டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு – 2வது முறையாக இன்று மீண்டும் ஆஜராகிறார் கவிதா

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் மகள் கவிதா, இரண்டாவது முறையாக இன்று மீண்டும் ஆஜராகிறார். டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப்படும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் … Read more

பென்ஷன் நிதியை திருப்பித்தர சட்டத்தில் இடமில்லை – மத்திய இணை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: பாஜக ஆட்சி இல்லாத ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் ஆகிய மாநில அரசுகள், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) செயல்படுத்த திட்டுமிட்டுள்ளன. இந்நிலையில், தேசிய பென்ஷன் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் அமைக்கப்பட்டு உள்ள பென்ஷன் நிதியில் உள்ள மாநில அரசின் பங்களிப்புகளை திருப்பித் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இதுதொடர்பான கேள்வி மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் பகவத் காரத் … Read more

2030ம் ஆண்டிற்குள் விண்வெளிச் சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற 2030ம் ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே, வல்லரசு நாடுகளில் பிரபலமாக இருக்கும் விண்வெளி சுற்றுலா திட்டத்தை இஸ்ரோவும் செயல்படுத்தவுள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளி சுற்றுப்பாதையில் 15 நிமிடங்கள் வரை சுற்றிவர, பயணி ஒருவருக்கு ஆறு கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயம் … Read more

மதுபோதையில் ஏடிஎம் எந்திரத்தை கடப்பாறையால் உடைக்க முயற்சி: கூலித்தொழிலாளிகள் இருவரை தேடும் தெலுங்கானா போலீஸ்..!!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் சைதன்யாபுரியில் உள்ள விக்டோரியா மினோரியால் மெட்ரோ ரயில் நிலையத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது. அங்கு இரவு குடிபோதையில் வந்த இருவர் கையில் வைத்திருந்த கடப்பாறையால் இயந்திரத்தை பெயர்த்தெடுக்க முயன்றனர். அதற்குள்ளாக சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் இருவரையும் பிடிக்க முயற்சிக்கவே இருவரும் தப்பினர். தகவலின் பேரில் அங்கு … Read more

கர்நாடக பாஜக எம்எல்சி வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி பரிசு பொருள்

பெங்களூரு: கர்நாடகாவில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி, வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சில வேட்பாளர்கள் பிரச்சாரத்திலும், பரிசுப் பொருட்கள் வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ராணிபெண்ணூர் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக எம்எல்சியுமான ஆர்.சங்கர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் … Read more

7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு – அறிவிப்பு எப்போது?

7 ஆவது ஊதியக் கமிஷன்: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 7 ஆவது ஊதியக் கமிஷனின் கீழ் தங்களது ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். மத்திய அமைச்சரவை எப்போது வேண்டுமானாலும் டிஏ உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  4 சதவிகித அகவிலைப்படி உயர்வு சாத்தியம் அரசு சார்பில் இந்த அறிவிப்பு வந்தால், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி … Read more

புதுச்சேரியில் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை ஏற்படுத்தப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இளைஞர்களின் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.  

சரஸ்வதி சம்மான் விருது தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு அறிவிப்பு..!!

1991 ஆம் ஆண்டு முதல் கே.கே. பிர்லா நிறுவனத்தால் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான இந்த விருதினைப் பெறுபவர்களுக்கு ரூ. 15 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்தியாவின் 22 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நூலுக்கு – சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. தமிழில் ஏற்கெனவே, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, அ.அ. மணவாளன் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றிருக்கின்றனர். விருது வழங்கப்படும் … Read more

ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டம் – ஆளும் கட்சி எம்எல்ஏ உட்பட 13 பேர் சஸ்பெண்ட்

அமராவதி: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் 12 எம்எல்ஏக்களை சபாநாயகர் நேற்று சஸ்பெண்ட் செய்தார். ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதன் 2-ம் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அவை நடைபெறாதவாறு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கேசவ், நிம்மல ராமாநாயுடு, ஆளும் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ கோடம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி ஆகிய 3 பேரை பட்ஜெட் … Read more

யமுனைக்கரையில் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பு குடியிருப்புகளை மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லியின் யமுனைக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பு குடியிருப்புகளை மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு வீடுகளை இடிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு டெல்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடிக்கும் பணிகளின்போது பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27ல், யமுனை நதியை தூய்மைப்படுத்தவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குடியிருப்புகளை இடிக்கும் உத்தரவை எதிர்த்து குடியிருப்புவாசிகள் தாக்கல் … Read more