15 வயது முஸ்லீம் பெண் திருமணம் செய்துகொள்ளலாமா? உச்சநீதிமன்றம் விசாரணை.!

முஸ்லீம் பெண் பருவமடைந்த பிறகு விருப்பப்பட்ட நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. 15 வயது பூர்த்தியடைந்த பருவமடைந்த முஸ்லீம் பெண் தனிப்பட்ட சட்டப்படி, சட்டப்பூர்வ மற்றும் செல்லுபடியாகும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை வேறு எந்த வழக்கிலும் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை … Read more

TTD: திருப்பதி திருமலையில் தங்கும் அறை வாடகை உயர்த்தப்பட்டதா? இதோ விளக்கம்

திருப்பதி: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, லட்டு வழங்கும் கவுன்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில், TTD விரைவில் கூடுதல் கவுன்டர்களை அமைக்கும் என தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமையா பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்திர டயல் யுவர் இஓ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அவர், லட்டு வளாகத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க 50 கவுன்டர்கள் தற்போது 24 … Read more

நாளை மகர விளக்கு பூஜை சபரிமலையில் பக்தர்கள் குவிகின்றனர்: 2 நாள் ஆன்லைன் முன்பதிவு ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை நாளை நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இன்றும், நாளையும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (31ம் தேதி) முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கின. மண்டல காலத்தை விட மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. தினமும் சராசரியாக … Read more

கேரள பள்ளிகளில் இனி ‘சார்’, ‘மேடம்’ என அழைக்கத் தேவையில்லை… எல்லோரும் ‘டீச்சர்’ தான்!

திருவனந்தபுரம்: கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் என்றும் ஆசிரியைகளை மேடம் என்றும் கூப்பிடும் வழக்கத்தை விடுத்து அனைவரையும் டீச்சர் என்று பாலின சார்பற்று அழைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்த ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கல்வி பயிற்றுவிப்பவர்களை பாலின அடிப்படையில் சார், மேடம் என்று அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதனை பரிசீலனை செய்து கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் … Read more

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறை வாடகை உயர்வு? – தேவஸ்தானம் விளக்கம்!

‘திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளின் வாடகை உயர்த்தப்படவில்லை’ என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல் அலுவலர் தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக 50 – 100 ரூபாய் குறைந்த வாடகையில் அறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திருப்பதி மற்றும் திருமலையில் 7,500 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அறைகள் 120 கோடி ரூபாயில் வெந்நீர் … Read more

கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி தத்தளித்த 2 மாணவர்கள் மீட்பு..!

புதுச்சேரியில், ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி ஐஐடி மாணவர்களை, தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க புதுச்சேரி சென்ற டெல்லி ஐஐடி மாணவ-மாணவிகளில் சிலர், கடற்கரையை சுற்றிப்பார்க்க சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது, இரண்டு மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர். இதனை கரையில் இருந்து பார்த்த மாணவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியகடை காவலர்கள் சக்திவேல், … Read more

ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவர் சரத் யாதவ் உடலுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் அஞ்சலி

டெல்லி: ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவர் சரத் யாதவ் உடலுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் அஞ்சலி செலுத்தினார். டெல்லி சத்தர்பூர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள சரத் யாதவ் உடலுக்கு மலர் வளையம் வைத்து டி.ஆர்.பாலு அஞ்சலி செலுத்தினார்.

'பெண் பயணி மீது நான் சிறுநீர் கழிக்கல..!' – கோர்ட்டில் ஷங்கர் மிஸ்ரா பல்டி!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷங்கர் மிஸ்ரா, “அவர் மீது தான் சிறுநீர் கழிக்கவில்லை,” என, நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியின் இருக்கை அருகே நின்று … Read more

உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கங்கை உள்ளிட்ட 27 நதிகள் வழியாக 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலான எம்.வி கங்கா விலாஸ் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அசாமின் திப்ருகார் வழியாக வங்க தேசத்திற்கு எம்.வி கங்கா விலாஸ் கப்பல் செல்கிறது. இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 27 நதிகளை இக்கப்பல் கடந்து செல்ல உள்ளது. 62 மீட்டர் … Read more

டெல்லியில் கடும் குளிரிலும் 74வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை மேற்கொள்ளும் இராணுவ வீரர்கள்

டெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு டெல்லியில் கடும் குளிர் வாட்டி வருகிறது. ஜனவரி 26ஆம் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஒத்திகை அணிவகுப்பை இராணுவ வீரர்கள் கடும் குளிரிலும் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் குளிர்காலங்களில் அதிகப்படியான குளிர் பதிவாகும் நகரங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி இருந்து வருகிறது. இதனிடையே டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கடும் குளிர் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 15 … Read more