பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையிலிருந்து எப்போது டிஸ்சார்ஜ்? குஜராத் அரசு தகவல்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் தனது 99-வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னுக்கு நேற்று முன்தினம் இரவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். … Read more