அதிர்ச்சி! தாயின் உதவியுடன் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

தாயின் உதவியுடன் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நியூ அசோக் நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது தாய் படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்வதாக பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு கூட்டிச்சென்றுள்ளார். பின்னர் இருவரின் தங்கியிருந்த அறைக்கு தாய்க்கு தெரிந்த நபர் ஒருவர் வந்துள்ளார். மூவரும் அதே அறையில் இருந்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியின் வாயில் துணி வைத்து … Read more

“மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆவதில் என்ன தவறு?” – ஃபரூக் அப்துல்லா

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமராகக் கூடாது என்றும், பிரதமராவதில் என்ன தவறு என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இது ஒரு அற்புதமான தொடக்கம். நாட்டின் ஒற்றுமைக்காக ஸ்டாலின் சிறப்பான பங்களிப்பை … Read more

ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது; உலகை பேரழிவின் விளிம்பில் அமெரிக்கா வைத்துள்ளது: டெல்லி வந்த ரஷ்ய அமைச்சர் காட்டம்

டெல்லி: ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு தொடங்கிய நிலையில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதால், டெல்லியில் இன்றும், நாளையும் ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்றிரவு டெல்லி வந்தார். அவரை இந்திய அதிகாரிகள் குழு வரவேற்றது. அப்போது அவர் கூறுகையியில், ‘இந்தியாவின் ஜி-20 தலைமையை நாங்கள் ஆதரிக்கிறோம். அமெரிக்கா … Read more

கேம்ப்ரிட்ஜ் பல்கலை. விரிவுரைக்காக ராகுல் காந்தி புதிய தோற்றம்: இந்திய ஒற்றுமை யாத்திரைக்குப் பின் முடித்திருத்தம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர் முதல்முறையாக, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் விரிவுரையாற்ற செல்கிறார் ராகுல் காந்தி. இதற்காக அவர் தலைமுடி, தாடியை திருத்தம் செய்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை லண்டன் சென்றார். இந்த பயணத்தில், ராகுலின் கேம்ப்ரிட்ஜ் பல்கலை மாணவர்களுக்கு மட்டும் எடுக்க இருக்கும் விரிவுரையும் அடங்கும். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் (ஜேபிஎஸ்) கவுரவ விரிவுரையாளராக இருக்கும் ராகுல் காந்தி, … Read more

இந்து மதத்தை காக்க 3 ஆயிரம் கோயில்கள்; ஆந்திர அரசு அறிவிப்பு.!

ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாநிலத்தில் கோவில்கள் கட்டும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் வழிகாட்டுதலின் பேரில், இந்து மதத்தைப் பாதுகாக்கவும், பிரச்சாரம் செய்யவும் இந்த முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் கோட்டு சத்தியநாராயணா கூறினார். “இந்து நம்பிக்கையை பாரிய அளவில் பாதுகாக்கவும் பரப்பவும், நலிந்த பிரிவினரின் உள்ளாட்சிகளில் இந்து கோவில்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது” … Read more

ஆஸ்கர் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கிட்டும் பெருமை: விழா மேடையில் அரங்கேற்ற உள்ள 'நாட்டு நாட்டு'பாடல்

டெல்லி: ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலை நேரடியாக அரங்கேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்று பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. மார்ச் 13ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும் அப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான போட்டியில் உள்ளது.  இப்பாடல் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என படக்குழுவினர் நம்பிக்கை … Read more

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை தொடக்கிவைத்தார் ஜெ.பி.நட்டா

காமராஜ்நகர்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று தொடங்கிவைத்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: தற்போதைய கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்பாக, தேர்தல் நடத்தி புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். எனவே, கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற நிலை உள்ளது. விஜய சங்கல்ப யாத்திரைகள்: இந்நிலையில், இந்த தேர்தலை … Read more

கர்நாடக தேர்தல் 2023: தேவகவுடா குடும்பத்தில் டமால்… ஹாசன் சீட்டுக்கு வெடித்த சண்டை!

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை (மார்ச் 2) வெளியாகவுள்ளன. அடுத்த சில வாரங்களில் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிறது. ஏப்ரல் – மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக களம் மாறியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்குகள் இருந்தாலும் தற்போதைக்கு நிலைமை இப்படித்தான். இதில் குடும்ப ஆட்சி … Read more

மத்திய பிரதேசத்தில் ரயிலில் குண்டுவெடித்தது தொடர்பான வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை..!

மத்திய பிரதேசத்தில் ரயிலில் குண்டுவெடித்தது தொடர்பான வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் போபால் – உஜ்ஜயின் ரயிலில் குண்டுவெடித்ததில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட விசாரணையின்படி, லக்னோ பகுதியில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், ஆயுதங்கள், ஐ.எஸ். இயக்க கொடி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து, முகமது ஃபைசல் என்பவனை கைது செய்த என்.ஐ.ஏ., ரயில் குண்டுவெடிப்பிற்கும் அவனுக்கும் இருந்த … Read more

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது?: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா

காஷ்மீர்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா கூறியுள்ளார். எதிர்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம். முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒருங்கிணைந்த முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப்ரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.