நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்: காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உற்சாகம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு மகிழ்ந்தன. சம்பா மாவட்டத்தில் பல இடங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையில் ஈடுபட்டன. ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். குளிர்காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த காலத்தை வரவேற்பதாக ஹோலி பண்டிகை அமைகிறது.   இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையில், முதல் நாளான நேற்று chotti … Read more

இமாச்சல பிரதேசத்தில் இந்து கோயிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம்

சிம்லா: இமாச்சல பிரதேசம், சிம்லா மாவட்டம், ராம்பூரில் சத்தியநாரா யணன் கோயில் உள்ளது. விஸ்வ இந்து பரிஷத் கோயிலை நிர்வகித்து வருகிறது. அதோடு கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகமும் செயல்படுகிறது. சத்தியநாராயணன் கோயிலில் திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் மதத்தை சேர்ந்த ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் விருப்பம் தெரிவித்தனர். இதற்கு கோயில் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. இதன்படி கடந்த 3-ம் தேதி கோயிலில் ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் ஜோடிக்கு முஸ்லிம் முறைப்படி திருமணம் நடைபெற்றது. … Read more

எதிர்கால யுத்தங்களை கணிக்க முடியாது, எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – எச்சரித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்

எதிர்கால யுத்தங்களை கணிக்க முடியாதென்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 40 ஆயிரம் டன் எடையுடன் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர் கப்பலான INS Vikrant -ல் கடற்படை கமாண்டர்களுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளிலும், கடலோர பகுதிகளிலும் தொடர்ந்து விழிப்புடனும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கடற்படை தயாராக இருக்க வேண்டும் என்றார். … Read more

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா: திருவனந்தபுரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9வது நாள் பொங்கல் வழிபாடு நடைபெறும். இந்த வருட பொங்கல் திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் … Read more

கருவிலேயே குழந்தைக்கு கீதை, ராமாயண பாடம் – ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு திட்டம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சமிதியின் ஓர் அங்கம் சாம்வர்தினி நியாஸ். இது ‘கர்பா சன்ஸ்கார்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் மாதுரி மராத்தே நேற்று கூறும் போது, “கர்பா சன்ஸ்கார் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியுடன் பகவத் கீதை, ராமாயண பாடம் கற்பிக்கப்படும். இதன் மூலம் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைகள் கலாச்சார மதிப்பை தெரிந்து கொள்ள உதவும். கர்ப்ப காலம் முதல் … Read more

ஐதராபாத் ஷூட்டிங்கில் அமிதாப்புக்கு காயம்: படப்பிடிப்பு ரத்து

மும்பை: ஐதராபாத்தில் நடந்த சினிமா ஷூட்டிங்கில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பின்போது நடந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஐதராபாத்தில் இருந்து மும்பை திரும்பினார். தற்போது, அவரது படப்பிடிப்பு ரத்து … Read more

நாகாலாந்தில் எதிர்கட்சிகள் இல்லாத ஆட்சி அமைகிறதா ?

நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பிப். 27ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் மார்ச் மாதம் 2ம் தேதி அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்தில் முந்தைய கூட்டணியான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி(என்டிபிபி) 40 தொகுதிகளிலும், பா.ஜ.க. 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் இதில் என்டிபிபி- 25, பா.ஜ.க.-12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. என்சிபி-7, என்பிபி-5, எல்ஜேபி(ராம் விலாஸ்), நாகா மக்கள் முன்னணி(என்பிஎஃப்), ஆர்பிஐ(அத்வாலே) ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், ஜேடி(ஐ) ஒரு … Read more

மகன், மகள்கள் பராமரிக்காததால் ரூ.1.5 கோடி வீடு, நிலத்தை அரசுக்கு அளித்த முதியவர்

லக்னோ: உ.பி. மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் நாது சிங் (85). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவருக்கு ஒரே மகன் சஹாரன்பூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 4 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. மனைவி காலமானதால் சொந்த வீட்டிலேயே நாது சிங் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு கிராமத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீடு, விவசாய நிலங்கள் உள்ளன. மகனும், மகள்களும் பராமரிக்காததால் முதியோர் இல்லத்தில் நாது சிங் சேர்ந்தார். அங்கும் யாரும் வந்து பார்க்கவில்லை. … Read more

திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்கிறார் மாணிக் சாஹா

திரிபுரா முதலமைச்சர் பதவிக்கு மாணிக் சாஹாவை பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். முதலமைச்சராக இருந்த விப்லப் குமார் கடந்தாண்டு ராஜினாமா செய்ததையடுத்து, மாணிக் சாஹா அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக 32 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான IPFT கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், அகர்தலாவில் நேற்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மாணிக் சாஹா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக நாளை மாணிக் சாஹா … Read more

வாலிபர் பின்தொடர்வதாக நடிகை புகார்: போலீஸ் விசாரணை

ஐதராபாத்: ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டில் கம்மத்து உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் ஷாலு சவுதாசியா. ஐதராபாத் கேபிஆர் பூங்காவில் 2021ம் ஆண்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது மர்ம நபர்கள் அவரை தாக்கி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து தப்பித்த ஷாலு, அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தார். மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, படங்களில் நடிப்பதையும் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது அதே இடத்துக்கு நடை பயிற்சி செய்ய ஷாலு செல்கிறார். … Read more