"இந்தியாவின் பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்படுகிறது?"- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை, மத்திய அரசானது அதானி குழுமம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த எலாரா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து “இந்திய பாதுகாப்பு தொடர்பான கருவிகளை, யார் என்றே அறியாத ஒரு நிறுவனத்திடம் எப்படி ஒப்படைக்க முடியும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “இந்தியாவின் ஏவுகணை மற்றும் ரேடார் மேம்படுத்தல் ஒப்பந்தம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்திற்கும், எலாரா என்ற சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு … Read more

புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா வைரஸின் துணை வைரஸான H3N2 வகையால் ஏராளமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இந்த வைரஸுக்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பெரும்பான்மையாக சிறுவர், சிறுமியர்களையே தாக்குகிறது. உடல்நலக்குறைவு ஏற்படுவதால் அவர்களால் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இந்த புதிய வகை … Read more

படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லி: படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க 8ஆயிரம் பெட்டிகள் தேவைப்படலாம் என மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதானி குழும தொடர்பான குற்றச்சாட்டுகளை கவனிக்குமாறு கடிதத்தில் காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

60 அடி ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு.. ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..

மத்தியபிரதேச மாநிலம் விதிஷாவில், 60 அடி ஆழ ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன், 24 மணி நேரப்போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான். நேற்று காலை சுமார் 11 மணியளவில், விவசாய நிலத்தில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைக்கிணற்றில், சுமார் 43 அடி ஆழத்தில் சிக்கிய லோகேஷை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, பொக்லைன் இயந்திர உதவியுடன் கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டி அவனை மீட்க முயற்சித்தனர். … Read more

அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை எங்கள் பேச்சை கேட்க கூட மறுத்து விட்டனர்: மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை எங்கள் பேச்சை கேட்க கூட மறுத்து விட்டனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது லண்டன் பயணத்தின் போது இந்திய ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்றம் … Read more

35 வருஷம் கழித்து சந்தித்த ரியல் லைஃப் ராம் – ஜானு… வீடுதிரும்பாததால் ஏற்பட்ட விபரீதம்!

96 படத்தைப்போன்று, பள்ளிப் பருவத்தில் காதலித்த சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த ஒரு காதல் ஜோடியொன்று, ஸ்கூல் ReUnion-ல் சந்தித்துள்ளனர். ஆனால் எதிர்பாரா விதமாக இந்த காதல் ஜோடி, குடும்பத்தைவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் 96. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கி இருந்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பள்ளிக்கூட … Read more

கர்நாடக தேர்தல் 2023: ஒக்கலிகா பெல்ட்டில் சிக்கல்; JDS-க்கு தாறுமாறு சண்டை வெயிட்டிங்!

கர்நாடக மாநில அரசியலில் ஒக்கலிகா வாக்கு வங்கி பொதுவாக மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சிக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஓல்டு மைசூரு மண்டலத்தில் இந்த சமூக மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு 70 முதல் 80 சதவீத தொகுதிகளை மதச்சார்பற்ற ஜனதா தளம் கைப்பற்றி வருகிறது. இந்த கட்சி 2008ஆம் ஆண்டு தேர்தலில் கைப்பற்றிய 27 தொகுதிகளில் (பெங்களூரு நீங்கலாக) 19 ஓல்டு மைசூரு மண்டலத்தை சேர்ந்தவை. ஓல்டு மைசூரு மண்டலம் … Read more

படுக்கை வசதியுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே திட்டம்: மக்களவையில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்

டெல்லி: படுக்கை வசதியுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 2023 – 24ம் ஆண்டிற்குள் 120 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 120 ரயில் பெட்டிகளில் 75 பெட்டிகள் இருக்கையுடனும், 27 பெட்டிகள் படுக்கை வசதியுடனும் இருக்கும். நாடு … Read more

ராகுலின் லண்டன் பேச்சு vs அதானி விவகாரம்: 3-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி குழும விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் அமளி காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புதன்கிழமையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியின் லண்டன் பேச்ச தொடர்பாக ஆளுங்கட்சியினரும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். … Read more