதிக்குமாறு, நீதிமன்றத்தில் இன்று அவரை ஆஜர்படுத்தி, அமலாக்கத்துறை கோரிய நிலையில், அதற்கு மணீஷ் சிசோடியா தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தினமும் … Read more

குடும்பத் தகராறில் தூக்க மாத்திரை சாப்பிட்டு பாஜக மாஜி அமைச்சர், மனைவி தற்கொலை முயற்சி: உத்தர பிரதேசத்தில் பரபரப்பு

கான்பூர்: குடும்பத் தகராறில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பாஜக முன்னாள் அமைச்சர், அவரது மனைவி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் பஞ்சாபி அகாடமி உறுப்பினரும், பாஜக முன்னாள் மாநில அமைச்சருமான விக்கி சாப்ரா, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பசல்கஞ்ச் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விக்கி சாப்ராவுக்கும், அவரது மனைவிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விக்கி சாப்ராவின் மனைவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு … Read more

‘என்னயே வேலைய விட்டு தூக்குறீங்களா?’ – பழிவாங்கிய இளைஞரால் அதிர்ந்த குடியிருப்புவாசிகள்!

வேலையை விட்டு நீக்கியதற்காக இளைஞர் ஒருவர், அப்பார்ட்மெண்ட்டில் இருந்த கார்களின் மீது ஆசிட்டை வீசி பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரில் இருக்கும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில், வீட்டு உரிமையாளர்களின் கார்களை தினமும் சுத்தம் செய்வதற்கு என்றே, தனியாக ஒருவரை அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் வேலைக்கு அமர்த்திருக்கும். இதற்கும் சேர்த்தே, மாதந்தோறும் பராமரிப்பு செலவு என்று ஒன்று வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ஒரு தொகை வசூலிக்கப்படும். அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டத்தைச் … Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அருணாச்சலில் 2 விமானிகள் உயிரிழப்பு

குவாஹாட்டி: அருணாச்சலபிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டம் பாம்டிலா அருகே பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் அந்த ஹெலிகாப்டர் தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் 5 குழுக்கள் அதை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் பாம்டிலாவுக்கு மேற்கே … Read more