பிரதமர் மோடியுடன் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு – இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க ஆர்வம்

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று சந்தித்து பேசினார். இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவு குறித்து இருவரும் விவாதித்தனர். படம்: பிடிஐசர்வதேச நிதி நிறுவனமான ஆசிய வளர்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஏடிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் … Read more

கொள்ளை அடிக்க கோவிலுக்கு வந்து திருடனை அடித்து கொலை செய்த பாதுகாவலர்

ஐதராபாத் அருகே கொள்ளை அடிக்க கோவிலுக்கு வந்த திருடன், அங்கிருந்த பாதுகாவலர் கட்டையால் அடித்ததில் உயிரிழந்தான்.  குஷாய்குடாவை சேர்ந்த கட்டம் ராஜூ என்ற கொள்ளையன் அதே பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்குள் கொள்ளை அடிப்பதற்காக புகுந்துள்ளான். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைக்கும் போது உண்டான சப்தத்தால் அங்கு வந்த பாதுகாவலர் ரங்கையா தடுக்க முயன்றுள்ளார். அப்போது இருவருக்கும் நடந்த சண்டையில் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராஜூவின் தலையில் பலமாக தாக்கியதில் உயிரிழந்தான். Source link

பாஜவின் வெற்றிக்காக திரிணாமுல் போட்டி: மேகாலயாவில் ராகுல் குற்றச்சாட்டு

ஷில்லாங்:  பாஜவுக்கு உதவுவதற்காகவே மேகாலயா  தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேகாலயாவில் வரும் 27 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்டார். ஷில்லாங்கில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் அவர்  பேசியதாவது: பாஜ-ஆர்எஸ்எஸ் அமைப்பு தங்களுக்குதான் எல்லாம் தெரியும், எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறது. அதனால், யாரையும் மதிக்காமல் அவர்கள் செயல்படுகின்றனர். அவர்களை எதிர்த்து … Read more

ஊழல் தடுப்பு என்ற பெயரில் அரசியல் உளவு பார்த்ததாக புகார் – சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்கிறது சிபிஐ

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் துணை முதல்வரான மணிஷ் சிசோடியாவின் நிர்வாகத்தில் டெல்லியின் விஜிலன்ஸ் துறை செயல்படுகிறது. இதன் சார்பில் கடந்த 2015-ல் ‘ஃபீட்பேக் யூனிட் (எஃப்.பி.யு)’ எனும் புதிய பிரிவை அவர் தொடங்கினார். இதன் சார்பில் டெல்லியில் நடைபெறும் ஊழல்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர் அறிவித்தார். ஆனால் இந்த எஃப்.பி.யு ஆம் ஆத்மியின் அரசியல் ஆதாயத் … Read more

கொரோனா பயம்… 3 ஆண்டுகளாக வெளியே வரவே இல்லை… நடுங்கவைக்கும் சம்பவம்!

ஹரியானா குருகிராமின் சக்கர்பூர் பகுதியை சேர்ந்தவர் சுஜன் மாஜி. இவர், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி குறித்து, சக்கர்பூர் காவல்நிலையத்தில், அளித்த புகார் அதிர்ச்சிக்கரமான சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.  அதாவது, கொரோனா தொற்று பரவல் மீதான அதீத அச்சம் காரணமாக, சுஜன் மாஜியின் மனைவி முன்முன் மாஜி, பள்ளி மாணவனான தனது மகனுடன் கடந்த மூன்று வருடங்களாக வீட்டிலேயே தன்னை தானே பூட்டிக்கொண்டு, அடைப்பட்டிருப்பது அவர் கணவர் அளித்த புகார் … Read more

அதிமுக பொதுக்குழு முடிவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!!

டெல்லி : அதிமுக பொதுக்குழு முடிவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளிக்க, இரு நீதிபதி அமர்வு செல்லும் என தீர்ப்பளிக்க, இவ்வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.

கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகள் வீட்டிேலேயே முடங்கிக் கிடந்த தாய், மகன் கைது

ஹரியானாவில் கொரோனாவுக்கு பயந்து மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகன் மீட்கப்பட்டனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் சுஜன் மாஜி- முன்முன் மாஜி தம்பதியினர் 10 வயதுடைய மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா தொற்றின் போது கடைப்பிடித்த தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மிகத்தீவிரமாக முன்முன் மாஜி கடைபிடித்தார். கொரோனா பரவல் முடிந்து இயல்பு நிலைமை திரும்பிய பின்னும் முன்முன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இது குறித்து சுஜன் தன் … Read more

புதிய மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு..!!

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. பாஜக 104 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. இந்நிலையில், மேயர் தேர்தலுக்கு முன் 10 நியமன உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நியமித்தார். இதன் மூலம் டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இதனால் மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி – பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த … Read more

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல்களை தடுக்க ஸ்மார்ட் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்

அகமதாபாத்: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல்களை தடுக்க, துருபிடிக்காத, சேதப்படுத்த முடியாத நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையோரத்தில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் அடிக்கடி நடக்கும். எல்லை பகுதிகளில் ராணுவத்தை தாண்டி எல்லை பாதுகாப்பு படையினர்தான் முன்கள வீரர்களாக இருந்து, கண்காணிப்பு … Read more

ஜம்மு காஷ்மீரில் மக்கள் சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு தலைவர்கள் எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில் வசிப்போருக்கு சொத்து வரி விதிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. துணை நிலை ஆளுநர் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம், யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு ஏப்ரல் மாதம் முதல் சொத்துவரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகளுடன் சொத்து மதிப்பீடு வரி சேகரிப்புக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி … Read more