மார்ச் முதல் திருப்பதியில் விதிமுறைகள் மாறுகின்றன! முகத்தை காட்டி பெருமாளை தரிசிக்கவும்

திருப்பதி திருமலையில் இருக்கும் ஏழுமலையானை தரிசக்க லட்சக்கணக்கான பக்தர்கள் தினசை வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக ஆன்லைன் வழியாகவே சிறப்பு தரிசன டிக்கெட் முதல் தங்கும் விடுதிகள் வரை புக்கிங் செய்து கொள்ள முடியும் என்ற வசதியை திருப்பதி தேவஸ்தானம் செய்திருக்கிறது. இதில், தற்போது மேலும் ஒரு முன்னேற்றமாக, வைகுந்தம் 2 மற்றும் ஏஎம்எஸ் அமைப்புகளில் சோதனை அடிப்படையில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தான தொழில்நுட்ப மேம்பாடு இந்த வசதி மார்ச் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. … Read more

டெல்லி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றியது ஆம் ஆத்மி..!

டெல்லி மாநகராட்சியின் முதல் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மாநகராட்சியாக டெல்லி அறிவிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, மேயர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 3 முறை வெளியிடப்பட்டு பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற … Read more

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பியபோது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவ சேனா விவகாரம்: தேர்தல் ஆணைய முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் … Read more

அக்னிவீரர் திட்டத்தில் ஆட்களை சேர்க்க ஆன்லைனில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும்: மண்டல இயக்குநர்

டெல்லி: அக்னிவீரர் திட்டத்தில் ஆட்களை சேர்க்க ஆன்லைனில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என மண்டல இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். நேரடியாக உடல்தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு ஏப்ரம் 17ஆம் தேதி இந்தி, ஆங்கிலத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா: அரிய நோயால் உயிருக்கு போராடும் குழந்தை! பெயர் கூட சொல்லாமல் ரூ11 கோடி அனுப்பிய நபர்

கேரளாவைச் சேர்ந்த 16 மாத குழந்தையின் சிகிச்சைக்கு அடையாளம் தெரியாத நபர் ரூ.11 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தம்பதி சாரங் மேனன் – அதிதி. இருவரும் மும்பையில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இத்தம்பதியினரின் 16 மாத ஆண் குழந்தையான நிர்வானுக்கு முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோய் ஏற்பட்டது. இந்த குழந்தையின் சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து மருந்து வரவழைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து மருந்தை ஆர்டர் … Read more

அதிர்ச்சி! பிரபல டிவி தொகுப்பாளினி திடீர் மரணம்!!

கேரளாவை சேர்ந்த நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ் காலமானார். அவருக்கு வயது 42. பல வருடங்களுக்கு முன் ஏசியாநெட்டில் ஒளிபரப்பான சினிமாலா என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் சுபி சின்னத்திரையில் அறிமுகமானார். கனகசிம்ஹாசனம், காரியஸ்தான், ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், எல்சம்மா என்ன ஆங்குட்டி, பச்சகுதிர உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் மேட் ஃபார் ஈச் அதர், குட்டி பட்டாளம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெயர் பெற்றவர். கல்லீரல் பாதிப்பு காரணமாக சுபி ஆலுவாவில் உள்ள தனியார் … Read more

சமூக வலைதளங்களில் மோதல் | பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை – ரூபாவின் கணவர் இடமாற்றம்

பெங்களூரு: கர்நாடக அரசின் கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநரும், சசிகலாவின் மீது ஊழல் புகாரை தெரிவித்தவருமான ரூபா ஐபிஎஸ் நேற்று முன் தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் ஒன்றை கிளப்பினார். அதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக உள்ள ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மைசூருஆட்சியராக இருந்தபோது அப்போது அமைச்சராக இருந்த சா.ரா.மகேஷ் (இப்போது மஜத எம்எல்ஏ)உடன் மோதல் போக்கை கடைப்பிடித்தார். தற்போது அவருடன் உணவகம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கிறார். இருவருக்கும் இடையே … Read more

திருப்பதி கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள் நாளை(பிப்.23) வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள் நாளை(பிப்.23) வெளியிடப்படுகிறது. நாளை காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளமான tirupatibalaji.ap.gov.in மூலம் டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு.. அக்னி வீரர் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான ஆட் சேர்ப்பு அறிவிப்பு கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டின் கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்னி வீரர் பொதுப்பணி, தொழில்நுட்பம், க்ளார்க், ஸ்டோர் கீப்பர், ட்ரேட்ஸ்மேன் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுக்கு திருமணம் ஆகாத, 8ம் வகுப்பு மற்றும் 10ம் … Read more