கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டார். கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், அதில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. தேசிய கங்கை நதி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷகர் … Read more

'கிரிக்கெட் பாக்க மாட்டேன்; அவர் யாருன்னே தெரியல!' – ரிஷப் பந்த்தை காப்பாற்றியவர் பேட்டி

உத்தரகாண்ட் மாநிலத்தில், சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தை காப்பாற்றிய நபர்களில் ஒருவர், “விபத்தில் சிக்கியது ரிஷப் பந்த் என்றே தனக்கு தெரியாது,” என தெரிவித்து உள்ளார். 25 வயதாகும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், இன்று அதிகாலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்றார். டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று … Read more

5 நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை மறுநாள் முதல் கட்டாய சோதனை: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஜனவரி 1ம் தேதி முதல் சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வரும் ஜனவரி 1ம் தேதியிலிருந்து (நாளை மறுநாள்) சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியா வருவோர் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். … Read more

”ஈபிஎஸ்க்கு பொதுச்செயலாளர் எனக் கடிதமா?.. அது செயற்கையானது!” – ஓபிஎஸ் விமர்சனம்

ஈபிஎஸ்க்கு பொதுச்செயலாளர் எனக் கடிதம் ! செயற்கையாக பல்வேறு குளறுபடிகளை உருவாக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஒ பன்னீர்செல்வம், மாநில தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, ”அதிமுகவின் சட்ட விதிகளின்படி, தொண்டர்கள் இணைந்து கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனது ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடிக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியாக இளைப்பாறட்டும்” என்று தெரிவித்துள்ளார். நேபாளத்தின் பிரதமர் பூஷ்ப கமல் தஹல் ப்ரசாந்தாவும் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் … Read more

ஸ்ரீராமர் பாஜகவிற்கு மட்டும் சொந்தமில்லை; பாஜக மூத்த தலைவர் பேச்சால் பரபரப்பு.!

பாஜக ஆதரவாளர்களிடம், ‘சுற்றிப் பார்த்து எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்’ என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் உமாபாரதி, கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். ராமர் மற்றும் அனுமன் மீதான பக்தி பாஜகவிற்கு மட்டுமே சொந்தமான உரிமை அல்ல என்று, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மாநிலத்தில் ஹனுமான் கோவிலை கட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது அவர் கூறினார். மேலும் அவர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான … Read more

வைகுண்ட ஏகாதசி: கீழ் திருப்பதி- திருமலை இடையே 1,769 முறை பேருந்து சேவைகளை இயக்க தேவஸ்தானம் முடிவு

ஆந்திரா: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி கீழ் திருப்பதி – திருமலை இடையே 1,769 முறை பேருந்து சேவைகளை இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது கீழ் திருப்பதி – திருமலை இடையே தினமும் 1,100 முறை பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா திருமலை திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை இரவு முதல் ஜனவரி 11 வரை தரிசன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே திருமலைக்கு … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். தாயாரின் மறைவையத் தொடர்ந்து அகமதாபாத் விரைந்த பிரதமர் மோடி, தாயாரின் … Read more

நாளை இரவு முதல் ஜனவரி 11-வரை தரிசன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே திருமலைக்கு பேருந்தில் அனுமதிக்கப்படுவர்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: நாளை இரவு முதல் ஜனவரி 11-வரை தரிசன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே திருமலைக்கு பேருந்தில் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தரிசன டிக்கெட்டில் உள்ள குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்கும் வகையில் கீழ் திருப்பதியில் இருந்து திருமலை செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் … Read more

கர்நாடக மாநில சிறையில் சாவர்க்கர் படம் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு நிகழ்ச்சிகளிலும் இந்துத்துவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் வீர சவார்க்கரின் படம் இடம் பெறுகிறது. கடந்த 19-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸின் எதிர்ப்புக்கு மத்தியில் சவார்க்கரிடம் படம் திறக்கப்பட்டது. இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கரின் படத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. க‌ர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், வீர சாவர்க்கரின் புகைப்படத்தை திறந்துவைத்தார். பின்னர் அவர் கூறும்போது, “வீர சாவர்க்கர் … Read more