14ம் தேதி மகரவிளக்கு சபரிமலையில் 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால பூஜைகள் கடந்த 31ம் தேதி தொடங்கியது. மண்டல காலத்தைவிட தற்போது சபரிமலையில் பக்தர்கள் அதிகமாக குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு … Read more

திடீர் திருப்பம்..!! பிரியாணியால் கேரளா இளம்பெண் இறக்கவில்லையாம் ..? காரணம் இது தான்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் அஞ்சு ஸ்ரீ பார்வதி . இவர் புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி காசர்கோடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குழிமந்தி என்ற பிரியாணியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஞ்சு ஸ்ரீ பார்வதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடகத்தின் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு … Read more

ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தில் நிலுவை தொகை வழங்க அரசுக்கு அவகாசம்

புதுடெல்லி: நாட்டில் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் திருத்தப்பட்ட ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 25 லட்சம் பேர் பயன்பெற உள்ளனர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் … Read more

புதையும் ஜோஷிமத் நகரம் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: உத்தராண்ட்டில் ஜோஷிமத் நகரம் புதைந்து வருவதை தேசிய பேரிடாக அறிவித்து, அங்கு நடக்கும் அனைத்து திட்டப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. உத்தரகாண்ட்டின் ஜோஷிமத் நகரில் உள்ள 4,500 கட்டிடங்களில் 600க்கும் மேற்பட்டவற்றில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்படுவதால் நகரமே புதையும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘இயற்கையை … Read more

பெற்ற மகனை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை..!!

புதுச்சேரி யூனியன் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என்று இரு மகன்கள் உள்ளனர். இதில் சக்திமுருகன் காரைக்கால் நவோதயா பள்ளியிலும், இவர்களது 2-வது மகன் பாலமுருகன் (14) தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். பாலமுருகன் புதுவை வேல் சொக்கநாதன் திருமண மண்டபம் அருகில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்தான். தினமும் … Read more

நகரமயமாக்கலால் மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலையோர நகரமான ஜோஷிமத் சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து வருகிறது. சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வரும் ஜோஷிமத் நகரம் மோசமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கிறது. எனவே, இங்கு அடிக்கடி நிலச்சரிவுகளும், நிலநடுக்கங்களும் ஏற்படுவது சகஜம். இந்நிலையில்தான், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில நாட்களாக ஜோஷிமத் பகுதியில் அடுத்தடுத்து பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்து வருகின்றன. தற்போது ஜோஷிமத்தில் … Read more

உ.பி விரைவுசாலையில் அடுத்தடுத்து விபத்து கடும் பனி மூட்டத்தால் 7 பேர் பரிதாப பலி: டெல்லியில் 5ம் நாளாக குளிர் அலை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் அடர் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். டெல்லியில் தொடர்ந்து 5ம் நாளாக நேற்றும் கடும் குளிர் அலை வீசியதால் மக்கள் உறைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நேற்றும் குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்தது. டெல்லியில் தொடர்ந்து 5வது நாளாக நேற்றும், … Read more

வயதானவர்களுக்கு மட்டுமே வரும் மாரடைப்பு 12 வயது சிறுவனை காவு வாங்கிய கொடூரம்..!!

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, சமீபகாலமாக 25 வயதினருக்கே மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை விட மோசமான சம்பவம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், குஷால்நகர் தாலுகா கூடு மங்களூரு பகுதியை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி. இவர் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் கீர்த்தன் (12) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு … Read more

எப்படி எல்லாம் லீவு கேக்குறாங்க பாருங்க..!! இணையத்தில் வைரலாகும் கான்ஸ்டபிளின் விடுப்பு விண்ணப்பம்..!!

உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வா காவல் நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது.இந்த நிலையில் அவர் எழுதிய விடுப்பு விண்ணப்பத்தில், தனக்கு விடுமுறை கிடைக்காததால் கோபமான மனைவி, போன் செய்யும் போது தன்னுடன் பேசுவதில்லை என்றும் பலமுறை அவருக்கு போன் செய்ததாகவும் ஆனால் அவர், தனது தாயிடம் போனை கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   தனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்ததாகவும் விடுமுறை கிடைக்கவில்லையென்றால் வீட்டிற்கு … Read more

பிரதமர் மோடி புகழாரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேசத்தின் தூதர்கள்

இந்தூர்: ‘அந்நிய நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களே நம்முடைய தேச தூதர்கள்’ என பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ம் தேதி ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நகரில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: … Read more