தெலங்கானா முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!

உடல்நலக்குறைவு காரணமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக ஹைதராபாத் ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு, சி.டி. மற்றும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. … Read more

மோடி நிகழ்ச்சியில் சிறுவனை அனுமதிக்காத காவலர்கள்!!

கர்நாடகா மாநிலம் வந்திருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறுவன் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததால் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பிரதமர் பயணிப்பது, நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது அதிகரித்து வருகிறது. இன்று 6ஆவது முறையாக கர்நாடகா வந்த பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டியா, தார்வாடில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரூ.16 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.8,480 … Read more

gay மற்றும் lesbian திருமணங்களை ஏற்க முடியாது; ஒன்றிய அரசு பிடிவாதம்.!

ஒரே பாலினத்தவ்ர் திருமணத்தை சட்டப்பூர்வமாக ஏற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது சமீபத்திய மாதங்களில் குறைந்தது நான்கு ஓரினச்சேர்க்கை தம்பதிகள் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்துடன் சட்டப்பூர்வ மோதலுக்கான களத்தை அமைத்தது. இந்தநிலையில் ஒன்றிய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒரே பாலின திருமணம் என்பது “இந்திய குடும்ப அலகு” என்ற கருத்துடன் ஒத்துப்போகாது, இது “கணவன், … Read more

குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயால் 3 குழந்தைகள், தம்பதி தீயில் கருகி பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் நேற்றிரவு குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயால், 3 குழந்தைகள் மற்றும் தம்பதி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த ஹமாவ் கிராமத்தில் சதீஷ் (30), அவரது மனைவி காஜல் (26), அவர்களது மூன்று குழந்தைகள் சன்னி (6), சந்தீப் (5), குடியா (3) ஆகியோர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றியதால், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 5 பேரும் தீயில் கருகி … Read more

“இந்தி பேச முடியாது…” – வைரலாகும் ஆட்டோ ஓட்டுநரின் பதில்!! VIDEO

ஹிந்தியில் பேச வேண்டும் என்று கூறியவருக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பதிலடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஹிந்தி பேசும் சில இளம்பெண்கள் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் மாநில மொழியான கன்னடத்தில் பேசியுள்ளார். ஆனால் அப்பெண்கள் ஹிந்தியில் பேசுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், நான் ஏன் ஹிந்தியில் பேசவேண்டும் என்று கேள்வி எழுப்பினார். … Read more

முதல்வர் பேரணியில் பெண் நிர்வாகி 'ஹாட்' முத்தம்.. சர்ச்சையில் சிவசேனா எம்எல்ஏ..!

கடந்த சனிக்கிழமை இரவு இந்த வீடியோ வைரலானதை அடுத்து, தஹிசார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ”தஹிசரில் ஆசிர்வாத் யாத்திரை” என்ற பெயரில் பேரணி நடந்தது. அந்த பேரணி வாகனத்தில் ஏக்நாத் ஷிண்டே அருகில் எம்எல்ஏ பிரகாஷ் சர்வே, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மத்ரே ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, எம்எல்ஏ பிரகாஷ் சர்வேவுக்கு ஷீத்தல் மத்ரே முத்தமிட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி … Read more

Same Sex Marriage: மத்திய அரசையும் மீறி சட்டப்பூர்வமாகுமா தன்பாலின திருமணம்?

Same Sex Marriage In India: இந்தியாவில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பின் அடிப்படைக்கு எதிரானது என்றும், தாய், தந்தை என இயற்கையான முறையில் இருந்து முற்றிலும் விலகியிருப்பதாகவும் கூறி, அதை ஏற்க கூடாது என பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றுசேர்த்து, உச்ச நீதிமன்றம் நாளை (மார்ச் 13) விசாரணை மேற்கொள்ள உள்ளது.  … Read more

குஜராத்தில் பாடகர் மீது ரூபாய் நோட்டுகளை மழைபோல் பொழிந்த பார்வையாளர்கள்

குஜராத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது பாடகர் ஒருவர் மீது ஆண் மற்றும் பெண் பார்வையாளர்கள் ரூபாய் நோட்டுகளை மழைபோல் பொழிந்தனர். வல்சாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியின் பாடலை ஏராளமானோர் ரசித்து கேட்டுக்கொண்டிருந்த நிலையில், சில பார்வையாளர்கள் மேடை முன்பு வந்து கிர்திதன் காத்வி மீது ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தபடியே இருந்தனர். இதனால் அந்த மேடை முழுவதும் ரூபாய் நோட்டுகளால் நிறைந்திருந்தது. கடந்த டிசம்பர் மாதம் குஜராத்தின் நவ்சாரி கிராமத்தில் நடைபெற்ற … Read more

கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹப்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வசிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் அங்கித் குமார் (25) என்பவர், கடந்த பிப்ரவரியில் மொராதாபாத்தில் இருந்து ஹாப்பூர் போலீஸ் லைனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஹாப்பூர் போலீஸ் லைனில் பணியில் இருக்கும் போது, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஹாபூர் போலீஸ் எஸ்பி அபிஷேக் வர்மா கூறுகையில், ‘கான்ஸ்டபிள் அங்கித் குமார், தனது பாதுகாப்பு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு … Read more

மாமியாரின் மூக்கை அறுத்த மருமகன்! ஏன் தெரியுமா?

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை மருமகன் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மோர்னியா மாவட்டம் சந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹ்மத் பகேல் – ராம் விலாசி தம்பதிக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். அவரை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். பின்னர் ஷியாம் சுந்தரிக்கும் மருமகன் ராஜூவுக்கும் சமீப காலமாக பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. ஷியாம் சுந்தரியை ராஜூ தொடர்ந்து … Read more