திக் விஜய் சிங்குக்கு பதிலடி வீடியோ வெளியிட்ட சட்ட அமைச்சர்

புதுடெல்லி: ஜம்முவில் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், பாலகோட் தாக்குதல் குறித்த ஆதாரங்களை அரசு வெளியிடவில்லை, பொய்களை மட்டுமே வைத்து பாஜ ஆட்சி செய்கிறது என்று விமர்சித்து இருந்தார். இந்நிலையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னாள் விமான படை அதிகாரி ரகுநாத் நம்பியாரின் வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவில் விமானப்படை மார்ஷல் ரகுநாத் நம்பியார், ‘‘பாலகோட் தாக்குதல் அமோக வெற்றி பெற்றது. தாக்குதலை நடத்திய … Read more

10 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு – மனநலம் குன்றியவரை தேடும் பெங்களூர் போலீஸார்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்றான கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் பூ, காய்கறி, பழம், துணி, மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கே.ஆர்.மார்க்கெட் சாலை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்றுகாலையில் கே.ஆர்.மேம்பாலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் கோட் சூட் அணிந்து அவரது கழுத்தில் பெரிய கடிகாரத்தையும் தொங்கவிட்டிருந்தார். திடீரென மேம்பாலத்தில் சென்ற வாகனங்களை நிறுத்திய அவர், தனது பையில் இருந்த … Read more

பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தைத் திரையிட எதிர்ப்பு – மாணவர்கள் மோதல்

டெல்லி ஜவகர்லால் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்ட போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். பிபிசியில் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட முயன்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்களின் இருதரப்பினரிடையே மோதல் வெடித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க நள்ளிரவில் ஏராளமான மாணவர்கள் ஊர்வலமாக காவல்நிலையத்தை நோக்கி நடந்து சென்றனர். Source link

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு: தலைமை நீதிபதி உத்தரவு

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு அளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அண்மையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருந்தார். முதல் கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட்டு நிகழ்ச்சி ஒன்றில் நேற்று … Read more

பாஜக, ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அவையில் தொடர் அமளி – டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 7-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர். ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும் துணை மேயர் பதவிக்கு ஆலே முகமது இக்பாலும் அறிவிக்கப்பட்டனர். தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மை பெற்றபோதிலும் பாஜகவும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அறிவித்து … Read more

ஜெயலலிதாவின் நகைகள், சேலைகள், செருப்புகளை ஏலம் விட நடவடிக்கை – பெங்களூரு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள் மற்றும் சால்வைகளை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், நகைகள், செருப்புகள், சேலைகள் கடந்த 27 வருடங்களாக கர்நாடக கருவூலத்தில் உள்ளன. அவற்றை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராமச்சந்திர டி.ஹுத்தார், கர்நாடக உயர் … Read more

உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் லக்னோவில் உள்ள வாசிர் ஹசன்கஞ்ச் சாலையில் நேற்று குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

சிறுநீர் கழிப்பு விவகாரம்: 2-வது சம்பவத்தை மறைத்த ஏர் இந்தியாவுக்கு அபராதம்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி பயணம் செய்த பெண் ஒருவரின் இருக்கையில் இருந்த போர்வை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இது, ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற 2-வது சம்பவமாகும். முன்னதாக, நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் பயணியின் மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பொது வெளியில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.இதையடுத்து, ஏர் இந்தியாவுக்குஅபராதம் விதிக்கப்பட்டதுடன், விமானியின் உரிமமும் தற்காலிகமாக … Read more

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சேலைகள், செருப்புகளை ஏலம் விட சிறப்பு வக்கீல் நியமனம்: பெங்களூரு கோர்ட் உத்தரவு

பெங்களூரு: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக கருவூலத்தில் வைத்துள்ள சேலைகள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட சிறப்பு அரசு வக்கீல் நியமனம் செய்ய அரசுக்கு பெங்களூரு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் குறிப்பாக கடந்த 17 வருடங்களாக கர்நாடக கருவூலத்தில் உள்ள சேலைகள் … Read more

அரசு வேலை போய்விடும் என்ற பயத்தால் 5 மாத குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தம்பதி…!!

ராஜ்ஸ்தான் மாநிலம் பிகானேரின் கோலயத் தாலுகாவின் தியாத்ரா கிராமத்தில் வசித்து வருபவர் ஜவர்லால் மேக்வால் (35). இவர் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா தேவி (33). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவரது மனைவி கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்தது. மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை குறித்த அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், அவரும் அவரது மனைவியும் மூன்றாவது … Read more