ஜனவரி 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் ஆண்டில் பல முக்கிய விஷயங்களின் மாற்றம் இருக்கும். இதில் சாமானியர்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய பல விஷயங்களும் உள்ளன. பல மாற்றங்கள் நேரடியாகவும், சில மறைமுகமாகவும் சாமானியர்களை பாதிக்கக்கூடும். புதிய ஆண்டின் மாற்றங்களில் ஜிஎஸ்டி விகிதம், வங்கி லாக்கர் விதிகள், சிஎன்ஜி-பிஎன்ஜி விலைகள், கிரெடிட் கார்டு விதிகள் ஆகியவை அடங்கும். அரசு வெளியிடும் மாற்றங்கள் அனைவருக்கும் கட்டாயமாக இருக்கும். என்பிஎஃஸ் பார்ஷியல் வித்ட்ராயல் உலக மக்களை பாடாய் … Read more

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் வெஸ்மா அருகே சொகுசு பேருந்து மீது சொகுசு கார் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் வெஸ்மா அருகே சொகுசு பேருந்து மீது சொகுசு கார் மோதி மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து மீது கார் மோதி விபத்தில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குஜராத்தில் சாலை விபத்து: 9 பேர் பலி; 28 பேர் காயம்

அகமதாபாத்: குஜராத்தில் சாலை விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். குஜராத் மாநில நவ்சாரி மாவட்டத்தில் நேற்றிரவு இந்த விபத்து நடந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பேருந்தில் சிலர் திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்து தேசிய நெடுஞ்சாலை 48ல் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த டொயோட்டா ஃபார்ச்சுனர் காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த … Read more

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு நாளை முதல் அமல்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்புப் பத்திரங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு, இனி 8 சதவீத வட்டியும், தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கு 7 சதவீத வட்டியும் கிடைக்கும். இதேபோல், அஞ்சலகங்களில் 1 வருடம் முதல் … Read more

தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2.54 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ.1,446.05 கோடி

திருமலை: தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் இந்த ஆண்டு சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தியதால் வருமானம் அதிகரித்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோது ஜனவரியில் ரூ.79.39 கோடியும், பிப்ரவரியில் ரூ.79.33 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தான அதிகாரிகள் அதிகரித்ததுடன் … Read more

மக்கள் அத்துமீறலால் மூணாறில் மீண்டும் `படையப்பா’ அட்டகாசங்கள்! சீறும் வனத்துறை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ‘படையப்பா’ யானையின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுவாசிகளுக்கு  ‘படையப்பா’  என்றழைக்கப்படும்  ஒற்றை காட்டு யானை மிகவும் பரிச்சயம். அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி பொது இடங்களில் உலா வரும் ‘படையப்பா’ யானை, பொதுமக்களை அச்சுறுத்தாமல் சாலையோர கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் திண்பண்டங்களை தின்றுவிட்டு செல்வது அங்கிருப்போருக்கு தெரிந்த சங்கதிதான். இப்படி அமைதியாக காணும் ‘படையப்பா’ யானை சமீபகாலமாக ஆவேசமாக உலா வரத் துவங்கியுள்ளது. அந்தவகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘படையப்பா’ யானை, … Read more

தெருநாய்கள் கடித்து ஒன்றரை வயது குழந்தை படுகாயம்!!

தெருநாய்கள் கடித்ததில் ஒன்றரை வயது குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டம் மய்யநாடு பகுதியில் குழந்தைக்கு அவரது பாட்டி உணவு ஊட்டிக்கொண்டிருந்தார். உணவு கொடுத்தபிறகு பாட்டி பின்னர் வீட்டிற்குள் சென்றிருந்த போது, குழந்தை வீட்டின் முன்பு தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குழந்தை அலறும் சத்தம் கேட்டு, வீட்டின் முன்பு வந்து பார்த்தபோது, சுமார் 25 தெரு நாய்கள் குழந்தையை கடித்துக் கொண்டிருந்தன. இதையடுத்து குழந்தையின் பாட்டி நாய்களை துரத்தினார். … Read more

ஹீராபென் | பிரதமர் நரேந்திர மோடியை செதுக்கியவர்

காந்திநகர்: குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம், விஸ்நகரில் பிறந்த ஹீராபென் அவரது குடும்பத்தில் மூத்த பெண். அவரது 16-வது வயதிலேயே வட்நகரை சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடியுடன் திருமணம் நடைபெற்றது. புகுந்த வீட்டிலும் அவர்தான் மூத்த மருமகள். இளம்வயது என்ற போதிலும்குடும்பத்தினரை அரவணைத்து செல்லும் பக்குவம் ஹீராபென்னுக்கு இருந்தது. காலை 4 மணிக்கே கணவர் தாமோதர்தாஸ் கடைக்கு சென்றுவிடுவார். அவருக்காக அதிகாலையிலேயே ஹீராபென் எழுந்துவிடுவார். தாய், தந்தையை பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்றளவும் அதிகாலையில் எழும் பழக்கத்தை … Read more

PPFல் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி! வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்து வருகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. ஊடக அறிக்கைகளின்படி, மத்திய அரசாங்கம் அடுத்த ஓரிரு நாட்களில் PPF இன் வட்டி விகிதத்தை அதிகரிக்கக்கூடும் எனத்தகவல். பிபிஎஃப் மீதான வட்டியை டிசம்பர் 31, 2022க்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை தற்போது உள்ள வட்டியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை PPF-க்கு வழங்கப்படும் வட்டி விகிதம், அடுத்த ஒரு காலாண்டில் அதாவது … Read more

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்ததாக முந்தைய காங்கிரஸ் அரசு மீது அமித் ஷா கடும் தாக்கு

கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீதான 1,700 வழக்குகளை ரத்து செய்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார். மாண்டியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு, சித்தராமையா தலைமையிலான அரசு ஆதரவு அளித்துவந்ததாக விமர்சித்தார். அப்படி மன்னித்து விடப்பட்ட சிலரால்தான், பிரவீன் நெட்டாரு கொலை போன்ற வன்முறைச்சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அவர் குறை கூறினார். 5 ஆண்டுகளுக்கு அந்த இயக்கத்தை பாஜக அரசு தடை செய்திருப்பதாகவும், இத்தடை … Read more