ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி பஞ்சாப் அமைச்சர் ராஜினாமா: புதிய அமைச்சரானார் பல்பீர் சிங்

சண்டிகர்: பஞ்சாபில் முறைகேடு தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய  அமைச்சர் பவுஜா சராரி நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பவுஜா சராரி, தனது நெருங்கிய நண்பருடன், சில ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெறுவது தொடர்பான வழிமுறைகள் குறித்து விவாதித்த ஆடியோ ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜ மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட … Read more

உத்தரகாண்டில் புதையும் நகரம் 600 குடும்பங்கள் வெளியேற்றம்: முதல்வர் புஷ்கர்சிங் தாமி நேரில் ஆய்வு

டேராடூன்: உத்தரகாண்டில் மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரில் இருந்து 600 குடும்பங்களை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்வர் புஷ்கர்சிங் தாமி ஆய்வு மேற்கொண்டார். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். ரிஷிகேஷ் மற்றும் பத்திரிநாத்துக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களும் இந்த கிராமத்தை தாண்டிதான் செல்லவேண்டும். மேலும் பனிமூடிய சிகரங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் … Read more

மணிப்பூர் முதல்வர் முன்பு 43 தீவிரவாதிகள் சரண்

இம்பால்: மணிப்பூரில்  பல்வேறு ஆயுத குழுக்களை சேர்ந்த 43 தீவிரவாதிகள்  முதல்வர் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட கங்கிலேய்பாக் யவோல் கன்பா லப் (கேஒய்கேஎல்) மக்கள் விடுதலை முன்னணி, கங்கிலேய்பாக் கம்யூனிஸ்ட் கட்சி(பிடபிள்யூஜி) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, கேசிபி(என்) மற்றும்  பிரிபாக்(பிஆர்ஓ) போன்ற ஆயுத குழுக்களை சேர்ந்த 43 தீவிரவாதிகள்   முதல்வர் பிரேன் சிங் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.சரண் அடையும் போது தங்களிடம் இருந்த 19 துப்பாக்கிகள்,17 கையெறி குண்டுகள் உள்ளிட்ட … Read more

முதல் முறையாக இந்தியா – ஜப்பான் கூட்டு விமான பயிற்சி: வரும் 12ம் தேதி தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா, ஜப்பான் விமானப்படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு போர் விமான பயிற்சி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஜப்பான் நாடுகளின் விமானப் படைகள் முதல் முறையாக ‘வீர் கார்டியன் 2023’ எனும் போர் விமானங்கள் கூட்டு பயிற்சியை நடத்த உள்ளன. ஜப்பானின் ஹைகுரி விமான தளத்தில் வரும் 12ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் இந்திய விமானப்படையின் 4 சு-20 எம்கேஐ ஜெட் விமானங்களும், 2 … Read more

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர்: 6 வாரங்களுக்கு பின் கைது!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது மது போதையில் சிறுநீர் கழித்த மும்பையைச் சேர்ந்த நபர் ஆறு வாரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்ட்டுகள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் – அமித்ஷா

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்ட்டுகள் இல்லாத தேசமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கோர்பா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் மாவோயிஸ்ட் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 258-ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 509ஆக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். மாவோஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆயுதம் ஏந்திய இளைஞர்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ததாகவும் … Read more

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது: 14 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா பெங்களூருவில் பதுங்கியிருந்தபோது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நியூயார்க்கில் இருந்து  கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது.   அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட … Read more

இடதுசாரிகள் ஆளும் கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களில் தொழில் – விமர்சனங்கள் குறித்து விரிவாக பேசிய அதானி

புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி. சமீப ஆண்டுகளாக இவரின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரின் உதவியால் தான் அதானி இவ்வளவு செல்வத்தை சேர்க்கிறார் என்று பொதுவான குற்றச்சாட்டு உண்டு. எதிர்க்கட்சி தரப்பில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதனை முதன்மையான குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர். ஆனால், இந்த விமர்சனங்கள் பொய்யனது என்று அதானி முதல்முறையாக விளக்கம் கொடுத்துள்ளார். இந்தியா டிவிக்கு … Read more

படித்தவுடன் கிழித்து விட்டு தனியாக வரவும்; மாணவிக்கு ஆசிரியர் எழுதிய காதல் கடிதம்!

நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களாலேயே பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. கல்வி கற்க வரும் பிள்ளைகளை காம இச்சைக்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்வது மனித நேயத்தை குழிதோண்டி புதைக்க விதமாகவே உள்ளது. பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை. புகார் கொடுத்தாலும், பள்ளி நிர்வாகங்கள் அந்த புகார்களை முறையாக விசாரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பல காலமாக நீடிக்கிறது. அதே சமயம் தடைகளை தாண்டி, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து … Read more

புத்தாண்டு இரவில் பிரியாணி சாப்பிட்ட மாணவி மரணம்..! அவதிக்குள்ளான அந்த 7 நாட்கள்..!

புத்தாண்டு இரவு மந்தி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட கல்லூரி மாணவி, உணவே விஷமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ரெஸ்டாரண்ட் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரும்பாலாவை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி . இவர் டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக குழி மந்தி பிரியாணி, சிக்கன் 65, மயோனஷ் ஆர்டர் செய்து குடும்பத்துடன் … Read more