சமூக நீதியே டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: “டிஜிட்டல் அந்த்யோதயாவை நோக்கிய நமது பயணத்தில், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரை உள்ளடக்குவதை உறுதி செய்வதற்கும், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா சரியான முன்மாதிரியை அமைத்துள்ளது” என்று குடிரயரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதுடெல்லியில் நடைபெற்ற 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் சனிக்கிழமை கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், “டிஜிட்டல் இந்தியா விருதுகள் … Read more

22 மாநிலங்களில் முதலீடு..அனைத்தும் பாஜக ஆளுபவை அல்ல..அதானி விளக்கம்.!

தொழிலதிபர் கௌதம் அதானி, பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திடம் இருந்து முன்னுரிமை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார், காங்கிரஸின் ராஜீவ் காந்தி காலத்தில் தனது பரந்த துறைமுகங்கள் முதல் அதிகாரம் வரையிலான குழுமம் துவங்கியது என்றும் இன்று 22 மாநிலங்களில் செயல்படுகிறது என்றும், அனைத்தும் பிஜேபியால் ஆளப்படவில்லை என்றும் கூறினார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அதானி கூறும்போது, “மோடி ஜியுடன் சிரமப்படுபவர்கள் அல்லது சித்தாந்த சலசலப்பு காரணமாக இதுபோன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு … Read more

ஜோஷிமத்தில் புதையும் வீடுகள்.. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் ஆய்வு

உத்தரகாண்டின் ஜோஷிமத்தில் கட்டடங்கள் நிலத்தில் புதைந்து வருவதுடன், வீடுகளிலும் விரிசல்கள் விழும் நிலையில், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். பிரசித்திப்பெற்ற பத்ரிநாத் கோவிலின் வாயில் என்றழைக்கப்படும் ஜோஷிமத் மலை நகரத்தின் வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதுடன், அங்குள்ள கோயிலும் இடிந்து விழுந்தது. இந்நிலையில், அப்பகுதியில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேட்டியளித்த அவர், மக்கள் அனைவரையும் பாதுகாக்க … Read more

முதன் முதலாக கட்டுமான பணியின் வீடியோ ரிலீஸ்; ராமர் கோயில் திறப்பை அறிவிக்க நீங்கள் யார்? அமித் ஷாவுக்கு காங். தலைவர் கார்கே கேள்வி

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணி ெதாடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கோயில் திறப்பு குறித்து அமித் ஷா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கேள்வியும் எழுப்பி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1ம் தேதிக்குள் தயாராகி விடும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் கூறினார். இதுதொடர்பாக ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் … Read more

’கறுப்பாக இருக்கிறாய்’… கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்ணை வெளியில் துரத்திய அறங்காவலர்!

கர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்ணை, தடுத்து வெளியில் இழுத்துவந்து விடும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அமிர்தஹள்ளி என்ற பகுதியில் புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார். ஆனால், அவரை உள்ளே விடாமல், அவரது தலைமுடியை இழுத்துப் பிடித்தபடி வாசலில் கொண்டுபோய் விடுகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

“அரிய வகை நோய்க்கான நிதியுதவித் திட்டத்தால் யாருமே பயனடையவில்லை” – மத்திய அரசுக்கு பாஜக எம்.பி கடிதம்

புதுடெல்லி: அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரூ.50 லட்சம் உதவித்தொகை திட்டத்தால் இதுவரை எந்த நோயாளியும் பயனடையவில்லை என்று பாஜக எம்.பி வருண் காந்தி கூறியுள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு வருண் காந்தி கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம், அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை காக்கும் வகையில் கடந்த 2021 மார்ச் 30-ம் தேதி ‘அரிய வகை நோய்களுக்கான … Read more

ஜோஷிமத் நிலச்சரிவு..வீடுகளை இழந்த மக்கள்..ராகுல் காந்தி கவலை.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியானது, பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் மற்றும் சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி போன்ற புகழ்பெற்ற யாத்திரை தலங்களின் நுழைவாயிலாக உள்ளது. இங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, ஜோஷிமத்தில் உள்ள வீடுகள், சாலைகள் மற்றும் வயல்களில் பெரிய விரிசல்கள் உருவாகி படிப்படியாக மூழ்கி வருகிறது. பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆபத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் … Read more

வீட்டு வாடகை படி விதிகளில் திருத்தம்.! அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கு கிடுக்கி: ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வீட்டு வாடகை படி விதிகளில் ஒன்றிய நிதியமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதனால் ஒரே குடியிருப்பை இருவர் பகிர்ந்து கொண்டால் வீட்டு வாடகை படி கிடைக்காது. வீட்டு வாடகை கொடுப்பனவு என்பது வாடகை வீட்டில் வசிக்கும் தனது ஊழியருக்கு ஊதியத்துடன் வழங்கும் குறிப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அரசுத் துறையின் குறிப்பிட்ட துறையில் குடியிருப்பு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது. … Read more

ஆன்லைனில் ‘குழிமந்தி பிரியாணி’ வாங்கி சாப்பிட்ட 20 வயது பெண் பலி – கேரளாவில் தொடரும் சோகம்

உணவகத்திலிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து ‘குழிமந்தி பிரியாணி’ சாப்பிட்ட 20 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இந்த வாரத்தில் மட்டும் பிரியாணி சாப்பிட்டு ‘ஃபுட் பாய்சனால்’ இரண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்பது அங்கு சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடுக்கு அருகில் உள்ள பெரம்பல என்ற ஊரைச் சேர்ந்தவர் 20 வயதான அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர், கடந்த 31-ம் தேதி அருகில் உள்ள ரோமனிஷியா என்ற உணவகத்திலிருந்து குழிமந்தி … Read more

ஷவர்மாவிற்கு அடுத்து பிரியாணி..? கேரளாவிற்கு வந்த சோதனை

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி (20). இவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு … Read more