மருத்துவமனைக்கு வந்து தாயாரைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு விரைந்து வந்து தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் கடந்த ஜூன் மாதம் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கே வந்து அவர் வாக்களித்தார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்தார். … Read more