கரக்பூர் கோட்டம் ரானிடால் ரயில் நிலையத்தில் பணி காரணமாக மார்ச் 5-ல் குமரி – திப்ரூகர் ரயில் ரத்து

கரக்பூர்: கரக்பூர் கோட்டம் ரானிடால் ரயில் நிலையத்தில் 3-வது ரயில்பாதை பணி காரணமாக மார்ச் 5-ல் குமரி – திப்ரூகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மாலை 5.20-க்கு புறப்படும் கன்னியாகுமரி – திப்ரூகர் வாரம் இருமுறை ரயில் (15905) மார்ச் 5-ல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 7.25-க்கு புறப்படும் திப்ரூகர் – கன்னியாகுமரி ரயில் (15906) பிப்ரவரி 25-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் டெல்லியில் இருந்து பா.ஜவை அகற்றுவோம்: மம்தா பானர்ஜி பேச்சு

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால், டெல்லியில் இருந்து பா.ஜனதா ஆட்சியை அகற்றுவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இம்மாதம் 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் போட்டியிடுகிறது. இந்தநிலையில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மேகாலயாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் இல்லை. மருத்துவ … Read more

அடுத்தடுத்த தொடர் சரிவுகள்… இருப்பினும் கவலைப்படாமல் புதிய முதலீட்டில் இறங்கிய அதானி

அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், 442 மில்லியன் டாலர் முதலீட்டில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க இலங்கையின் முதலீட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, அதானியின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருவது எல்லோரும் அறிந்ததே. கடந்த ஜனவரி 24 முதல் அதானி குழுமத்தின் பங்குகள் மொத்தமாக 134 டாலர் பில்லியன் சந்தை மதிப்பை இழந்துள்ளன. குழுமத்தின் சந்தை மூலதனம் 100 டாலர் பில்லியனுக்கும் … Read more

கர்நாடக தேர்தல் 2023 கருத்துக்கணிப்பு: ஆட்சியை இழக்கிறதா பாஜக? காங்கிரஸ் விஸ்வரூபம்!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தம் 224 சீட்கள் இருக்கின்றன. இதில் 113 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும். தேர்தல் களத்தை பொறுத்தவரை காங்கிரஸ் , பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக அமைந்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகள் இதில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்குகளும் இருக்கின்றன. இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற … Read more

பிரதமரை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன்கேராவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: பிரதமரை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன்கேராவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பவன்கேராவுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் இருந்து ராஜஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பவன்கேராவை விமானத்தில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டது.     

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: அரவிந்த் கேஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்தினர். விசாரணைக்காக பிபவ் குமார் டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகினார். அவரது வாக்குமூலத்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பிபவ் குமார் … Read more

டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் ஊடகத் தலைவர் பவன்கேரா கைது: காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்

டெல்லி: ராய்ப்பூரில் நாளை நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுவிற்கு செல்வதற்காக  காங்கிரஸ் ஊடகத் தலைவர் பவன்கேரா விமானம் வந்தார். அங்கு டெல்லி போலீஸார் பவன்கேராவை தடுத்து நிறுத்தினர். இதனால் எம்.பி.க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் தர்ணாவில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் பவன் கேராவை விமானம் ஏற விடாமல் டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர், பின்னர் அஸ்ஸாம் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். … Read more

'நானும்தான் மாட்டிறைச்சி சாப்பிடுறேன்; அதை யாராலும் தடுக்க முடியாது' – மேகாலயா பாஜக தலைவர்

தங்கள் கட்சியில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், தானும் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும் கூறியிருக்கிறார் மேகாலயா பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி. பாஜக ஆளும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜகவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், தானும் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் மேகாலயா பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி. இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு எர்னஸ்ட் மாவ்ரி … Read more

பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் தங்கச் சுரங்கத்திற்கு நிகரானது – பிரதமர் மோடி

புதுடெல்லி: பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதது என்று பிரதமர் மோடி இன்று(பிப்.23) தெரிவித்தார். தொடர்ந்து அதில் முதலீடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி, 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பசுமை வளர்ச்சி குறித்த பல்வேறு அறிவிப்புகள் குறித்த இணையவழி கருத்தரங்கில் வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “பசுமை எரிசக்தித்துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நான் பங்குதாரர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு முதலீடு … Read more

புதுச்சேரி சட்டமன்றத்தில் மார்ச் 13-ல் முழு பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத்தில் மார்ச் 13-ல் முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டமன்றத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.