பிரதமர் மோடியின் தாயார் மறைவு – ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். தாயாரின் மறைவையத் தொடர்ந்து அகமதாபாத் விரைந்த பிரதமர் மோடி, தாயாரின் … Read more

நாளை இரவு முதல் ஜனவரி 11-வரை தரிசன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே திருமலைக்கு பேருந்தில் அனுமதிக்கப்படுவர்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: நாளை இரவு முதல் ஜனவரி 11-வரை தரிசன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே திருமலைக்கு பேருந்தில் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தரிசன டிக்கெட்டில் உள்ள குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்கும் வகையில் கீழ் திருப்பதியில் இருந்து திருமலை செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் … Read more

கர்நாடக மாநில சிறையில் சாவர்க்கர் படம் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு நிகழ்ச்சிகளிலும் இந்துத்துவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் வீர சவார்க்கரின் படம் இடம் பெறுகிறது. கடந்த 19-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸின் எதிர்ப்புக்கு மத்தியில் சவார்க்கரிடம் படம் திறக்கப்பட்டது. இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கரின் படத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. க‌ர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், வீர சாவர்க்கரின் புகைப்படத்தை திறந்துவைத்தார். பின்னர் அவர் கூறும்போது, “வீர சாவர்க்கர் … Read more

உயிரை காப்பாற்றிக்க ரிஷப் பந்த் எடுத்த முடிவு.. பகீர் தரும் சிசிடிவி காட்சிகள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் திரும்பிய போது அவரது கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். விபத்து பதிவான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது பெரும் விபத்தில் சிக்கினார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலைக்கு அருகே ஹம்மாத்பூர் ஜால் என்ற இடத்தில் அதிவேகமாக வந்த கார் டிவைடரில் மோதி கோர விபத்துக்குளானது. … Read more

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மேற்குவங்கம்: மேற்குவங்கத்தில் வந்தேபாரத் ரயில்சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் குஜராத்தில் இருந்து பங்கேற்றார். தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட நிலையில் காணொலியில் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஹவுரா – நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.ஏற்கனவே ஒப்புக்கொண்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்றுள்ளார். ஹவுரா-நியூ ஜல்பைக்குரி இடையே வந்தே பாரத் ரயில்சேவையை காணொலி மூலம் … Read more

இந்தியா: ஒரே ஆண்டில் ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துக்களில் மரணம் -அதிர்ச்சி தரும் அறிக்கை

கடந்த 2021-ஆம் ஆண்டில் நாட்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ‘இந்தியாவின் சாலை விபத்துகள் -2021’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், நாட்டில் 2021ஆம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதில் 1,53,972 பேர் உயிரிழந்து உள்ளனர் மற்றும் 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. … Read more

''கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்'' – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

கொல்கத்தா: தனது தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்த சிறிது நேரத்தில் மேற்குவங்கத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள நாட்டின் ஏழாவது வந்தே பாரத் விரைவு ரயில் வண்டியை பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) நேரடியாக தொடங்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானதைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் கலந்து … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தமது 100வது வயதில் அகமதாபாதில் இன்று அதிகாலை காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நலம் அறிந்தார். மருத்துவ சிகிச்சையால் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். ஆனால் இன்று தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் உணர்ச்சிப் பூர்வமான செய்திக்குறிப்புடன் அறிவித்துள்ளார்.இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் … Read more

ரயில்வேயை நவீனப்படுத்த ஒன்றிய அரசு சாதனை படைக்கும் வகையில் முதலீடு செய்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

காந்திநகர்: ரயில்வேயை நவீனப்படுத்த ஒன்றிய அரசு சாதனை படைக்கும் வகையில் முதலீடு செய்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்து இருக்கிறது. வந்தே மாதரத்தின் மண்ணான பெங்கால் தற்போது வந்தே பாரத் திட்டத்தை பெற்றுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

தாயின் இறுதிச் சடங்கை முடித்த கையுடன் 'வந்தே பாரத்' ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். மேற்குவங்க மாநிலத்தில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஹௌரா முதல் நியூ ஜெல்பைகுறி வரை இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று அவர் மேற்குவங்க மாநிலம் செல்வதாக இருந்தது இதற்கிடையில் இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் காலமானதை தொடர்ந்து அவர் அகமதாபாத் சென்றார். இறுதிச் … Read more