வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருவனந்தபுரம்: வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர். வைக்கம் போராட்ட வரலாற்றை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேசினார். வெற்றி பெருமிதத்தோடு இந்த வைக்கம் மண்ணில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம் என்று தெரிவித்தார்.

ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்

புதுடெல்லி: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காணொளி காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, ”பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்ட்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்ப அலைகள் வீசும் நாட்களின் … Read more

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். ராணிகமலாபதி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் நாட்டின் 11வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கிறார். போபால் ராணி கமலாபதி – டெல்லி ஹர்சத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

“2024 தேர்தல் நெருங்குவதால் பாஜக வன்முறையை கையிலெடுக்கிறது” – கபில் சிபல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: “2024 பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக வகுப்புவாத வன்முறைகளைக் கையிலெடுக்கத் தொடங்கி விட்டது. மேற்கு வங்கம், குஜராத்தில் நடந்தவை அதற்கான முன்னோட்டம் தான்” என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் பாஜகவும் திரிணாமூல் காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதேபோல, வியாழக்கிழமை நடந்த ராமநவமி கொண்டாட்டத்தின்போது குஜராத், … Read more

கொல்கத்தாவில் முதியவரை பாதித்த தாவர பூஞ்சை நோய் – உலகிலேயே முதல் பாதிப்பு

கொல்கத்தாவில் வசிக்கும் நபர் ஒருவருக்கு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மைகாலஜிஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் தாவரங்களின் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இந்த நபர் 61 வயதுடையவர். ஒரு தாவர மைக்கோலஜிஸ்ட் ஆவார். இந்த நபர் நீண்ட கால அழுகும் பொருட்கள், காளான்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் பூஞ்சைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரைப் போல் தாவர செடிகளில் வேலை செய்பவர்கள் யாரும் இதற்கு முன் தாவர பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டதில்லை. இப்போது தான் இந்த … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் திவ்ய தரிசன அனுமதி..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் திவ்ய தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நடைமுறை இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. திருப்பதி கோயிலுக்கு மலையேறி நடந்து வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க திவ்ய தரிசன முறை இருந்தது. மலையேறி நடந்து வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முன்னுரிமை ஏற்பாடாக சிறப்பு அனுமதி தரப்பட்டது.

விபத்தில் கணவரை இழந்த பெண்ணின் மறுமணத்தை காரணம் காட்டி இன்சூரன்ஸ் தொகையை மறுக்க முடியாது: ஐகோர்ட்

மும்பை: விதவை மறுமணமென்பது சமூகம் விலக்கி வைக்க வேண்டிய விஷயமல்ல. மறுமணம் செய்துகொண்டதாலேயே ஒரு பெண்ணுக்கு அவரது கணவரின் விபத்திற்கான இழப்பீட்டுப் பணத்தை தர மறுப்பதும் சரியல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2010-ல் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்தைக் கோரியிருந்தார். ஆனால், அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டை மறுத்தது. இதனை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த வழக்கில் மும்பை நீதிமன்றம் அவருக்கு … Read more

ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்… அகவிலைப்படி உயர்வை அறிவித்த மாநில அரசு!

DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவித்தது.  மேலும், இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், செலுத்த வேண்டிய கூடுதல் தவணையை அளிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் மார்ச் 25ஆம் தேதி முடிவு … Read more

இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கைது!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவரை மும்பை போலீசார் கைது செய்தனர். மும்பை வந்த 6E-1052 என்ற விமானத்தில் ஸ்வீடனை சேர்ந்த ஹரால்ட் ஜோனஸ் என்ற பயணியும் வந்துள்ளார். விமானப் பயணத்தின்போது அசைவ உணவு கேட்ட ஜோனஸ்க்கு அசைவ உணவை வழங்கிய பணிப்பெண், கட்டணம் செலுத்துவதற்காக ஏடிஎம் கார்டை கேட்டுள்ளார். அப்போது பணிப்பெண்ணின் கையை அவர் பிடித்து இழுத்ததுடன், சில்மிஷம் … Read more

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு; ஏப்.12ல் விசாரணை..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக அந்த அமைப்பின் தொண்டர் ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ராகுல் மீதான அவதூறு வழக்கு ஏப்ரல் 12ல் விசாரணைக்கு வர உள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளது.