அதிர்ச்சி! 40 நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும்!!

இந்தியாவில் ஜனவரி மாதத்தின் மத்தியில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது எனவும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் கொரோனா பரவல் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கமடைந்து வருகிறது. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து உலக நாடுகள் ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் மத்திய, மாநில … Read more

அலர்ட்! ஒருவரிடமிருந்து 16 பேருக்கு பரவும் கொரோனா!!

உலகம் முழுவதும் ‘பி.எஃப்.7’ என்ற கொரோனா வைரஸ் திரிபு புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் புது வகை கொரோனா தொடர்பான அச்சம் மேலோங்கி இருப்பதால் மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. … Read more

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி | கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் 56 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள், களப்பணியாளர்களின் இல்லங்களில் சோதனை நடைபெறுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு … Read more

ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி கொலையில் திடீர் திருப்பம்; அவரது கணவர் கைது..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு அவரது கணவர் பிரகாஷ்குமார் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் காரில் சென்று கொண்டிருந்தபோது நடிகை ரியா குமாரியை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக கணவர் தகவல் தெரிவித்திருந்தார். ரியா குமாரி கணவர் பிரகாஷ்குமார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி ரியா குமாரியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பிரகாஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கிய கணவர்… காப்பாற்ற முயன்ற நடிகைக்கு நேர்ந்த கொடுமை!

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில், வழிப்பறி கொள்ளையை தடுக்க முயற்சித்த நடிகை ரியா குமாரி என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநில நடிகை ரியா குமாரி என்பவர், தனது கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ்குமாருடன் இணைந்து, தங்களின் இரண்டு வயது மகளுடன் தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கி காரில் சென்றுள்ளனர். நேற்று காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலைய பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே பிரகாஷ்குமார் காரை … Read more

அமெரிக்காவின் உறைபனி ஏரியில் விழுந்து குண்டூர் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு

குண்டூர்: அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தற்போது கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதுவரை 32க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலர் காரிலேயே உறைந்து உயிரை விட்டுள்ளனர். டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ ஆகிய மாகாணங்களில் விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பாலபர்ரகு பகுதியை சேர்ந்த நாராயணா (40), ஹரிதா (36) தம்பதியினர் தங்களது 2 மகள்களுடன் … Read more

இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்கும்: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: உலகளாவிய கொரோனாவின் பரவல் குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என ஒன்றிய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த காலங்களில் இந்தியாவில் கோவிட் பரவலின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் பிற பல நாடுகளில் கொரோனா கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் … Read more

கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அடுத்த 40 நாட்களுக்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

புதுடெல்லி: சீனாவில் கரோனா ஒமிக்ரான் வகை புதிய தொற்று அதிகரித்து வருகிறது. அண்டை நாடான இந்தியாவிலும் கரோனா தொற்றுஅதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அடுத்து வரும் 40 நாட்களும் முக்கியமான நாட்களாக இருக்கும் என்றும், கரோனா தடுப்புநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முன்பு கிழக்கு ஆசிய மண்டலத்தில் கரோனா அலை ஏற்பட்ட 30 முதல் 35 நாட்களில் இந்தியாவில் … Read more

முகநூலில் முக்கோண காதல் பேக் ஐடி மூலம் சிக்கிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!

போலி முக நூல் கணக்கில் வேறு ஒரு ஆண் போல காதலியுடன் சாட்டிங் செய்து , அவரை தனிமையான இடத்துக்கு வரவழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் வடசேரிக்கரையில் அரங்கேறி இருக்கின்றது. வேலிதாண்டிய வெள்ளாடான காதலியை திட்டமிட்டு பலி தீர்த்த சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி.. கேரள மாநிலம் வர்க்கலா அருகே வடசேரிக்கரையைச் சேர்ந்த 17 வயதான பதின் பருவ சிறுமி ஒருவர் சம்பவத்தன்று நள்ளிரவில் கழுத்து அறுபட்ட நிலையில் தனது வீட்டுக்கதவை தட்டிய படி கத்திக் … Read more

இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழப்பு: உஸ்பெஸ்கிதான் சுகாதார அமைச்சகம் தகவல்.!

டெல்லி : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெஸ்கிதான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உஸ்பெஸ்கிதான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த இருமல் மருந்ததான டாக்-1 மேக்ஸ் என்ற சிரப்பை குடித்ததால் 18 பேர் உயிரிழந்ததாகவும் ஆய்வக பரிசோதனையில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருந்ததாகவும் உஸ்பெஸ்கிஸ்தான் சுகாதார அமைச்சகம் … Read more