உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் மனிதநேய நலனுக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கும்: பிரதமர் மோடி!

உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் மனிதநேய நலனுக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து உதவும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா நாடுகளில் ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தாயகம் திரும்பிய குழுவினருடன் கலந்துரையாடிய வீடியோவை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  2 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தி 7 ஆயிரத்து 500 பேருக்கு சிகிச்சை அளித்ததாகவும், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஏராளமானவர்களை பாராசூட் … Read more

அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது இமாச்சல அரசு

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை இமாச்சல அரசு கலைத்துள்ளது. அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து தேர்வாணையத்தை கலைத்து இமாச்சல முதல்வர் சுங்விந்தர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து துறை வாரியாகவும், காவல்துறை மூலமும் விசாரணை நடத்தப்பட்டது.    

இதுவல்லவா பாசம்! நீதிமன்றம் சென்று போராடி தந்தைக்கு கல்லீரல் தானம் செய்த 17 வயது சிறுமி!

கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தன் தந்தைக்கு கல்லீரலைத் தானமாக வழங்கி, அவருடைய உயிரைக் காப்பாற்றியிருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்கிய மகள் மகள்கள் எப்போதும் தந்தைக்கு தேவதைகளாகவும், தந்தையர் எப்போதும் மகள்களுக்கு தெய்வமாகவும் மதிக்கப்படுகின்றனர். பெற்ற மகன்களே இந்த காலத்தில் பெற்றோரைக் கைவிடும் நிலையில், பெண் பிள்ளைகள் பலர் இன்று தன் பெற்றோரைப் பேணிக்காத்து வருகின்றனர். அதிலும், அப்பாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடிப் போய் நிற்கின்றனர். ஆம், … Read more

சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட கர்நாடக பெண் உயர் அதிகாரிகள் மீது ‘நடவடிக்கை’

பெங்களூரு: கர்நாடக மாநில கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருந்தவர் ரூபா ஐபிஎஸ், இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக பணியாற்றியவர் ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ். இருவரும் அவர்களது பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். இருவருக்கும் புதிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் ரூபா ஐபிஎஸ், ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மீது அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள்தான். சமூக வலைதளங்களில் இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதற்கு ரோஷினி சிந்தூரியும் பதிலடி கொடுத்திருந்தார். அரசு பெண் … Read more

பெண் அதிகாரியின் அந்தரங்கம்.. லீக்கான போட்டோக்கள்… கர்நாடகாவில் பரபர

கர்நாடகாவில் பிரபல இரு பெண் அதிகாரிகள் அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் பகிர்ந்து மாறி மாறி தாங்கிக்கொள்ளும் சம்பவம் அம்மாநில அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் உள்துறை அமைச்சகமும் கொதிப்பாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்தவர்தான் ரூபா மௌத்கில் ஐபிஎஸ். இவர் தற்போது, கர்நாடக கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் … Read more

சினிமா பட பாணியில் சம்பவம்: விசாரணைக்கு அழைத்துச்சென்ற வாலிபர் சித்ரவதையால் சாவு? 4 போலீசார் சஸ்பெண்ட்

திருமலை: தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துவந்தது. இதுதொடர்பாக, அதே மாவட்டத்தை சேர்ந்த காதர்(35) என்பவரை மேடக் டவுன் போலீசார் கடந்த ஜனவரி 29ம் தேதி விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். பிப்ரவரி 3ம் தேதி வரை காவல்நிலையத்தில் வைத்து காதரை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் உடல்நலம் பாதித்த காதர், ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் 2 சிறுநீரகங்கள் பாதித்த நிலையில் கடந்த 18ம் தேதி இறந்தார். இதையடுத்து பிரேத … Read more

"இது நாடகம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்"  – சத்தீஸ்கர் சோதனை குறித்து அசோக் கெலாட் கருத்து

ஜெய்பூர்: “சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை வெறும் நாடகம் என்று மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்” என ராஜஸ்தான் முதல்வர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக அவர்கள் (பாஜக) என்ன செய்தியை சொல்ல விரும்புகிறார்கள்? சத்தீஸ்கரில் நடந்த சோதனைகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் கோபமடைந்துள்ளனர். இவைகள் எல்லாம் … Read more

ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ், டி.ரூபா ஐபிஎஸ் ட்ரான்ஸ்பர்; சீக்ரெட் போட்டோ லீக்… கர்நாடக அரசு அதிரடி!

கர்நாடக மாநில அரசியலில் இரண்டு பெண் அதிகாரிகளால் பரபரப்பு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ், கைவினைப் பொருட்கள் வளர்ச்சி கழக இயக்குநர் டி.ரூபா ஐபிஎஸ் ஆகியோருக்கு இடையில் நடந்த சமூக வலைதள மோதலை கண்டு ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சி அடைந்தது. அந்தரங்க புகைப்படங்கள் ரோகிணி சிந்தூரியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் டி.ரூபா வெளியிட்டார். இவற்றை இரண்டு, மூன்று ஐஏஎஸ் ஆண் அதிகாரிகளுக்கு … Read more

பொதுவெளியில் மோதல் எதிரொலி!: கர்நாடக பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. அரசு அதிரடி..!!

பெங்களூரு: கர்நாடகாவில் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக் கொண்ட பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி மீது பொதுவெளியில் குற்றச்சாட்டு கூறிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரூபா குற்றச்சாட்டுக்கு பதிலடியாக அறிக்கை வெளியிட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடையேயான மோதலில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிஎஸ் … Read more

தெலங்கானா: தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு -பதறவைக்கும் வீடியோ!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தெருநாய்கள் சூழ்ந்துக்கொண்டு கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்த கங்காதர், வேலை நிமித்தமாக ஹைதராபாத் நகரில் பாக் ஆம்பர்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஆம்பர்பேட்டையில் உள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வரும் கங்காதர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார். அதில் அவரது 5 வயது மகன் பிரதீப் அங்கிருந்த ஆட்டோமொபைல்ஸ் கடை … Read more