புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரில் போலி மருந்து தயாரித்து விநியோகம்: கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு கடிதம்

புதுடெல்லி: புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளை தயாரிக்கும்  கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் காம்பியா  மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சப்ளை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்டு  50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.   … Read more

வழிபாட்டு தலங்களுக்கு நள்ளிரவு 2 மணி வரை அனுமதி..!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களுக்கு நள்ளிரவு 2 மணி வரை அனுமதி அளித்து கலெக்டர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுமக்கள் முககவசம் அணியவேண்டும், சமூக இடை வெளியை கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு இப்போதே ஏராளமானோர் வந்து குவிந்துள்ளனர். இன்னும் அதிக பேர் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி … Read more

நக்ஸல் பிரச்சினை குறித்து பிரதமரிடம் பேசினேன்: சத்தீஸ்கர் முதல்வர்

புதுடெல்லி: சத்தீஸ்கரில் நக்ஸல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக எடுத்துக்கூறியதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார். பிரதமரின் இல்லத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின்போது, சத்தீஸ்கர் மாநில பழங்குடி வகுப்பைச் சேர்ந்த கணவன் – மனைவி சிலையை பிரதமர் நரேந்திர மோடிக்கு பூபேஷ் பெகல் பரிசாக வழங்கினார். … Read more

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்; மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உறுதி.!

2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருப்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,‘‘காங்கிரஸின் நாடு தழுவிய பாரத் ஜோடோ யாத்திரையை வழிநடத்தியதற்காக ராகுல் காந்தியைப் பாராட்டிகிறேன். அவர் அதிகாரத்திற்காக அல்ல, ஆனால் நாட்டின் சாமானியர்களுக்காக அரசியல் செய்கிறார். 2024 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை, ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் முகமாக மட்டும் இருக்காமல், அதன் பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார். உலக … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் வாக்குப்பதிவு: இந்திய தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு..!!

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துவதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சொந்த ஊர்களை விட்டு இந்தியாவிற்குள்  வேறு மாநிலங்களில் பணியாற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் வாக்குப்பதிவு முறையை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதற்காக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஜனவரி 16ம் தேதி ஆணையம் செயல் விளக்கம் தருகிறது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் அரசியல் காட்சிகள் கருத்துக்களை அனுப்பவும் தேர்தல் … Read more

உடல் முழுக்க அடர் முடியுடன் பிறந்த குழந்தை: ஷாக்கான டாக்டர்ஸ்: எதனால் தெரியுமா?

இரட்டை தலை, நான்கு கால்கள் என பல வகைகளில் குழந்தைகள் பிறப்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் கருமை படர்ந்த நிலையில் உடலில் 60 சதவிகிதம் முடியுடன் ஒரு குழந்தை உத்தர பிரதேசத்தில் பிறந்திருக்கிறது. அதன்படி உத்தர பிரதேசத்தின் ஹர்டோய் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த செவ்வாயன்று (டிச.,27) பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அதே பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு பிறந்த குழந்தையை கண்டதும் மருத்துவர்களும், செவிலியர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். … Read more

‘கால்பந்து கடவுள்’ பீலேவுக்கு சிலை வைத்த பெங்களூரு தமிழர்கள்: மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்

பெங்களூரு: கால்பந்து கடவுள் என அழைக்கப்படும் பீலேவுக்கு இந்தியாவிலே முதல் முறையாக பெங்களூருவில் தமிழர்கள் சிலை வைத்து கவுரவித்துள்ளனர். அவரது மறைவை தொடர்ந்து பீலேவின் சிலைக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெங்களூருவில் உள்ள அல்சூர் அருகே கவுதமபுரம் உள்ளது. இந்த நகரின் பழைய பெயர் ‘கன் ட்ரூப்’ (Gun Troop). இங்கு மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப் ராணுவத்தின் 515வது துப்பாக்கி தொழிற்சாலை அமைந்திருந்ததால் இந்த பகுதி ‘கன் ட்ரூப்’ என அழைக்கப்பட்டது. இங்கு நூறாண்டுகளுக்கும் … Read more

மராட்டிய நடிகை தற்கொலை வழக்கு; காதலனுக்கு சிறையில் சலுகைகள்.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான நடிகை துனிஷா, படப்பிடிப்பின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்; நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து திறக்க நேரிட்டதாக வாலிவ் போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 1:30 மணியளவில் படப்பிடிப்பு குழுவினர் நடிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு … Read more

இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது – அமித்ஷா

இந்தோ-திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதால், இந்தியா-சீனா எல்லைக்குறித்து தான் கவலைப்படவில்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தோ-திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதால் இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது என தெரிவித்தார். இந்தோ-திபெத் எல்லை போலீசாருக்கு மக்கள் ஹிம்வீர் என்று செல்லப்பெயர் வைத்திருப்பதாகவும், இது பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளைவிட பெரியது என்று தான் நினைப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.   … Read more

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை

கேரளா: சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவெலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2,570 ஏக்கரில் சபரிமலை விமான நிலையம் அமைகிறது.