யமுனைக்கரையில் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பு குடியிருப்புகளை மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லியின் யமுனைக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பு குடியிருப்புகளை மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு வீடுகளை இடிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு டெல்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடிக்கும் பணிகளின்போது பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27ல், யமுனை நதியை தூய்மைப்படுத்தவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குடியிருப்புகளை இடிக்கும் உத்தரவை எதிர்த்து குடியிருப்புவாசிகள் தாக்கல் … Read more

திரிபுரா எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் பிரதிமா

அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவை எம்எல்ஏ பதவியை ஒன்றிய அமைச்சர் பிரதிமா பவுமிக் ராஜினாமா செய்தார். திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் 31 இடங்களில் வென்று பா.ஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.  மாணிக் சகா 2வது முறையாக முதல்வரானார். சட்டப்பேரவை தேர்தலில் தான்பூர் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பிரதிமா பவுமிக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இன்றும், நாளையும் திரிபுரா சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ள நிலையில் அவர் தனது … Read more

மார்ச் 16ல் ‘தேசிய தடுப்பூசி தினம்’ கடைபிடிப்பதன் முக்கியத்துவம் என்ன? முழு பின்னணி

கொரோனா பாதிப்பால் உலகளவில் கொத்து கொத்தாக மனிதர்கள் தங்களது உயிர்களை பலி கொடுத்த போதுதான், தடுப்பூசியின் தேவையும் அவசியமும் பெருவாரியான மக்களுக்கு புரிந்தது என்றே சொல்லலாம். அந்த புரிதலினாலேயேவும், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டிலும்கூட தடுப்பூசி பெரும்பாலானோரால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தவகையில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க இரண்டு டோஸ் தடுப்பூசிகளை அதிக இந்தியர்கள் போட்டுக்கொண்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்படியாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தற்காலத்தில் மக்கள் மத்தியில் நன்றாகவே மேலோங்கியிருக்கிறது. ஆனால், கொரோனா பரவலுக்கு முன்பு … Read more

ரயில்வே பணிக்கு லஞ்சம் பெற்ற வழக்கு – லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, மிசா பாரதிக்கு ஜாமீன்

பாட்னா: ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக பணியாற்றினார். அப்போது இந்திய ரயில்வேயில் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு … Read more

விரைவில் பிஎஸ்என்எல் 4G சேவை : ஒன்றிய அரசு

டெல்லி :நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4G சேவை செயல்பாட்டுக்கு வந்த பின்னர், பிஎஸ்என்எல் 5G சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று -மக்களவையில் ஒன்றிய இணையமைச்சர் தேவ்சிங் சௌஹான் பதில் தெரிவித்துள்ளார். மேலும் 1 லட்சம் பகுதிகளில் 4G சேவை வழங்க கடந்தாண்டு அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

தீவிரவாதத்துக்கு இளைஞர்களை தூண்டிய 2 பிஎஃப்ஐ உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: மூளைச் சலவை செய்து தீவிரவாத செயல்களில் முஸ்லிம் இளைஞர்களை ஈடுபடத் தூண் டியதாக பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உறுப்பினர் கள் 2 பேர் மீது தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியிலுள்ள பிஎஃப்ஐ அமைப் பின் உறுப்பினர் முகமது ஆசிப் (எ) ஆசிக். பரான் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் சராப். இவர்கள் இருவரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டியதாகவும், அவர்களை தங்களது … Read more

ஜாக்பாட்! மூத்த குடிமக்களுக்கு ரயில்வே அளித்த மாஸ் தகவல், விரைவில் இந்த வசதி

மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் சலுகை: ரயில்வேயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு மீண்டும் ஒருமுறை தொங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நாடாளுமன்றக் குழு அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பயணம் செய்யும் போது வழங்கப்படும் சலுகையை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்பி ராதா மோகன் சிங் … Read more

இளைஞரின் வயிற்றிலிருந்த 56 பிளேடுகள் 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த யஷ்பால் சிங் (26) என்ற இளைஞரின் வயிற்றிலிருந்த 56 பிளேடுகள் 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றம் செய்யப்பட்டுள்ளது. பதட்டம் அல்லது மனச்சோர்வு காரணமாக இளைஞர் இவ்வாறு பிளேடுகளை விழுங்கியிருக்கலாம் எனவும், கவருடன் மூன்று பாக்கெட் பிளேடுகளை விழுங்கி இருந்ததாகவும் 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு விளக்கம் அளித்துள்ளது.

மும்பையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடங்கள் ரூ.252 கோடிக்கு விற்பனை

மும்பை: தெற்கு மும்பை பகுதியில் தொழிலதிபர்கள் வீடு வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதால் விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் கூறியது: கடந்த மாதம் வெல்ஸ்பன் குழுமத் தலைவர் பி.கே.கோயங் காவுக்கு வோர்லி பகுதி டவர் ‘பி’யில் உள்ள 63,64,65-ஆவது தளங்களை வாங்கினார். இவை 30,000 சதுர அடி பரப்பளவை கொண்டவை. ரூ.240 கோடியில் வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தம்தான் நாட்டின் அதிகபட்ச மதிப்புடைய குடியிருப்பு மனை விற்பனை ஒப்பந்தமாக கருதப்பட்டது. இந்த நிலையில் அதனையும் … Read more

பிரதமர் மோடியைப் பற்றி பாஜக தயாரித்துள்ள அனிமேஷன் வீடியோ.!

பிரதமர் மோடியின் வளர்ச்சி, ஆட்சி போன்றவற்றை குறிக்கும் வகையில் பாஜக சார்பில் ஒரு அனிமேஷன் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. சாதாரண தேநீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கி குஜராத் முதலமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் உயர்ந்த அவர், இந்தியாவை வலிமையான பொருளாதாரம் நோக்கி வழிநடத்திச் செல்வதாக அந்த வீடியோ விவரிக்கிறது. எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் யாவும் மோடியிடம் பலிக்கவில்லை என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது.