நடுவானில் சமோசா, காபியுடன் ஹோலி கொண்டாடிய விமானிகள்.. அதிரடியில் இறங்கிய ஸ்பைஸ்ஜெட்!

விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது இரு விமானிகள் காஃபி குடித்துக் கொண்டும் குஜ்யாஸ் என்ற சமோசா சாப்பிட்டுக்கொண்டும் இருந்ததற்காக விமான போக்குவரத்துத்துறை அவர்கள்மேல் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட போது இஸ்லாமியர்கள் மீது வேண்டுமென்றே துரத்தி துரத்தி கலர் பொடியை வீசுவதும், பெண்கள் மீது அத்துமீறி கலர் பொடியை தூவியதும் என சில சம்பவங்கள் நடந்து, மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வீடியோக்களுமே சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு கண்டனங்களை பெற்றிருந்தன. இந்த நிலையில், டெல்லியில் இருந்து … Read more

அமைதிக்கான நோபல் பரிசைப்பெற தகுதியானவர் மோடி: நோபல் கமிட்டி உறுப்பினர் பாராட்டு

புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் என்று நோபல் பரிசின் கமிட்டி உறுப்பினர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். நோபல் பரிசு கமிட்டியின் உறுப்பினரான அஸ்லே டோஜே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று ( வியாழக்கிழமை) தனியார் செய்தி தொலைகாட்சி ஒன்றில் அவர் பேசும்போது, “அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி உள்ளார். இன்று உலகில் உள்ள … Read more

ராகுல் காந்தி சிட்டிங்கை பாருங்க… இனிமே தான் சம்பவம் இருக்கு- லண்டன் பேச்சிற்கு பதிலடி!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய விஷயங்கள் இந்தியா ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பாஜக தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில் அதானி விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பிக்கள் கையிலெடுக்க, ராகுல் சர்ச்சை பேச்சை ஆளுங்கட்சி எம்.பிக்கள் கையிலெடுத்தனர். நாடாளுமன்றத்தில் அமளி நாடாளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக கூச்சல் குழப்பத்துடன் ஒரே அமளியாக … Read more

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்..!

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் மண்டாலா பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலாவுக்கு மேற்கு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் இன்று காலை 9.15 மணி அளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது. அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டரில் விமானி மற்றும் துணை விமான ஆகிய இருவர் விமானத்தில் பயணித்ததாகவும், … Read more

ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வைப்பது  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை: அமைச்சர் கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: ராகுல் காந்தியை தனது லண்டன் பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைக்காமல் இருந்தால், எம்பிக்களை மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ”இந்தியாவிற்கு எதிராக உள்ளவர்கள் பேசுவதைப் போல் ராகுல் காந்தி பேசி இருக்கிறார். தனது பேச்சுக்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை மன்னிப்பு கேட்க வைப்பது நமது கடமை. அவர் தனது செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சியை அழிவுப்பாதைக்கு … Read more

“அமைதிக்கான நோபல் பரிசுக்கு, பிரதமர் மோடி பெரும் போட்டியாளராக இருப்பார்”… நோபல் கமிட்டியின் துணை தலைவர் கருத்து

அமைதிக்கான நோபல் பரிசுக்கு, பிரதமர் மோடி பெரும் போட்டியாளராக இருப்பார் என நோபல் கமிட்டியின் துணை தலைவர் Asle Toje தெரிவித்துள்ளார். நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டியினர் இந்தியா வந்துள்ள நிலையில், அதன் துணைத்தலைவர் Asle Toje, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவர் பிரதமர் மோடி என்றும், உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், அமைதிக்கான நம்பத்தகுந்த முகங்களில் ஒருவர் என்றும் கூறினார். மேலும், இது போருக்கான சகாப்தம் அல்ல என … Read more

நாட்டிற்கு எதிராக, நாட்டை அவமதிக்கும் வகையில் நான் எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: நாட்டிற்கு எதிராக, நாட்டை அவமதிக்கும் வகையில் நான் எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால் உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி: “விரைவில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைப்போம்”- முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை ஏற்படுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி பேரவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மீது இன்று உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, இளைஞர்களின் நலனையும் விளையாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கென தனிதுறை இந்தாண்டு துவக்கப்படும் எனவும், இதற்காக … Read more

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வலியுறுத்தல் – எதிர்க்கட்சி பேரணியை தடுத்து நிறுத்திய போலீஸார்

புதுடெல்லி: அதானி குழுமம் மீதான குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க வலியுறுத்தி அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட நிலையில் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதானி குழும நிறுவனம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்துள்ளதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது … Read more

லண்டன் கருத்தரங்கில் இந்தியாவுக்கு எதிராகவோ, அவமதிக்கும் வகையிலோ நான் எதுவும் பேசவில்லை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: லண்டன் கருத்தரங்கில் இந்தியாவுக்கு எதிராகவோ, இந்தியாவை அவமதிக்கும் வகையிலோ நான் எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். என்னை பேச அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் இது குறித்து உரிய பதிலளிப்பேன் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார் . லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்திய ஜனநாயகம் குறித்து கவலை தெரிவித்து பேசியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கோரவேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.  சர்ச்சை பேச்சு … Read more