புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜிப்மர் இயக்குநர் பட்டங்களை வழங்க பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பட்டமளிப்பு விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக அழைப்பிதழில் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை. அழைப்பிதழில் பெயர்  இல்லாத ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இதற்கு பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் கடும் … Read more

காஷ்மீர் பண்டிட்டை கொன்றவர் உட்பட 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சஞ்சய் சர்மாவை சுட்டுக் கொன்றவர் உட்பட 2 தீவிரவாதிகள் என் கவுன்ட்டரில் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அச்சன் பகுதியில் வசித்து வந்தவர் பண்டிட் சஞ்சய் சர்மா. வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றிய சர்மா, 26-ம்தேதி காலையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிரவாதிகளை தேடி வந்தனர். இந்நிலையில், புல்வாமா மாவட்டம் பட்கம்புரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில் போலீஸாரும் … Read more

அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகரில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது எம்.வி.கங்கா சொகுசுக் கப்பல்

எம்.வி.கங்கா சொகுசுக் கப்பல் அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகரில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது. இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் வாரணாசியில் தொடங்கி, 6 மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தைக் கடந்து  தீப்ருகரை இந்த சொகுசுக் கப்பல் வந்தடைந்துள்ளது. சுமார் 3,200 கிலோமீட்டர் தூரம் கப்பலில் பயணித்த 28 வெளிநாட்டவருக்கு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான குழுவினர் வரவேற்பு அளித்தனர். Source link

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. க்களை புதிய அமைச்சர்களாக நியமிக்க பரிந்துரை

டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை புதிய அமைச்சர்களாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை – தெலங்கானாவில் புதிய சட்டம் அமல்

ஹைதராபாத்: குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு அமல்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில், அரசு மருத்துவமனைகள் உட்பட அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு தனி ஆதார் அட்டையை கட்டாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிசு ஆதார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அக்குழந்தைக்கு தனி அடையாளம் பிறந்தவுடனேயே கிடைத்து விடுகிறது. இதனால், அக்குழந்தைக்கு தொடர்ந்து அனைத்து சலுகைகளும் கிடைக்க அந்த ஆதார் அட்டை உதவிகரமாக உள்ளது. … Read more

தீவிரவாதத்தைத் தூண்டும் நாடுகள் தண்டிக்கப்பட வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

தீவிரவாதத்தைத் தூண்டுவோர் மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா.மனித உரிமைகள் கூட்டத்தில் சாடினார். 52வது ஐநா.மனித உரிமைகள் மாநாட்டையொட்டி ஜெய்சங்கர் அனுப்பிய வீடியோ பதிவில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தானை விமர்சித்தார். தீவிரவாதத்தை உலக நாடுகள் ஒருபோதும் சகித்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.   Source link

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட நாள் ஆரோக்கியமான ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவீட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 140 தொகுதிகளில் வெல்லும் – அண்ணாமலை நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர் தலில் பாஜக 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக களமிறங்குகின்றன. இந்தத் தேர்தலுக்கு பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் … Read more

Old Pension Scheme: அரசு நடவடிக்கை எடுக்குமா? சமீபத்திய அப்டேட் என்ன?

ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து சமீபத்திய நாட்களில் பல விவாதங்கள் நடந்து வருகின்றன. பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களும் அடங்கும். இந்த மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கி, தேசிய ஓய்வூதிய முறையை அதாவது என்.பி.எஸ்-ஐ நிறுத்தி விட்டன. அதே சமயம், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் … Read more

நடப்பு நிதி ஆண்டில் மொபைல்போன் ஏற்றுமதி ரூ.82,620 கோடியாக உயரும் – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் மொபைல்போன் ஏற்றுமதி சுமார் 82ஆயிரத்து 620 கோடி ரூபாயாக  உயரும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொபைல் போன் உற்பத்திக்குத் தேவையான 99 சதவீத உதிரி பாகங்கள் உள்நாட்டிலேயே கிடைப்பதாகக் குறிப்பிட்டார். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சம் புதிய வேலைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 387 மாவட்டங்களில் 5ஜி தொழில்நுட்பம் … Read more