7th Pay Commission: ஊழியர்களுக்கு டிஏ ஹைக் பற்றிய மாஸ் செய்தி, இன்று வருகிறதா அறிவிப்பு?

7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வரப்போகிறது. மத்திய அரசு (மோடி அரசு) அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தப் போகிறது. இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும். அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். ஊதியத்தில் நேரடியாக சுமார் ரூ.27,000 உயர்வு இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று இது குறித்த அறிவிப்பு … Read more

மகாராஷ்டிரா துணைமுதல்வரின் மனைவிக்கு மிரட்டல் – பெண் ஆடை வடிவமைப்பாளர் கைது..!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், பெண் ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்டார். தேவேந்திர பட்னவிஸின் மனைவி அம்ருதா பட்னவிஸ் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஆடை வடிவமைப்பாளர் எனக் கூறி அறிமுகமான அனீக்-ஷா ஜெய்சிங்கானி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தன் தந்தையை விடுவிக்கக் கோரியும், அதற்கு தனக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க முயன்றதுடன், மிரட்டலும் விடுத்துள்ளார் என அந்த புகார் … Read more

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு: வெளிநாட்டு நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு..!!

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை கேரள அரசு  அணை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையே தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில்லாத பகுதியில் இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதே நேரத்தில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு அணை பலமாக … Read more

அருணாச்சலில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தமிழக விமானி உட்பட இருவர் பலி!

அருணாச்சல பிரதேசத்தில் பறந்து கொண்டிருந்த போது இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பறந்துகொண்டிருந்தது. இந்நிலையில் பொம்திலா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஹெலிகாப்டரில் இருந்து வந்த தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில், காலை 9.15 மணி அளவில் விமானிகளுடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக … Read more

ரூ.70,500 கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் – பாதுகாப்புத் துறை ஒப்புதல்

புதுடெல்லி: பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்குகிறது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.70,500 கோடி மதிப்புக்கு மேலான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்படி ராணுவத்துக்கு 307 நவீன பீரங்கிகள் (ஏடிஏஜிஎஸ்) ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்திடம் (டிஆர்டிஓ) வாங்கப்படவுள்ளன. கடற்படை பயன்பாட்டுக்கு 200 பிரம்மோஸ் ஏவுகணைகள், ரூ.56,000 கோடி … Read more

Corona: தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா! பீதி கிளப்பும் வைரஸ்!

Corona Returns: நாட்டில் அதிகரித்து வரும் COVID வழக்குகளுக்கு மத்தியில், 6 மாநிலங்களில் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளது. கோவிட் -19 இன் நிலைமையை மைக்ரோ அளவில் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் ஆறு மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக … Read more

அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர் தேனியை சேர்ந்தவர்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டலா மலையில் ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

6 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், “6 மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கிறது. எனவே … Read more

யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த 6 ஆண்டுகளில் 10713 என்கவுண்ட்டர்கள் போலீஸ் நடத்தியிருப்பதாக அரசு குற்ற ஆவணங்களில் தகவல்

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில் 10 ஆயிரம் முறை போலீஸார் என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதாக அரசு வெளியிட்ட குற்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிய ரவுடிகள் உள்பட 178 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதில் கூறப்பட்டு உள்ளது. கிட்டதட்ட 6 ஆயிரம் குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் குற்றவாளிகள், மாபியா கும்பல்களை சகித்துக் கொள்வதிலும் அரசு கருணை‘ காட்டாது என்று யோகி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Source link

சிகரெட் ஊதித்தள்ளும் அனன்யா: நெட்டிசன்கள் தாக்கு

மும்பை: நடிகை அனன்யா பாண்டே சிகரெட்களை ஊதித் தள்ளும் வீடியோ வைரலாகியுள்ளது. இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் அனன்யா பாண்டே. சமீபத்தில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில் அனன்யா பாண்டே தற்போது பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். அனன்யா பாண்டேயின் குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அனன்யா பாண்டே, … Read more