2023 – 24ம் நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

டெல்லி: 2023 – 24ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று 5வது முறையாக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் இன்றைய பட்ஜெட், தற்போதைய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் மடிக்கணினி மூலம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி … Read more

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்.. எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் 2023-24 மத்திய பட்ஜெட்

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2023- 24ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒட்டுமொத்த உலகமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்றுநோக்குவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாகவும் அடுத்தாண்டில் 6.5%ஆகவும் இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த 2019ம் ஆண்டு நிதிநிலை … Read more

மோர்பி கேபிள் பாலம் விபத்து – ஒரேவா குழுமத்தின் இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்

அகமதாபாத்: குஜராத் மோர்பி கேபிள் பாலத்தை பராமரிக்கும் ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநர் ஜெய்சுக் படேல் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த கேபிள் பாலம் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கியது. இப்பாலம் ஒரேவா குழுமத்தால் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபர் 30-ம் தேதி இப்பாலத்தில் சுமார் 300 பேர் நின்றிருந்த நிலையில் அது அறுந்து விழுந்தது. இதில் … Read more

பட்ஜெட்டில் அதிக வார்த்தைகள் பேசியது யார் தெரியுமா…? – சுவாரஸ்ய தகவல்கள்

Tradition & Trivia Of Union Budget: மத்திய பட்ஜெட் என்பது வெறும் புள்ளிவிவரங்கள் அல்லது வரிவிதிப்பு விதிகள் மட்டுமல்ல, அதற்கென்று ஒரு பாரம்பரிய பக்கமும் உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய நாட்களில் ஒன்றான பட்ஜெட், தாக்கல் போது சில விதிகள் உள்ளன. அல்வா தயாரிப்பதில் இருந்து, எடுத்துச் செல்லப்படும் ஆவணங்கள், பேச்சு, அச்சிடும் இடம் மற்றும் பலவற்றிற்கு, பல வரலாறுகள் உள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரதமர் மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி … Read more

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் ராமர் கோயில் கட்ட வேண்டும் – முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அலிகர் நகரில், நாட்டின் பழமையான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது சர் சையது அகமது கான் எனும் அறிஞரால் நிறுவப்பட்டது. எனினும் இங்கு இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் கல்வி பயின்று வருகின்றனர். இதன் வளர்ச்சியை பார்த்து உ.பி.யின் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. மத்திய பல்கலைக்கழகமான இதில் பல சிறிய கோயில்கள் அமைந்துள்ளன. எனவே அலிகர் பல்கலைக்கழக வளாகத்திலும் ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது … Read more

Budget 2023: பட்ஜெட் உரையை தமிழில் எவ்வாறு டவுண்லோட் செய்வது?

பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி 11 மணிக்கு புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக உள்ளார். அந்த வகையில் நிதியமைச்சர் சீதாராமனின் பட்ஜெட் 2023 உரையை நீங்கள் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் நேரடியாகக் காணலாம். அத்துடன் பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்பட்டவுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முழு பட்ஜெட் உரையையும் நீங்கள் பட்ஜெட் 2023 இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும். பட்ஜெட் 2023: … Read more

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.  குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்கு பிறகு நிதியமைச்சர் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட் 2023-24க்கு ஒப்புதல் பெறுவார். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் குடியரசு தலைவருடன் சந்திப்பு மேற்கொண்டனர்.

'இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு நேர்ந்தது விபத்துதான்; கொலை அல்ல'-பாஜக அமைச்சர் பேச்சு

‘இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு நேர்ந்தது விபத்துதான்; கொலை அல்ல’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் உத்தரகாண்ட் மாநில அமைச்சர் கணேஷ் ஜோஷி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் மேற்கொண்டார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்த நடைபயணத்தை 150 நாட்களுக்கு ராகுல் காந்தி … Read more

அரசுப் பேருந்துகள் உள்பட 9,00,000 வாகனங்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடை..!!

சாலைகளில் ஓடும் மிகவும் பழைய, கரும்புகை மூலம் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கழித்துக்கட்டுவதே ‘பழைய வாகன அழிப்புக்கொள்கை’யின் நோக்கமாகும். ஸ்கூட்டர், பைக், கார் உள்ளிட்ட தனி நபர் வாகனங்கள் 20 ஆண்டுகளும் லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகளும் ஓடியிருந்தால் அவை கட்டாயம் பரிசோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாகனங்கள் மோசமான நிலையில் இருந்தால் அழிப்புக்கு அனுப்ப அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள். அவ்வாகனங்கள் பயன்பாட்டுக்கு உரியவை என தெரியவந்தால் கூடுதலாக 5 ஆண்டுகாலம் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்பட்டு பிறகு, … Read more