நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான்! இதுவரை எத்தனை பேர்?

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5ஆவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் பற்றி இப்போது பார்க்கலாம். 1. சண்முகம் செட்டியார்: நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான். கடந்த 1947-ல் சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முதல் பட்ஜெட்டை தமிழரான சண்முகம் செட்டியார் சமர்ப்பித்தார். 2. கிருஷ்ணமாச்சாரி: இதன்பின் 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழரான கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது முதல் பட்ஜெட்டில்தான் வரி தொடர்பான முக்கிய சீர்திருத்தங்கள் … Read more

தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழக்கு – ஸ்ரீநகரில் ஹுரியத் மாநாடு அலுவலகம் முடக்கம்

ஸ்ரீநகர்: தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஹுரியத் மாநாடு அமைப்பின் ஸ்ரீநகர் அலுவலகத்தை தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) முடக்கியுள்ளது. 23 பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பான ‘அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு’ கடந்த 1993-ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு திரட்டும் நிதியை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக என்ஐஏ தொடர்ந்த வழக்கை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் … Read more

இது சாமானியர்களுக்கான பட்ஜெட்; பெரிய நம்பிக்கை கொடுத்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இவர் குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் ஆற்றும் முதல் உரை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் பட்ஜெட்டை உலகமே உற்றுநோக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் முதல்முறை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார். இது மகத்தான … Read more

தீவிரவாதத்தை ஒடுக்கியதில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்கியதில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். முத்தலாக் முறை ரத்து விவகாரத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் ஒன்றிய அரசு சிறப்பாக செயல்பட்டது. மத்தியில் தற்போது ஆளும் அரசு எதற்கும் அச்சப்படாமல் முடிவெடுக்கும் அரசு. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு முக்கியத்துவம் எனவும் கூறினார்.

”செத்தாலும் கவலையில்லை..”.. 2 கிட்னிகளை இழந்த பெண்ணை நிர்கதியாக விட்டுச் சென்ற கணவர்!

சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவரே திருடிய சம்பவம் பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. பீகாரின் முசாஃபர்புர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா தேவி (38) என்ற பெண் தனது வயிறு வலி இருந்ததால் பரியாப்பூரில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். அங்கு சுனிதாவை பரிசோதித்த மருத்துவர், கர்ப்பப்பையில் இருக்கும் தொற்று நீக்க சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனச் சொல்லி கடந்த ஆண்டு … Read more

அதிரடி! இந்தியாவில் 9 லட்சம் வாகனங்களுக்கு தடை!!

மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக, பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையின்படி ஏப்ரல் 1 முதல் 9 லட்சம் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாட்டில் கார்பன் வெளியேற்றம் இல்லாத நிலையை எட்டுவதை இலக்காகக் கொண்டு, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்காக பழைய வாகன அழிப்புக் கொள்கையை பிரதமர் … Read more

மும்பை வந்த விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த இத்தாலி பெண்: போலீஸ் வழக்கு

புதுடெல்லி: அபுதாபியில் இருந்து மும்பை நோக்கிவந்த விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான UK 256 விமானத்தில் பெண் ஒருவர் தகராறு செய்து அரை நிர்வாணக் கோலத்தில் அலைந்த சம்பவம் நடந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்ற அந்தப் பெண் விமானத்தில் எகானமி பிரிவில் பயணம் செய்ய டிக்கெட் பெற்றிருந்தார். ஆனால் அவர் திடீரென பிசினஸ் வகுப்பில் இருக்கை கோரி தகராறு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் ஆடைகள் சிலவற்றை கலைந்து அரை நிர்வாணக் கோணத்தில் அங்குமிங்கும் அலைந்து … Read more

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்துக்கு உரையாற்ற புறப்பட்டார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்துக்கு உரையாற்ற  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புறப்பட்டார். குதிரைப்படை புடை சூழ காரில் குடியரசு தலைவர் நாடாளுமன்றம் செல்கிறார்.

உயிரே போனாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் – நிதிஷ் குமார் திட்டவட்ட பதில்

பாட்னா: பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அதைக்காட்டிலும் இறந்து போவது மேலானது என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பிரதமர் மோடியின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்கள்தான் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது பொய் வழக்குகளை தொடுத்து வருகின்றனர். இனி பாஜகவுடன் கூட்டணி என்பதைக் காட்டிலும் அதை விட உயிர்துறப்பது எவ்வளவோ மேலானது. நாடாளுமன்றத் தேர்தலில் பிஹாரில் உள்ள … Read more

இந்தியாவிலும் வாழ்ந்துள்ள டைனோசர்கள்! 256 முட்டைகள் கண்டுபிடிப்பு!

டைனோசர்கள் பற்றி நாம் சிறுவயதிலிருந்தே பல கதைகளை கேட்டறிந்திருப்போம் ஆனால் டைனோசர்களை பற்றி கூறும் பலரும் ஒருமுறை கூட டைனோசரை பார்த்ததாக கூறியதில்லை.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழும் காலத்திற்கு முன்பிலிருந்து டைனோசர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.  டைனோசரின் உருவம் பற்றிய பல புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்த்திருக்கிறோம்.  டைனோசர் பற்றிய கற்பனைகளும் நமக்கு சிறுவயதிலிருந்தே இருந்திருக்கக்கூடும், நமக்கு தெரிந்தவரை டைனோசர் உருவ அளவில் பெரியதாக இருக்கும்.  சில ஆய்வுகளின்படி டைனோசர் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழவில்லை என்றும் … Read more