ஆம் ஆத்மியில் இருந்து விலகல் – கர்நாடக பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஸ்கர் ராவ்

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஸ்கர் ராவ் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், போட்டியிடும் நோக்கில் பெங்களூரு மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய பாஸ்கர் ராவ் கடந்த ஏப்ரலில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில், சமீபத்தில் மத்திய … Read more

உலகளவில் அனைவராலும் நேசிக்கப்படும் தலைவராக பிரதமர் மோடி விளங்குகிறார்: இத்தாலி பிரதமர் மெலோனி

டெல்லி: டெல்லி வந்த இத்தாலி பிரதமர் மெலோனி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். பிரதமர் துவக்கிவைத்த ரெய்சினா 2023 பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக இத்தாலி பிரதமர் பங்கேற்றுள்ளார். பின்னர், டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் சுகாதாரம், தூதரக மற்றும் கலாசார விவகாரங்கள் பற்றி விரிவான செயல்திட்டங்களை பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மத்திய வெளிவிவகார … Read more

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கோட்டையைத் தகர்த்த ‘திப்ரா மோதா’ – பின்புலம் என்ன?

அகர்டலா (திரிபுரா): திப்ரா மோதாவின் ‘கிரேட்டர் திப்ராலேண்ட்’ கோரிக்கையைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் என திரிபுரா மாநில பாஜக தெரிவித்துள்ளது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கோட்டையை திப்ரா மோதா கட்சி தகர்த்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பிப்.16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறன. தற்போதைய நிலவரப்படி, திரிபுராவில் பாஜக கூட்டணி 34 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. … Read more

வடகிழக்கு மாநிலங்களில் வாகை சூடும் பாஜக; பின்னனி குறித்த டீடெய்ல் ரிப்போர்ட்.!

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. பாஜக இந்துத்துவாவை பிரச்சாரம் செய்கிறது, இந்தியை திணிக்கிறது மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிரான அரசியலை பேசிவருகிறது. ஆனாலும் மாட்டிறைச்சி அதிகம் உண்ணும், பிராந்திய மற்றும் ஆங்கிலம் பேசும் பழங்குடிகளும், கிறிஸ்தவர்களும் அதிகம் உள்ள வடகிழக்கு … Read more

“ரஷ்யா – உக்ரைன் போரை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்”-பிரதமர் மோடி

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கமுடியும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியா வந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரதமர் மோடி ஆகியோர் இருதரப்பு ஆலோசனைக்கு பின், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை ஹைட்ரஜன், தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உற்பத்தி உட்பட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மெலோனி, ஜி 20 தலைமையை இந்தியா ஏற்றுள்ள … Read more

2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி

ஆந்திரா: ஆந்திராவில் 175 தொகுதிகளில் தனியாக போட்டியிட சந்திரபாபு நாயுடுவிற்கும், பவன் கல்யாணிக்கும் தைரியம் உள்ளதா? என முதல்வர் ஜெகன்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் நான்காவது ஆண்டிற்கான ஒய்எஸ்ஆர் விவசாயி பரோசா பிரதமர் கிசான் நிதியை முதல்வர் ஜெகன் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “மாநிலத்தில் இன்று போர் நடந்து வருகிறது.  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில்  சந்திரபாபுவுக்கும் … Read more

இப்படியும் ஒரு பண்டிகை…. பெண்கள் ஆண்களை குச்சியால் தாக்கும் ‘லாத்மர்’!

உத்தரபிரதேசம் மாநிலம், மதுராவின் பர்ஸானாவில் உள்ள ராதை கோயிலில் ஆண்டுதோறும் ‘லாத்மர்’ ஹோலி கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து ராதை போல் வேடமிட்டு வந்த பெண்கள், கேடயங்களை வைத்திருக்கும் ஆண்களை குச்சியால் அடித்து விளையாடினர். பின்னர் வண்ணங்களைப் பூசியும், ஆடி, பாடியும் மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து, இல்லத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தான் சரியான நேரம் என்று நினைத்து கணவரைப் போட்டு தாக்கும் பெண்களை பார்த்து அங்கிருந்தவர்கள் … Read more

மகாராஷ்டிராவின் கஸ்பா பெத் இடைத்தேர்தல்: பாஜக கோட்டையை தட்டிப் பறித்த காங்கிரஸ்

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் கஸ்பா பெத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரவிந்தர தன்கேகர் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஹேமந்த் ரசானேவை தோற்கடித்துள்ளார். 28 வருடங்களாக பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்த தொகுதியில் காங்கிரஸ் இந்த வெற்றியை ருசித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனோவில் உள்ள கஸ்பா பெத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ முக்தா திலக், சின்ச்வாட் தொகுதி பாஜக எம்எல்ஏ லக்‌ஷ்மண் ஜக்தப் ஆகியோர் இறந்ததைத் தொடர்ந்து பிப்.26-ம் தேதி அந்தத் தொகுதிகளில் … Read more

மணீஷ் சிசோடியா பாஜகவில் சேர்ந்தால் நாளைக்கே விடுதலை செய்யப்படுவார்; அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

புதுடெல்லி: மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் நாளைக்கே விடுதலை செய்யப்படுவார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பி உள்ளார். அதில், தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான அரசியலுக்கு பயந்த கோழைகள் மற்றும் பலவீனமான நபர்களின் சதி … Read more

ஹைதராபாத் | பேட்மிண்டன் விளையாடும்போது மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பாட்மிண்டன் விளையாடி கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத்தை சேர்ந்த ஷாம் யாதவ் என்ற இளைஞர் அலுவலக பணி முடிந்து வழக்கமாக விளையாடும் அரங்கில் பாட்மிண்டன் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு தரையில் சாய்ந்தார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் அருகிலுள்ள காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அந்த இளைஞர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சி … Read more