ஒரே மாதத்தில் 2வது முறையாக ட்விட்டர் தளம் முடக்கம்

புதுடெல்லி: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று ட்விட்டர் தளம் முடக்கப்பட்டதால் பயனர்கள் கடும் சிரத்திற்கு ஆளாகினர். சமூக ஊடக தளமான ட்விட்டர், இன்று காலை முடங்கியது. அதனால் அனைத்து பயனர்களும் ட்விட்டர் தளத்திற்குள் நுழைவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ட்விட்டர் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி ட்விட்டர் தளம் ஏற்கனவே முடக்கப்பட்டு, பின்னர் மீட்டெடுக்கப்பட்டது. இன்று காலை 7.30 மணியளவில் 8,700 பயனர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அதனை புகாராக … Read more

ஹவுரா – நியூ ஜல்பாய்குரி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் – என்ன ஸ்பெஷல்?

ஹவுரா – நியூ ஜல்பாய்குரி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்ட நாளை மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி, ஹவுரா ரயில் நிலையத்தில், ஹவுரா- புதிய ஜல்பைகுரியை இணைக்கும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ரயில் எங்கெங்கே நிற்கும்: பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில், மால்டா டவுன், பர்சோய், கிஷான்கஞ்ச் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். … Read more

எங்களின் 865 கிராமங்களை சொந்தம் கொண்டாடுவதா? – மகாராஷ்டிர தீர்மானத்துக்கு கர்நாடகா கண்டனம் 

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைப்பது தொடர்பாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. கர்நாடகாவில் உள்ள பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்ட எல்லையோர‌ மாவட்டங்களில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மராத்திய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு கடந்த … Read more

வானிலிருந்து, கடலிலுள்ள இலக்கை தாக்கக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி..!

சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து, கடலிலுள்ள இலக்கை தாக்கவல்ல, நீட்டிக்கப்பட்ட திறன்கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையை, சுகோய் போர் விமானத்திலிருந்து ஏவி, வெற்றிகரமாக சோதித்ததாக, இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. வானிலிருந்து கடலில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையின், தாக்குதல் தூரத்தை நீட்டித்து, இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் டிஆர்டிஒ ஆகியவை இணைந்து, வங்கக்கடலில் இந்த சோதனை நடத்தின. அதில், ஏவுகணை இலக்கை தாக்கியதாகவும், இதன்மூலம் நிலம் மற்றும் கடலில் உள்ள தொலைதூர இலக்குகளை துல்லியமாக … Read more

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ்

டெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நிர்மலா சீதாராமன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த டிச-26-ம் தேதி மதியம் திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றுப்பிரச்சினையுடன் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக கூறப்பட்டது. நெஞ்சு … Read more

சந்திரபாபுவை காண முண்டியடித்த மக்கள் கூட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாப பலி

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்து வருகிறார். எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. 2024 ஆம் ஆண்டி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் … Read more

கோவிட் அலர்ட் | உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு குறித்து  நிறுவனங்களிடம் மத்திய அரசு ஆய்வு

புதுடெல்லி: கரோனா மேலாண்மைக்கான உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப்பு, இருப்பு மற்றும் சில்லறை வணிக அளவில் விநியோக சங்கிலி ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்குமாறு மருந்து நிறுவனங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கரோனா பெருந்தொற்று சில நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு மற்றும் கரோனா மேலாண்மை மருந்துகள் மற்றும் கருவிகள் … Read more

கோயில் விழாவில் மிரண்டு ஓடிய யானை: பக்தர்கள் அலறல்

பாலக்காடு: பாலக்காடு அருகே கோயில் விழாவில் மிரண்டோடிய யானை தூக்கி வீசியதில் 6 டூவீலர்கள் சேதமடைந்தன. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி கிழக்கஞ்சேரியில் திருவரை அம்மன் கோயில் நிறைமாலை திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் அலங்கரிப்பட்ட மூன்று யானைகள் மீது அம்மன் வீதியுலா வந்தது. கோயிலின் அருகே வந்தபோது புத்தூர் தேவிநந்தன் என்ற யானை திடீரென மிரண்டோடியது. தொடர்ந்து வீதியுலா வந்த மற்றொரு யானையையும் தேவிநந்தன் முட்டி காயப்படுத்தியது. மேலும், கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த … Read more

இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளா? – ஜன. 1 முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைத் தூக்கியுள்ளது. ஒமிக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் தான் இதற்கு காரணம் என்றும், இந்த கொரோனா அதிவேகத்தில் பரவும் என்றும் கூறப்பட்டு வருகிறது. சீனா மட்டுமின்றி கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த புதிய திரிபு அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, … Read more

காதலனை மணப்பெண் சந்தித்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!…

ஆப்ரிக்காவில் காதலனை மணப்பெண் சந்தித்ததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் திருமணத்தை மணமகன் நிறுத்தியதும், அவருடன் மணப்பெண் வாக்குவாதம் செய்து அழுது புரண்டு கெஞ்சுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அங்கு ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து அந்த பெண் பேசி இருக்கிறார். இந்த தகவல் மணமகனின் காதுக்கு … Read more