பார்ஸி இணையத் தொடர் காட்சியை மீண்டும் உருவாக்க ஓடும் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த யூடியூபர்கள் இருவர் கைது..!!

அரியானா: அரியானாவில் வெப் தொடரில் ஒன்றில் வரும் காட்சியை போல ரூபாய் நோட்டுகளை வீசி எரிந்து வீடியோ எடுத்த யூடியூபர்களை போலீசார் கைது செய்தனர். அரியானாவில் குருகிராம் நகரில் இரவு நேரத்தில் ஓடும் காரில் இருந்து இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த காட்சிகள் சமூக  வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இளைஞர் ஒருவர் காரை ஒட்டி செல்ல டிக்கியில் துணியால் முகத்தை மறைத்து கொண்டு அமர்ந்திருந்த மற்றொரு இளைஞர் ரூபாய் நோட்டுகளை வீசி எறியும் காட்சிகள் … Read more

XBB.1.16 கொரோனா வைரஸ்: இந்தியாவில் மீண்டும் அலறவிடும் பாதிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு பலரின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டது. இதிலிருந்து மீண்டு வர இரண்டு ஆண்டுகள் ஆனது. இருப்பினும் கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கிவிட்டதா? என்றால் இல்லை என்பது தான் நிபுணர்களின் பதிலாக இருக்கிறது. உருமாறிய வைரஸ் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய மாதிரிகள் உருவாகி மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்திய அப்டேட்டாக வந்திருப்பது XBB.1 … Read more

என்ன ராசிப்பா இவரு… 2 மனைவிகளுடன் டைம் டேபிள் போட்டு குடும்பம் நடத்தும் நபர்!

திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்களின் சங்கமம் என்றும், இரண்டு பேர் ஒன்று சேர்வது என்றும்தான் பெரும்பாலும் திருமணம் குறித்து சமூகத்தில் சொல்லப்படுபவை. திருமணத்தைத் திட்டமிடுவதற்கும், மத நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் மரபுகளின்படி நடத்துவதற்கும் நிறைய மெனக்கடல்களும் உள்ளன. ஆணும் பெண்ணும் உறுதி எடுத்துக்கொள்வதன் மூலம், அவர்கள் தம்பதிகளாக மாறுகிறார்கள். இதன்மூலம்தான், சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது, மதிக்கிறது என்று தெரியும் என கூறப்படுகிறது. தம்பதியினருக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் உறுதியுடனும் இருப்பதும் … Read more

2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை கேரளா வருகை

திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமான மூலம் நாளை மதியம் 1.30 மணியளவில் கொச்சி வருகிறார். அங்குள்ள கடற்படை விமான நிலையத்திற்கு வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பின்னர் கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பார்வையிடுகிறார். இதையடுத்து ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு மிக உயரிய நிஷான் விருதை வழங்கி கவுரவிக்கிறார். இதன் பிறகு திருவனந்தபுரம் செல்கிறார். நாளை மறுதினம் காலை 9.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் வள்ளிக்காவில் உள்ள அமிர்தானந்தமயி ஆசிரமத்திற்கு … Read more

"இந்தியாவின் பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்படுகிறது?"- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை, மத்திய அரசானது அதானி குழுமம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த எலாரா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து “இந்திய பாதுகாப்பு தொடர்பான கருவிகளை, யார் என்றே அறியாத ஒரு நிறுவனத்திடம் எப்படி ஒப்படைக்க முடியும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “இந்தியாவின் ஏவுகணை மற்றும் ரேடார் மேம்படுத்தல் ஒப்பந்தம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்திற்கும், எலாரா என்ற சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு … Read more

புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா வைரஸின் துணை வைரஸான H3N2 வகையால் ஏராளமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இந்த வைரஸுக்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பெரும்பான்மையாக சிறுவர், சிறுமியர்களையே தாக்குகிறது. உடல்நலக்குறைவு ஏற்படுவதால் அவர்களால் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இந்த புதிய வகை … Read more

படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லி: படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க 8ஆயிரம் பெட்டிகள் தேவைப்படலாம் என மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதானி குழும தொடர்பான குற்றச்சாட்டுகளை கவனிக்குமாறு கடிதத்தில் காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

60 அடி ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு.. ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..

மத்தியபிரதேச மாநிலம் விதிஷாவில், 60 அடி ஆழ ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன், 24 மணி நேரப்போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான். நேற்று காலை சுமார் 11 மணியளவில், விவசாய நிலத்தில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைக்கிணற்றில், சுமார் 43 அடி ஆழத்தில் சிக்கிய லோகேஷை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, பொக்லைன் இயந்திர உதவியுடன் கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டி அவனை மீட்க முயற்சித்தனர். … Read more

அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை எங்கள் பேச்சை கேட்க கூட மறுத்து விட்டனர்: மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை எங்கள் பேச்சை கேட்க கூட மறுத்து விட்டனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது லண்டன் பயணத்தின் போது இந்திய ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்றம் … Read more