நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க கோரும் மனு மீது வரும் 27-ம் தேதி விசாரணை
டெல்லி: நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க கோரும் மனுவை வரும் 27-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு விவரங்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.