மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: ‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது! ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்

புதுடெல்லி: மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில், தகவல் யுத்தத்தை பிபிசி நிறுவனம் நடத்தி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அங்கு நடந்த கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆவணப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படத்திற்கு ரஷ்யா … Read more

குஜராத் மோர்பி பாலம் வழக்கு – ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்

குஜராத் மாநிலம் மோர்பி பாலம் இடிந்து விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேல், மோர்பியில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தில், 135 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கடந்த வாரம் 1,262 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள … Read more

பெண் சீடரை கற்பழித்த வழக்கு.. சாமியார் ஆசாரம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை..!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாரம் பாபு. இவர் தன்னைத்தானே கடவுள் என்று சொல்லிக் கொள்பவர். இவருக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. குஜராத் மாநிலம் ஆமதாபாத் புறநகரில் உள்ள ஆசிரமத்தில், சூரத் நகரைச் சேர்ந்த ஒரு பெண், சீடராக இருந்தார். அவர் ஆசிரமத்திலேயே தங்கி இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை சாமியார் ஆசாரம் பாபு, தன்னை பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு அப்பெண் போலீசில் … Read more

வைரலாகு வீடியோ..!! முதலையிடம் மாட்டிக்கொள்ளும் மானை காப்பாற்றும் யானை..!

தண்ணீர் பற்றாக்குறையால் யானை, மான் உள்ளிட்டவை எல்லாம் ஒரே இடத்தில் தண்ணீர் பருகி கொண்டிருந்தன . அந்த தண்ணீருக்குள் தான் முதலையும் இருந்திருக்கிறது என்பது அந்த மானிற்கு தெரியவில்லை. வேட்டைக்காக சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முதலை அதன் தந்திர வேலைகளையும் அரங்கேற்றியது முதலைகளை பொறுத்தவரை தண்ணீருக்குள் இருந்தால், அவற்றின் அசைவுகள் துளிகூட மேலே தெரியாது. எந்தவொரு சமிக்கையையும் காட்டாமல் புத்திசாலித்தனமாக இரைக்காக காத்துக் கொண்டிருக்கும். அப்படி தான் இந்தமுறையும் இரைக்காக காத்திருக்கிறது. மான் குட்டி … Read more

“நாட்டில் நிகழும் மாற்றங்களை விளக்கியது குடியரசுத் தலைவரின் உரை” – பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: நாட்டில் பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து விளக்கும் வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரை இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது. இதை முன்னிட்டு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், அரசின் திட்டங்கள் குறித்தும், அதனால் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். வளர்ந்த நாடாக இந்தியா மாற … Read more

‘முஸ்லிம் நடிகர்கள் தான்..!’ – கங்கனா ரனாவத்தின் லேட்டஸ்ட் சர்ச்சை.!

தமிழில், தாம்தூம் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பேசும் தலைவி திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து நடிகை கங்கனா ரனாவத் வன்முறை தூண்டும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருசில … Read more

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளது. உச்சநீதிமண்டத்தில் தாக்கல் செய்த கூடுதல் மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வலிவுறுத்தியுள்ளது. கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.இது தொடர்பான வழக்கு விசாரணை , சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த … Read more

விமானத்துக்குள் திடீர் மோதல்… ஊழியரை தாக்கிவிட்டு அரைநிர்வாணமாக நடந்த பெண் பயணி?

இத்தாலியைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், விமானத்தில் அரை நிர்வாணமாக நடந்துகொண்டதும், பெண் ஊழியரைத் தாக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக விமானத்தில் நடைபெறும் சம்பவங்கள் சமூகவலைதளங்களில் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. அந்த வகையில், இத்தாலியைச் சேர்ந்த நேற்று (ஜனவரி 30) அபுதாபியில் இருந்து மும்பை நோக்கி சென்ற விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான UK 256 என்ற விமானத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாவ்லா பெரூசியா என்ற பெண், மேற்குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்வதற்கு எகானமி பிரிவில் டிக்கெட் வாங்கியிருந்தார். விமானம் … Read more

ஸ்ரீசைலம் மலைப்பாதையில் பேருந்து விபத்து தடுப்பு சுவரால் உயிர் தப்பிய 35 பயணிகள்

ஸ்ரீசைலம்: ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், ஸ்ரீசைலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் மகபூப் நகருக்கு தெலங்கானா மாநில அரசு பஸ் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது ஸ்ரீசைலம் அணைக்கட்டு அருகே இந்த பஸ் மலைப்பாதையில் சென்றபோது, ஒரு வளைவில் அந்த பஸ் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரை மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிருஷ்டவசமாக அந்த பஸ் அந்த தடுப்பு சுவருக்கு அப்பால் போடப்பட்டிருந்த இரும்பு கம்பியின் உதவியால், கீழே பல நூறு அடி பள்ளத்தில் விழாமல் … Read more

‘நோபல் பரிசு பெற்றவருக்கே இந்த நிலையா.?’- பாஜகவை பொளந்த மம்தா.!

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியா சென். ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சிறுபான்மையினர் விரோத போக்கு, வெறுப்பு பேச்சு உள்ளிட்ட செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தியா முஸ்லீம்களை தனிமைபடுத்தி ஒதுக்குவதற்கு ஒரு நாள் வருத்தப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் கடந்த 24ம் தேதி சாந்திநிகேதனில் முறைகேடாக வைத்துள்ள நிலங்களை ஒப்படைக்க கோரி நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம் … Read more