பரபரப்பு! இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!!

அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள பழமையான சீட்டா வகை ராணுவ ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அருணாச்சல பிரதேச மாநிலம் மண்டலா அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் போம்டிலா என்ற பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது. இன்று காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் ஹெலிகாப்டர் தொடர்பை இழந்தது. இதனையடுத்து தேடுதல் குழுக்கள் மூலம் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. … Read more

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு ஊழல் வழக்கு பதிவு..!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு கருத்துப் பிரிவு உருவாக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் கருத்துப் பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுவதால், அரசு கருவூலத்திற்கு 36 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. … Read more

சிவசேனா கட்சியை ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: சிவசேனா கட்சியை ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அமளி, அமளி, மீண்டும் அமளி… – நான்காவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்

புதுடெல்லி: அதானி விவகாரம், ராகுலின் லண்டன் பேச்சு தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி, முழக்கங்கள் காரணமாக நான்காவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அது முதல் எதிர்கட்சிகள், ஆளுங்கட்சிக்கு இடையே அதானி விவகாரம், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பான அமளியால் தொடர்ந்து மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை … Read more

‘நாளைக்கு இருக்கு சம்பவம்..?’ – டெல்லியில் ராகுல் காந்தி கர்ஜனை.!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு வார கால பயணமாக லண்டன் சென்றார். அங்கிருக்கும் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியாவின் ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பினார். அதேபோல் எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்படுவதையும் அவர் கூறினார். அதானி விவகாரத்தையும் ராகுல் காந்தி விட்டு வைக்கவில்லை. இந்தநிலையில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ராகுல் காந்தி தனது பேச்சிற்கு … Read more

ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து- 2 பைலட்டுகள் பலி

ஹெலிகாப்டர் விபத்து: 2 பைலட்டுகள் பலி அருணாசல பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்த விபத்தில் 2 பைலட்டுகள் பலி மாண்டலா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கிய 2 பைலட்டுகளும் சடலங்களாக கண்டெடுப்பு விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகளுடன், 3 ராணுவ உயர் அதிகாரிகளும் பயணித்ததாக தகவல் Source link

நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது; இந்தியாவுக்கு எதிராக தான் எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: இந்தியாவுக்கு எதிராக தான் எதுவும் பேசவில்லை என ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அதானி குழும முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சிகளும், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுங்கட்சியினரும் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். இதன் காரணமாக 4வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் முடங்கியது. பின்னர் டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய … Read more

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புதிய ஊழல் வழக்கு – சிபிஐ பதிவு செய்தது

புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணைமுதல்வரான மணீஷ் சிசோடியா மீது அம்மாநில அரசாங்கத்தின் கருத்து பிரிவு (ஃபிட்பேக் யூனிட்) தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு புதிய ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் கருத்து பிரிவால் அரசு கருவூலத்திற்கு ரூ.36 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எஃப்பியூ எனப்படும் ஃபிட்பேக் யூனிட் என்பது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டது … Read more

மீண்டும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… தொடரும் தேடுதல் பணி!

Army Helicopter Crash in Arunachal Pradesh: அருணாச்சல பிரதேசம் மண்டலா அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் இன்று (மார்ச் 16) விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள போம்டிலா அருகே சென்றுகொண்டிருந்தபோது, இன்று காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் (ATC) தொடர்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. தேடுதல் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டரில் இருந்தவர்களை அவர்கள் தேடி வருகின்றனர். “அருணாச்சலப் பிரதேசத்தின் போம்டிலா அருகே கண்காணிப்பில் இருந்து … Read more

கேரளா மாநிலம் கொச்சியில் பல இடங்களில் அமில மழை: பொதுமக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் பல இடங்களில் நேற்று அமில மழை பெய்தது. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொச்சி நகரத்தை ஒட்டி பிரம்மபுரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது. நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்குதான் கொட்டப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல நாட்களாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இறுதியில் 13 நாட்களுக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. … Read more