போபால்-டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

போபால்: போபால்-டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில் 11வது வந்தேபாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். போபாலின் ராணி கமலாபதி-டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கிடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. 702 கி.மீ.பயணதூரத்தை 7.30 மணி நேரத்தில் கடக்கும் வந்தேபாரத் ரயிலின் அதிகபட்சவேகம் மணிக்கு 160 கி.மீ. பயணிக்கும்.

ஹவுராவில் நடைபெற்ற ராமநவமி பேரணியில் வன்முறை.. 144 தடையுத்தரவு அமல்.. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பாஜக புகார்!

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற ராமநவமி பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து, அங்கு 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில பாஜக தலைவர் உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு நிலவரம் குறித்து கொண்டு கேட்டறிந்தார். ஹவுராவில் வன்முறை தலைவிரித்தாடுவதாகவும் போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும் பாஜக வினர் புகார் தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு சீர் குலைத்து விட்டதால் மத்திய அரசு … Read more

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!

இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை … Read more

19 வயது இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் கைது!

பெங்களூருவில் 19 வயது இளம் பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ஆம் தேதி பெங்களூரு கோரமங்களா என்ற பகுதியில் ஒரு பூங்கா அருகே ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை நான்கு இளைஞர்கள் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. கோரமங்களா பகுதியில் இருந்து ஓசூர் முக்கிய சாலையில் பயணித்து அத்திப்பள்ளி வரை சுமார் 40 கிலோமீட்டர் காரில் சென்று பின்பு மீண்டும் கோரமங்களா … Read more

அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000ஐ கடந்தது. இதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ்,  இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மிதமானதும் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் … Read more

இன்று முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!!

உற்பத்தி செலவினம் அதிகரிப்பு,மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த விற்பனை விலைக் குறியீடு அதிகரிப்புக்கு ஏற்ப ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 11 சதவிகிதத்திற்கு மேல் உயர உள்ளது. அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் … Read more

இன்று முதல் தங்க நகைகளை விற்க புதிய கட்டுப்பாடு..!!

தங்க நகைகளை விற்க வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என இந்திய தர நிர்ணைய சென்னை மண்டல கிளையின் தலைவர் பவானி தெரிவித்தார். அதன்படி, தங்க நகைகளுக்கு இன்று முதல் கட்டாய HUID என்ற 6 இலக்க எண்ணெழுத்து அடிப்படையிலான ஹால் மார்க்கிங் முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறையினால் நகையை ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது அதனுடைய தரம் மற்றும் அதனை செய்தவரின் விவரம் முழுவதும் அறிய … Read more

ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக்கொண்டு பள்ளி சென்ற மாணவனை வகுப்பில் சேர்க்க மறுத்து வீட்டுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம்

தெலுங்கானாவில் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக் கொண்டு சென்ற மாணவனை பள்ளிக்கு வர தடை விதித்த நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து ஆஞ்சநேயர் பக்தர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிலாபத் மாவட்டம் உண்டூரில் இயங்கி வரும் செயிண்ட் பால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவன் அபினவ் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டு காவி ஆடை அணிந்த படி பள்ளி சென்றுள்ளான். இதனால் அபினவ்வை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம் சீருடையுடன் வருமாறு கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுபற்றி … Read more

ம.பி. கோயில் விபத்தில் பலி எண்ணிக்கை 35ஆக அதிகரிப்பு

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.  மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பழமைவாய்ந்த பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் ராமநவமி விழாவின்போது கிணற்றின் மீது இருந்த சிலாப் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் … Read more