அடுத்த 40 நாட்கள் முக்கியமானது ஜனவரியில் தொற்று அதிகரிக்கும்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி, : இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவல் காணப்படுகிறது. சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் பிஎப்7 கொரோனா தொற்று இந்தியாவிலும் புகுந்ததையடுத்து, ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ஒன்றிய, … Read more

"எனது வருங்கால மனைவி இப்படி இருக்கணும்…" – ஒற்றுமை யாத்திரையில் மனம்திறந்த ராகுல் காந்தி

தனக்கு மனைவியாக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என ராகுல் காந்தி மனம்திறந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி `இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் குமரி முதல் ஸ்ரீநகர் வரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது பயணம் தற்போது டெல்லி வரை சென்றுள்ளது. இந்நிலையில் மும்பையில் அவர் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் ராகுல்காந்தி. அப்போது அவர் தன்னுடைய பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா … Read more

சுற்றுச்சூழல் சார்ந்த சிறு குற்றங்களுக்கான சிறை தண்டனையை நீக்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: தொழில்செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு,தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் ‘ஜான் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) – 2022’ என்ற புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. சுற்றுச்சூழல், வேளாண்மை,உணவு, அஞ்சல் சேவை, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சில சட்டங்களின் கீழ் சிறிய அளவிலான குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தொழில் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு, சிறு குற்றங்களுக்கான சிறை தண்டனையை நீக்கவும், … Read more

சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் 7 பேர் பலி… ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நெல்லூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பேரணியில், கூட்ட நெரிசலால் ஒரு பெண் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 8 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  முன்னாள் முதலமைச்சரும், தற்போதையை எதிர்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் அரசை கண்டிக்கும் விதமாக பல்வேறு பேரணிகள், கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டுகூர் என்ற நகரத்தில் சந்திரபாபு நாயுடு நேற்று … Read more

தாயின் ஆசையை நிறைவற்றி வரும் மகன்.. இருசக்கர வாகனத்தில் இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம்..!

தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தனது தாயரை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மைசூர் போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து தமது  தாயாருடன் இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள்,மடங்கள், ஆசிரமங்களுக்கு ஆன்மீகப் பயணம் செய்து வருகிறார். கடந்த … Read more

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன; அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், ‘இந்தியாவில் சாலை விபத்துகள் – 2021’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயாரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின்தாயார் ஹீராபென், குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசிக்கிறார். 100 வயதாகும் அவருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலைசீராக இருப்பதாக மருத்துவமனைதரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. தகவல் அறிந்து மேத்தா மருத்துவமனைக்கு நேற்று மாலை சென்ற பிரதமர் மோடி, தாயாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்த டாக்டர்களிடம் தாயாரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். … Read more

புதிய வகை கோவிட் குறித்து ஏய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர் சஞ்சய் ராய் விளக்கம்..!

சீனாவில் இருந்து பரவும் பிஎப் 7 உருமாறிய கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறித்து ஏய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர் சஞ்சய் ராய் விளக்கம் அளித்துள்ளார். இந்த வகை கோவிட் பரவும் வேகம் மிகவும் அதிகம் என்று கூறியுள்ள அவர், பாதிக்கப்பட்ட ஒரு நபர்  10 முதல் 18 பேருக்கு நோய்த்தொற்றை பரப்பக் கூடும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோவிட் வந்த நபர்களுக்கும் தடுப்பூசி போட்டவர்களுக்கும் கூட இது பரவும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உலக சுகாதார … Read more

ராஜஸ்தான் பாலைவனத்தில் ஹெலிகாப்டர் சேவை: டிக்கெட் விலை ரூ.7 ஆயிரம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள சாம் மணல் குன்று பகுதிகளுக்கு செல்ல ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், தனியார் நிறுவனமும் சேர்ந்து சோதனை முயற்சியாக ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி உள்ளது.  ஜெய்சல்மாரில் உள்ள சாம்தானி பகுதியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் இயக்கப்படும். ஜெய்சல்மாரில் உள்ள பாலைவனப் பகுதிகளில் உள்ள மணல் குன்றுகள் மேல் ஹெலிகாப்டர்கள் பறந்து செல்லும். இதில்,  5 நிமிடங்கள் பறக்க ரூ. 7 ஆயிரம் கட்டணம். இதுதவிர 15 … Read more

ஜம்மு என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதி உயிரிழப்பு

ஜம்முவில் இருந்து காஷ்மீர் நோக்கிச் சென்ற ஒரு லாரியை சித்ரா பாலம் அருகில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் நேற்று சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். லாரி டிரைவர் தப்பியோடியதை தொடர்ந்து லாரியை சோதனையிட முயன்றனர். அப்போது லாரியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில்லாரி தீப்பற்றியது. தீயணைப்பு படை யினர் வந்து தீயை அணைத்தனர். பின்னர் லாரியில் கருகிய நிலையில் இருந்த … Read more