டெல்லி கார் விபத்தில் உயிரிழந்த அஞ்சலி சிங்; குடும்பத்திற்கு உதவிய ஷாருக்கான்.!

வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அஞ்சலி சிங், 20, என்ற இளம் பெண் சென்ற இருசக்கர வாகனம் மீது, மது போதையில் 5 பேர் வந்த கார் மோதியது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அஞ்சலி சிங்கின் இருசக்கர வாகனம் மீது காரில் மோதிய கும்பல், காரை நிறுத்தாமல் சென்றுள்ளது. இருசக்கர வாகனத்தை காரில் இழுத்துக் கொண்டே சென்ற நபர்கள், அஞ்சலி சிங் இருப்பதை மறந்து வேகமாக சென்றனர். இதில் இருசக்கர வாகனம் … Read more

ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான ஏழுமலையான் தரிசன டிக்கெட் 9ம் தேதி வெளியீடு

திருமலை: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திருப்பதியில் தரிசனம் செய்ய ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் 9ம் தேதி வெளியிடப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், பிப்ரவரி மாதமும் சுவாமி தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் 9ம் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் தேவஸ்தானத்தின் ‘https://tirupatibalaji.ap.gov.in/#/login’ என்ற அதிகாரப்பூர்வமான … Read more

பொம்மையை தொலைத்த குழந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரயில்வே.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி!

ரயிலில் பயணித்த போது ஒன்றரை வயது குழந்தை தொலைத்த பொம்மையை இந்தியன் ரயில்வே நிர்வாகத்தினர் தேடிச் சென்று கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கடந்த புதன் கிழமையன்று (ஜன.,04) செகந்திராபாத்தில் இருந்து அகர்தாலவுக்கு சென்ற சிறப்பு ரயிலின் B-2 பெட்டியில் பயணித்த பூஷின் பட்நாயக் என்பவர்தான் ரயில்வேயின் 139 என்ற ஹெல்ப்லைனை அழைத்து அதே பெட்டியில் பயணித்த குடும்பத்தை சேர்ந்த குழந்தை ஒன்று தவறவிட்ட பொம்மை குறித்து தெரிவித்திருக்கிறார். அதன்படி, அந்த பயணித்தின் போது அதே பெட்டியில் … Read more

ஏர் இந்தியா சம்பவம் | சக பயணி மீது சிறுநீர் கழித்தவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில், சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா என்பவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஷங்கர் மிஸ்ரா என்பவர் பெங்களூருவில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார். இதையடுத்து இன்று அவர் டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் … Read more

தனது மரணத்தை பெற்றோரிடம் மறைக்க சொன்ன 6 வயது சிறுவன்.. உருக்கமாக பகிர்ந்த மருத்துவர்…

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் தம்பதியின் 6 வயது மகனான ராமுவுக்கு சில மாதங்களுக்கு முன்பு வலது கை மற்றும் கால் செயலிழந்துள்ளது. பதறிப்போன பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பல்வேறு ஸ்கேன்களை எடுத்து பார்த்தனர். தலையில் எடுக்கப்பட்ட ஸ்கேனில் ராமுவின் இடது பக்க மூளையில் க்ளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் கிரேடு 4 என்ற கேன்சர் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இது மூளை அல்லது முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய அதி தீவிரமான புற்றுநோயாகும். சிகிச்சையில் அதிசயம் நடக்கவில்லை என்றால் மரணம் நிச்சயம். … Read more

டிரக் மீது மோதிய பைக்; மயிரிழையில் உயிர் தப்பிய நபர்! வைரலாகும் CCTV காட்சிகள்!

புதுடெல்லி: இணையத்தில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் சாலை விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும். சில விபத்து வீடியோக்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தைம் கூட ஏற்படுத்தும். மயிரிழையில், அதிர்ஷ்டவசமாக உயிர்ன் தப்பிக்கும் வீடியோ ஒன்று அந்த வகையில் வைரலாகி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷு கப்ரா பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஓடும் டிரக் மீது ஏறக்குறைய மோதிய பிறகு, மயிரிழையில் ஒரு நபர் மரணத்திலிருந்து தப்பிக்கும் சிசிடிவி காட்சிகளை … Read more

பிரியாணி சாப்பிட்டு கல்லூரி மாணவி சாவு: கேரளாவில் 7 நாளில் 2 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த வாரம் கோட்டயத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை நர்சான ரஷ்மி என்பவர் அல்பாமா சிக்கன் மற்றும் குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு இறந்ததார். இதையடுத்து கேரளா முழுவதும் ஓட்டல்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த ஏராளமான ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில் பிரியாணி சாப்பிட்டு மேலும் ஒரு கல்லூரி மாணவி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள … Read more

”உங்க வாய் குப்பைத்தொட்டி மாதிரி இருக்கு ”- அமைச்சர் ரோஜாவை விமர்சித்த சிரஞ்சீவி பிரதர்!

ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை, உங்கள் வாய் குப்பைத்தொட்டியை போல் உள்ளது என்றும், உங்களால் குப்பைத்தொட்டியை மிஞ்ச முடியாது என்றும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நடிகர் பவன்கல்யாண் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு. ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கும் நடிகை ரோஜா, சமீப காலமாக ஜன சேனா கட்சி குறித்தும், பவன் கல்யாண் மற்றும் சிரஞ்சீவி குடும்பத்தினர் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அதற்கு பதிலடி … Read more

பஞ்சாப் அமைச்சர் ஃபாஜா சிங் சராரி ராஜினாமா – பின்னணி என்ன?

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சர் ஃபாஜா சிங் சராரி திடீரென ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக இருந்தவர் ஃபாஜா சிங் சராரி. இவர் தனது நெருங்கிய நண்பரான தர்செம் லால் கபூர் என்பவருடன் நடத்திய தொலைபேசி உரையாடல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில், முறைகேடாக பணம் ஈட்டுவது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். காங்கிரஸ் வலியுறுத்தல்: … Read more

பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த பாரத் ஜோடோ யாத்திரை நடக்கவில்லை: ஜெய்ராம் ரமேஷ்

“பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறவில்லை,” என, காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் … Read more