தான் பிரதமர் மோடியால் அசுர வளர்ச்சி பெற்றதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: தொழிலதிபர் அதானி மறுப்பு
டெல்லி: தான் பிரதமர் மோடியால் அசுர வளர்ச்சி பெற்றதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தொழிலதிபர் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார். தனது தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த ஒரு தனி நபரும் காரணமில்லை. 30 ஆண்டுகளில் பல தலைவர்கள், பல அரசுகள் செய்த சீர்திருத்தங்கள் எனது தொழில் வளர்ச்சிக்கு உதவின என்று அதானி விளக்கம் அளித்துள்ளார்.