பிரதமருக்கு மிரட்டல் விடுத்தவர் விடுவிப்பு

புதுடெல்லி: 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மொகமது முக்தர் அலி என்பவர், ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசினார். மேலும் பிரதமர் மோடியைக் கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஆனந்த் பர்பாத் பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து முக்தர் அலியைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் முக்தர் அலியை, நீதிபதி ஷுபம் தேவதியா வழக்கிலிருந்து … Read more

இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது அரசின் முதன்மை நோக்கம்: பிரதமர் மோடி உரை

டெல்லி: இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது அரசின் முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் உடல்நலம், மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.80,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடுமையான நோய்களை தீர்க்க நாட்டில் நவீன சுகாதார கட்டமைப்பு அவசியமானது சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் சுகாதாரம் பற்றிய அணுகுமுறை தொலைநோக்கு பார்வை இல்லாதிருந்தது என்று பிரதமர் கூறியுள்ளார். கடுமையான நோய்களுக்கு, … Read more

லடாக்| எல்லை கிராமத்தில் மக்களுடன் தங்கிய மத்திய அமைச்சர்

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், லடாக்கில் உள்ள எல்லையோர கிராமத்தில் மக்களோடு ஒரு இரவு தங்கி அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். நாட்டின் எல்லையோர கிராமங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தம் நோக்கில் துடிப்பான கிராமங்களுக்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயிரத்து 400 எல்லையோர கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வலிமையான எல்லையோர கிராமங்கள்; வலிமையான நாடு எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த கிராமங்களை … Read more

இந்திய மாணவருக்கு தங்கள் விமானங்களில் பயணம் செய்ய தடை விதித்தது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் சக பயணி மீது மதுபோதையில்  சிறுநீர் கழித்த விவகாரத்தில் இந்திய மாணவருக்கு தங்கள் விமானங்களில் பயணம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்தது. இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆர்யா வோஹ்ரா என்ற இந்திய மாணவர் அதிக போதையில் இருந்ததாகவும், விமானப் பணியாளர்களின் அறிவுரைகளை கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து விமானப் பணியாளர்கள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை … Read more

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.

மார்ச் 6, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 6) சவரனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.42,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.5,250-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.42,000-க்கு விற்பனையாகிறது. 24 … Read more

இந்திய நீதித்துறை, ஜனநாயகம் பிரச்னையில் இருப்பதாக ராகுல் காந்தி பொய் குற்றச்சாட்டு: கிரண் ரிஜ்ஜூ

இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் பிரச்சினையில் இருப்பதாக வெளியுலகுக்கு ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ புகார் தெரிவித்துள்ளார். ஓடிசா மாநிலம் புவனேசுவரத்தில் பேசிய அவர், இந்திய நீதித்துறையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதும், நீதிபதிகளின் அறிவுத்திறனை பொது ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்பதுமே உண்மைநிலை என்றும் கூறினார்.  இந்தியாவின் புகழைக் கெடுக்கும் நோக்கில்,  நாட்டின் ஜனநாயகம் குறித்து வதந்திகளைப் பரப்பும் நோக்கில் எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றி … Read more

ஐதராபாத்தில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்

மும்பை: ஐதராபாத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் காயமடைந்ததால் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீடு திரும்பி விட்டதாக நடிகர் அமிதாப் பச்சன் டிவீட் செய்துள்ளார்.

கடலில் கூடுகிறது இந்திய கடற்படைத் தளபதிகள் மாநாடு

புதுடெல்லி: இந்திய கடற்படைத் தளபதிகளின் மாநாடு, நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ”2023-ம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. கடற்படைத் தளபதிகள் மட்டத்தில் ராணுவ-பாதுகாப்பு உத்தி போன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் புதுமையாக, கமாண்டர்கள் மாநாட்டின் முதல் கட்டம் கடலில், … Read more

கப்பலில் இருந்து ஏவி பிரமோஸ் ஏவுகணை சோதனை.. இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தகவல்

கப்பலில் இருந்து ஏவி பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை சோதித்துள்ளது.  இந்தியா, ரஸ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அந்த ஏவுகணை, உலகில் உள்ள மிகவும் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த ஏவுகணையை, அரபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பலில் இருந்து ஏவி கடற்படை சோதித்தது. அந்த ஏவுகணை திட்டமிட்டபடி தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.   Source link