ஜனவரி 1 முதல் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் கட்டாயம்..!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம். பயணத்திற்கு முன் பயணிகள் தங்கள் பரிசோதனை … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த திங்கள்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு காய்ச்சலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிர்மலா சீதாராமன் குணமடைந்ததை … Read more

பாஜகவும் காங்கிரஸும் ஒன்று தான்; அகிலேஷ் யாதவ் சாடல்.!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் … Read more

தாஜ்மஹாலை பார்க்க வந்த வெளிநாட்டு பயணிக்கு கொரோனா: தலைமறைவானதால் பரபரப்பு

ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக வந்த அர்ஜென்டினாவை சேர்ந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். சீனாவில் புதிதாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்ட இத்தகைய வைரஸால் சீனாவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவாமல் இருப்பதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா … Read more

ராணுவ வீரர்களுக்காக 3டி தொழில்நுட்ப முறையில் அடுக்குமாடி வீடு – அசத்தும் இந்திய ராணுவம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3டி அச்சுமுறையில் முதன் முதலாக குடியிருப்பு கட்டிடத்தை இந்திய ராணுவம் திறந்துள்ளது. அகமதாபாத்தின் கண்ட் பகுதியில் 3டி அச்சு முறையில் ராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடத்தை ராணுவம் திறந்துள்ளது. மிக்காப் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ராணுவ பொறியியல் சேவை அமைப்பு, 3டி விரைவுக் கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. முப்பரிமாண தொழில்நுட்ப அச்சாக்க முறையைப் பயன்படுத்தி அடித்தளம், சுவர்கள் மற்றும் ஜன்னல் … Read more

பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான்: அகிலேஷ் யாதவ்

புதுடெல்லி: கொள்கை அடிப்படையில் பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் ஜனவரி 3ம் தேதி மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்த யாத்திரை டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்குள் செல்ல இருக்கிறது. ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை உத்தரப் பிரதேசத்திற்குள் … Read more

மகாராஷ்டிரா நடிகை தற்கொலை வழக்கு; தற்கொலை கடிதம் சிக்கியது.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது சக நடிகரான ஷீசன் முகமது கான், துனிஷாவின் தாயின் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இருவரும் காதலித்து வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு பிரிந்ததாகவும், இது துனிஷாவை தற்கொலைக்குத் … Read more

உஸ்பெகிஸ்தானில் இந்திய தயாரிப்பு இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பலி.. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் விசாரணை!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நொய்டாவைச் சேர்ந்த மரியோன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை, சுவாச நோயால் பாதிக்கப்பட்டிருந்த 21 குழந்தைகள் உட்கொண்டதில், 18 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், அதில் நச்சுத்தன்மை உடைய எத்திலீன் கிளைகால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த புகார் தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் விசாரித்து வரும் நிலையில், மருந்து தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மரியோன் பயோடெக் … Read more

பி.எப்.7 கொரோனா பரவல் எதிரொலி: 6 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம்; ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: கொரோனா ஓமிக்ரான் பிஎப்-7பரவல் உலக நாடுகளை அச்சுறுத்த்திவரும் நிலையில், பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவும் தற்போது சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், தென்கொரிய, தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவிடவேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த இணையதள பதிவேற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கும் என கூறியுள்ளார். மேலும் … Read more

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூ.1000: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

அரசின் எந்தவித உதவித் தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு வரும் பொங்கலுக்குள் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “புதுச்சேரியில், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை 2400 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதுபோல், மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை 1200 ரூபாய் … Read more