2023 பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என தகவல்!

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதிக்கான பாராளுமன்றம் கூடும் மார்ச் மாதம் புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்படும் என தெரிகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் நடைபெறும் என பிரஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி வழக்கமாக ஜனவரி 30 … Read more

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதிக்கு சிறப்பு பஸ்

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகத்தில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில போக்குவரத்து கழக திருப்பதி பிராந்திய மேலாளர் செங்கல்ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதியில் நேற்று மாநில போக்குவரத்து கழக திருப்பதி பிராந்திய மேலாளர் செங்கல்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஜனவரி 1ம்  தேதி ஆங்கில புத்தாண்டு, 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக, திருமலை … Read more

இந்து பெண் கொடூர கொலை; சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: பாக்.குக்கு இந்தியா எச்சரிக்கை

புதுடெல்லி:  பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிறுபான்மையினரை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தயா பீல்(40) என்ற இந்து பெண் நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு மிக கொடூரமாக சிதைக்கப்பட்டு இருந்தது. இந்த கொலையை ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை. இஸ்லாமாபாத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் சிந்து மாகாண தலைவர்கள் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்நிலையில் டெல்லியில் … Read more

அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் மரணம்: காந்தி நகர் மயானத்தில் இறுதி சடங்கு; உலக தலைவர்கள் இரங்கல்

அகமதாபாத்: அகமதாபாத் மருத்துவமனையில் சுவாச பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (100), குஜராத் மாநிலம் காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு திடீரென சுவாச பிரச்னை ஏற்பட்டதால், அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதயவியல் … Read more

மோடி குறித்து விமர்சனம் செய்த திரிணாமுல் செய்தி தொடர்பாளர் மற்றொரு வழக்கில் கைது

கொல்கத்தா: பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த   திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, மற்றொரு வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொங்கு பாலம் அறுந்து  விழுந்த சம்பவத்தில், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை   திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே  வெளியிட்டிருந்தார். அதையடுத்து கடந்த 6ம் தேதி குஜராத் சைபர் கிரைம்  போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன்  கிடைத்தது. … Read more

'தேச பாதுகாப்பை விட்டு தர மாட்டோம்! – ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்

“அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்காக தேச பாதுகாப்பை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம்,” என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், சிவகிரி மடத்தின் 90-வது ஆண்டு புனிதப் பயண நிகழ்ச்சியில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ”நமது நண்பர்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற … Read more

ஒன்றியம், மாநிலத்தில் பாஜக அரசு இருந்தும் பலனில்லை: கன்னட மொழிக்காக‘செய் அல்லது செத்துமடி’முன்னாள் பிரதமர் அறைகூவல்

பெங்களூரு: ஒன்றியம், மாநிலத்தில் பாஜக அரசு இருந்தும் பலனில்லை; கன்னட மொழிக்காக ‘செய் அல்லது செத்துமடி’ நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடா, கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், ‘கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் அடையாளத்தை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. கன்னட கட்சியை வலுப்படுத்த வேண்டும். தண்ணீருக்காகவும், மொழிக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும். இன்றைய காலக்கட்டமானது, … Read more

அதிகரிக்கும் காற்று மாசு – டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை!

டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையக் கூடும் என்பதால் கட்டுமானம், கட்டுமான இடிப்பு பணிகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காற்றின் தரக் குறியீடு என்பது மோசமான மற்றும் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகி வந்தது. இதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுப்பாடுகளையும் விதித்து … Read more

தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் காங்கிரசை காட்டிலும் 19 மடங்கு பாஜக வசூல்: ரூ.487.09 கோடி பெற்று தொடர்ந்து முதலிடம்

புதுடெல்லி: தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் காங்கிரசை காட்டிலும் பாஜக 19 மடங்கு வசூல் (ரூ.487.09 கோடி) செய்து தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய, மாநில அரசியல் கட்சிகள் எவ்வளவு நன்கொடைகளைப் பெறுகின்றன? எங்கிருந்து, யார், எவ்வளவு கொடுக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு நேரடியான அல்லது வெளிப்படையான பதில்கள் இல்லை. தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்பது குறித்து … Read more

”அண்ணா எனக்கு ரொம்ப வலிக்குது, முதல்ல கொஞ்சம் வலி ஊசி போடுங்க” – தழுதழுத்த ரிஷப் பண்ட்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஆம்புலன்ஸில் கொண்டுவரும் போது ரிஷப் பண்ட் பேசியது குறித்து பேசியுள்ளார் 108 ஆம்புலன்ஸின் மருந்தாளர். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், இன்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கினார். ரூர்க்கி அருகே முகமதுபூர் ஜாட் பகுதியில் இந்த விபத்து நடந்தது, காயமடைந்த ரிஷப் ரூர்க்கியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த கொடூரமான விபத்தில் அவர் பலத்த காயங்களுக்கு … Read more